எப் எய்ட்


கடந்த பதினேழு ஆண்டுகளாக தொடர்ந்து பாகம் பாகமாக வந்துகொண்டிருக்கும் படம்.

ஒலகமே கொண்டாடும் கிரேசி மாட் ரேஸ் படம்!



பார்முலா எளிமையானதுதான்.

ரேசர்கள், விலை உயர்ந்த கார்கள், கார் ஸ்டன்ட்கள் இவ்வளவுதான்.

ஆனால் இவற்றை வைத்துக்கொண்டு பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு செண்டிமெண்ட் கதையைச் சொல்லிஇருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

ரேஸ் படங்கள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை, ஆனால் இந்த சீரிஸ் மட்டும் தொடர்ந்து அடி தூள் கிளப்புகிறது.

படத்தில் காட்சி அனுபவ உச்சம் தொடும் சில ஷாட்ஸ் உண்மையில் ரொம்ப ரொம்ப செண்டிமெண்டல்.

குறிப்பாக சூழும் நெருப்புப் புயலில் இருந்து டாம் காக்கப்படும் அந்தக் காட்சி, இந்த வரிசைப் படங்கள் ஏன் வெற்றிபெறுகின்றன என்பதை வெகு அழுத்தமாக சொல்கின்றது.

படம் திரைக்கு வந்தசில நாட்களில் தயாரிப்பு செலவைவிட இருமடங்கு லாபத்தை தந்துவிட்டது!

படத்தின் ட்ரைலருக்கே ஒரு பதிவை வெளியிட்டிருந்தேன்.

குறிப்பாக கோஸ்ட் கார். சைபர் பறக்கும் விமானத்தில் இருந்து நியூயார்க்கின் பல லெட்சம் கார்களை ஹாக் செய்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சரை தொடரவைப்பது அரங்கில் கைதட்டலைப் பெறுகிறது.

நம்மவர்களின் ரசனை மேம்பட்டிருக்கிறதுதான், ஹாக்கிங் என்பதையும், கோஸ்ட் கார்(தானே டிரைவ் செய்துகொள்ளும் கார்களை) பற்றித் தெரிந்திருந்தால்தானே ரசனை சாத்தியம்!)

கார்கள் ஜோம்பிகள் போல ரஷ்யன் அமைச்சரின் காரைத் துரத்துகின்றன.

மழைபோல வானைச் சுரண்டும் கட்டிடங்களில் இருந்து விழுகின்றன.

இந்தப் படத்தை அடுத்த தலைமுறை தீவிரவாதிகள் பாடநூலாக பயன்படுத்த பல காட்சிகள் இருக்கின்றன.

உறுமும் பலகோடி மதிப்புள்ள கார்கள், நாஸ் பொருத்தப்பட்ட சீறிப் பாயும் கார்கள் என படம் முழுதும் ஆக்சன் ரணகளம்.

இறுதிக் காட்சியில் வான், பணிப்பாலை, நீருக்கு அடியில் என மூன்றுகட்ட தாக்குதல்.

எப்படி யோசிக்கிறார்கள் என்பதுதான் வியப்பு.

படத்தில் சில அடடே

படம் ஷூட் செய்யப்பட்ட லொகேஷன்கள், ஹவானா,  நியூயார்க், ஜெர்மனி, ஐஸ்லாண்ட் என பல்வேறு லொக்கேஷன்களில் படமாயிருக்கிறது. 

ஸ்காட் ஈஸ்ட்வுட், கோட் போட்ட பூனைக்குட்டி மாதிரி வந்து போகிறார். கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் மகன் என்றால் யாரும் நம்பவே  மாட்டார்கள்.

வேறு யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத பாத்திரம் அது. டம்மி பாத்திரம் ஒன்றில் ஒரு சூப்பர் ஸ்டாரின் மகன்  நடிக்கிறார் என்பது வியப்பு. அதுவும் டப்பிங்கில் வயிற்று தசைகளை சிரித்தே கிழிந்து போகுமாறு வசனங்கள்வேறு.

டேய் இவன பிளாச்சுலாக்கின்னு கூப்டுங்கடா, பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் எனும் டைமிங் வசனங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

அஜீத் பேசுவது போல வண்டில இருக்க எஞ்சின் இல்ல யாரு அத ஓட்டறாங்கன்றதுதான் மேட்டர் எனும் வசனம்.

நோபடி மகிழ்ச்சி என்று கபாலிபுகழ் வாரத்தையை சொல்லும் பொழுதும் விசில் பறக்கிறது.

அதே போல ரோமன் பாத்திரம்  சிறப்பு, மிகச்சிறப்பு என்று சொல்லும் பொழுதும்.

பல படத்தின் தமிழ் வசனங்களை எடுத்தாண்டிருக்கிறார்கள்.

பல இடங்களில் வசனத்திற்காவே கைதட்டல், யாருப்பா அந்த வசனகர்த்தா?

ஆமாம், இன்னும் இரண்டு இன்ஸ்டால்மென்ட்களில் இந்தப் படம் வர இருக்கிறது! F9 மற்றும் F10!

இப்போதைக்கு F10தான் கடைசி என்கிற அறிவிப்பு இருக்கிறது.

விநியோகஸ்தர் காட்டில் மழை, வேறு என்ன?

தொடர்வோம்

அன்பன்
மது

Comments

  1. நீண்ட நாட்களுக்கு அப்புறம் தியோட்டருக்கு சென்று பார்த்த படம் காலை நீட்டி படுக்கும் வசதி கொண்ட சேர் என்பதால் படம் பார்க்கும் போது இடையில் சீறிது நேரம் கண் அசந்துவிட்டேன் நானும் குழந்தையும் இரவு 11.30 மணி ஷோ சென்று பார்த்தோம் நம்ம முடியாத ப்ல காட்சிகள் இருக்கின்றன என்றாலும் ஆங்கிலப்படம் என்பதால் பார்த்து ரசிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே கிரீன் மேட் வித்தைகள்தான் இருந்தாலும் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.

      ரசிக்கிற மாதிரி, கொண்டாடுகிற மாதிரி படம் செய்ய இந்த குழுவிடம் கற்க வேண்டும்.

      Delete

Post a Comment

வருக வருக