முகநூல் இற்றைகள் fb status


1
கொதிக்கும் தார் ரோட்டில் நிர்வாணமாய் சில விவசாயிகள் போராடும் படத்தை நண்பர் ராம் வசந்த் பகிர்ந்திருந்தார்.
தார் ரோட்டில் நிர்வாணமாய்க் கிடப்பது அதுவும் டெல்லியின் வெயிலில் என்பது தூக்கிவாரிப்போட்டது.
அச்சேதின் ஆயேகா

பின்னூட்டங்கள்
பேசுவோம் வாங்க சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்
2 April 10 at 8:37pm

Palanivelu Velu போராட்டம் வீரியமாக உள்ளது.ஆனால் அதன்கோரிக்கையில் திடமில்லை. நதிகளை இணையுங்கள் என்ற கோரிக்கை முதன்மையானதாக இருந்திருந்தால் இந்தப்போராட்டம் இன்னுமொரு ஜல்லிக்கட்டாக உருமாறியிருக்கும். ஆனால் இந்த விவசாயிகளின் இந்த நிலைக்குக்காரணமான தமிழ்நாட்டுக்கொள்ளைக்காரர்களான தி.மு.கவும் அ.தி.மு.கவும் நேரில் வாழ்த்துதெரிவித்தார்களோ அதை இந்தவிவசாயிகள் குனிந்துநெளிந்து ஏற்றுக்கொண்டார்களோ அன்றைக்கே இவர்களின் போராட்டம் மக்கள் மன்றத்தில் மழுங்கிபோய்விட்டது.ஓரு வகையில் நாம் கர்வம்கொள்ளலாம் தமிழர்கள் போராட இனி பயம்கொள்ளமாட்டார்கள் என்று.
 5 · April 10 at 8:43pm

Yoga Pandian உண்மை
Like · Reply · April 10 at 10:12pm

Selladurai Kanagaraj தெளிவான கருத்து பதிவு 

Thala Balu பிரதமர் ஆதி யோகி என்று எண்ணிவிட வாய்ப்புகள் அதிகம்***

2
திரைப் பாடல்களில் தமிழை இவ்வளவு அழகாக கையாள முடியும் எனக் காட்டி வியக்க வைத்தவர் கலாப கவிஞர்
ஆனால் ஏனோ அவருக்கு தேசிய விருது மட்டும் மறுக்கப்பட்டே வருகிறது..
அவருக்கு விருது கொடுப்பது விருதுக்கு நியாயம் செய்வதே ஒழிய அவருக்கு ஒன்றும் பெரிய விசயம் கிடையாது.
குறையாண்மை பேசுவோருக்கே விருது என்பது வெட்கக்கேடானது
#கவிஞர்_தாமரை
3
அம்மா பூஸ்ட் போட்டிங்களா ?
பால் ஜோரா இருக்கு !
ஆமா,
நல்ல பூஸ்ட் போட்டேன்.
அது என்ன நல்ல பூஸ்ட் ?
நாட்டு சர்க்கரை
#நிலாச்சோறு சர்க்கரைக்கு நன்றிகள்












Comments

  1. கவிஞர்_தாமரை அவர்களின் கருத்து சரி தான்...

    ReplyDelete
  2. வேதனை தோழர்

    ReplyDelete

Post a Comment

வருக வருக