கல்ச்சர் ஷாக்
என்ன அற்புதமான ஒளிப்பதிவு, இசை, அருமையான ஒலிப்பதிவும் கூட.
அழகான ஹீரோயின், அழகான ஹீரோ
இவ்வளவு இருந்தும் ஒரு படம் திருப்தி இல்லாமல் போகுமா?
அது உங்கள் ரசனையையும் கலாச்சார சார்புகளையும் பொருத்தது.
தன்னை மட்டுமே சிந்திக்கும் வருண், அவனை ஆதர்சமாய் நேசிக்கும் காதலி லீலா.
வருண் யுத்த விமானத்தின் பைலட் என்றால் லீலா ஒரு டாக்டர்.
எதிர் துருவங்களான இருவருக்கும் வரும் காதல் மோதல் இவைதான் கதை மற்றபடி பறக்கும் விமானங்கள், பாகிஸ்தான் சிறை என்பதல்லாம் தேவையே இல்லாத ஆணிகள்தான்.
இந்தியாவின் ஆகப்பெரும் இயக்குனர் என்கிற பெயரை எப்படியெல்லாம் சிதைக்கலாம் என்பதற்கான சீரிய முயற்சியாகத்தான்படுகிறது.
ஏன் இப்படி என்றால் விமானக் படைவீரனின் காதல் இதற்கு முன்னர் பல படங்களில் வந்துவிட்டது. டாம் க்ரூஸை உச்ச நட்சத்திரமாக்கிய டாப் கன் வெகு நுட்பமாக விமானப் படை சவால்களை, விபத்துகளைச் சொல்லும்.
மணி இதைப்போன்ற விசயங்களில் எல்லாம் கவனம் செலுத்தவில்லை.
பறக்கும் விமானங்களை லாங் ஷாட்டில் காண்பிப்பது மட்டுமே போதும் என்று முடிவு செய்துவிட்டார்.
இந்தப் போர்சனே தேவையில்லா ஆணி. விவரிப்பு இல்லை என்றால் என்ன சிகைக்கு பைட்டர் பைலெட்; பைட்டர் பைலெட் என்று நூல் விடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இளங்கோ கிருஷ்ணன் வேறு திரைமொழி அருமை என்று சொல்கிறார். உண்மைதான் திரை மொழி அருமையாக இருந்து என்ன புண்ணியம். கெட்ட கெட்ட வார்த்தையாக பேசுகிறதே.
படத்தின் முதல் வசனத்திலேயே சினாப்சிஸ் சொல்லிவிடுகிறார்.
எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?
முதல் குழந்தை பெற்றதற்கு பிறகு என்கிறான் வருண்.
மருத்துவமனையில் இமைகளை பிரித்துப் பார்க்கும் லீலாவைப் பார்த்ததுடன் பழைய காதலியைப் பிரிகிறான்.
லீலாவிற்கு நூல் விட்டு, எல்லாம் முடிந்த பின்னர் கைவிடுகிறான். ஒரு பறத்தலில் பாக் சிறைக்கு செல்ல உயிரோடு இருக்கிறானா அல்லது போய்ச் சேர்ந்துவிட்டானா என்று தெரியாமலேயே அவன் பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள் லீலா.
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் பாணியில் பாக் சிறையில் இருந்து தப்பிவரும் ஹீரோ அவளைத் தேடிக் கண்டடைந்து சரண் புக
படம் சுபம்.
இப்போ படத்தை யார் யார் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
காதல் படம். இளைஞர்கள் கொண்டாடாமல் வேறு என்ன செய்வார்கள்?
படம் நெடுக வரும் காதல் பகுதிகள் உண்மையிலேயே அழகு.
ஆனால் காதல் வசனங்களை ரசிக்கும் அதே வேளையில் அது கொண்டு நிறுத்தும் சங்கடப்புள்ளிகளையும் கொண்டாத்துடன் பதிவு செய்கிறது படம்.
தனது அண்ணனின் திருமணத்திற்கு காதலியை அழைத்துச் செல்லும் ஹீரோ நிறைமாச கர்ப்பிணியை தன் அண்ணன் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் பெண் என்று அறிமுகம் செய்கிறான்.
வீட்டில் வெகு இயல்பாக மது புழங்குகிறது.
சூழல் ஒரு ஹை பை அப்பர் மிடில் கிளாஸ் குடும்பதை காட்டுகிறது.
அண்ணன் நிறை மாதத்தில் திருமணம் செய்ய தம்பி தனது மகளை மூன்று வருடம் கழித்து பார்த்து பிறகு திருமணம் செய்கிறான்.
இந்தப் படம் தமிழகத்தில் வசூல் குவித்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றைத்தான்.
நம்மைச் சுற்றி இப்படி நிகழத் துவங்கி நாளாகிவிட்டது என்பதே அது.
காதல், காமம், கூடல், ஊடல், தேடல் குறித்த படங்கள் எத்தனையோ இருக்க காற்று வெளியிடை அந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
செம காண்டில் இருக்கேன்.
ஏன் ?
அலைபாயுதே அப்போது பெருநகர்களில் மட்டுமே நிகழ்ந்த சில திருமணங்களைப் பற்றி பேசியது.
பதிவுத் திருமணம் செய்து கொண்டு காதலிப்பது, பின்னர் கரம்கோர்ப்பது, படம் வெளிந்த சில ஆண்டுகளில் பெரு நகர்களில் மட்டுமே நிகழ்ந்த ரிஜெஸ்ட்டர் ஆபிஸ் காதல்கள் இன்று குக்கிராமங்கள் வரை பரவிவிட்டது.
சினிமாவின் விளைவு இதுதான்.
இனி நிறைமாதக் காதலிகள் தங்கள் காதலர்களைக் கரம் பிடிக்கக் கூடும் என்கிற கலாசார பாய்ச்சலை இந்தப் படம் துவைக்கி வைத்திருக்கிறது.
எனது கலாச்சரா சார்பு நிச்சயம் பிற்போக்கானது, பெருநகர்களில் இப்படி நிகழ்வதை திரையில் காண்பிப்பது கிராமங்கள் வரை எதிரொலிக்கும் என்கிற விசயம் புரிந்ததால், ஏற்கனவே பல சிறார் கர்பங்களை குறித்த செய்திகள் வரும் இந்த வேளையில் இந்தப் படம் தேவையா?
மணி புடுங்கிய ஆணிகளில் தேவையில்லா ஆணி காற்று வெளியிடை.
அன்பன்
மது
பிகு.
ஆஸ்கர் விருது பெற்ற முதல் எல்.ஜி.பி.டி படமான மூன்லைட் குறித்துகூட எளிதாக எழுத முடிந்தது. ஆனால் காற்று வெளியிடை என்னை ரொம்பவே சங்கடப்படுத்தியது.
ஹிப்போஹிரட்டிக்காக இல்லாமல் படம் காதலை குறுக்காகவும் நெடுக்காகவும் வெட்டிக் காட்டியிருக்கிறது என்று கொண்டாடும் ரசிக கண்மணிகள் வாழ்க, வேறு என்ன சொல்வது.
இளைஞர்களை தவறான வழித்தடத்திற்கு மாற்றிவிடக் கூடியப் படமாக இருக்கிறது
ReplyDeleteஇந்தியாவின் பெரிய இயக்குநர் இவர்
இளைஞர்களை நல் வழிப் படுத்துவதை விட்டுவிட்டு,
தவறான வழிமுறைகளை போதிப்பது தவறல்லவா?
பதிவுத் திருமணம் செய்து கொண்டு, யாருக்கும் சொல்லாமல், அவரவர் வீட்டில் நல்ல பிள்ளைகள் போல் இருந்து,பின் செய்தி வெளியாகி, பெற்றோர்களை பரிதவிக்கவிட்ட ஒரு ஜோடியை நான் அறிவேன்
எல்லாம் படம் படுத்தும் பாடு
உங்கள் ஆதங்கம் இப்போது எனக்குள்ளும்...
ReplyDeleteபடம் எடுக்கிறேன் என்று பல தேவையில்லாத விஷயங்களைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் மனதில்!
என்ன சிகைக்கு? :)
நன்றி சகோ
Deleteஅடுத்த சீரழிவின் ஆரம்ப படம்...
ReplyDeleteஆமாம்
Deleteஇவர்கள் எல்லாம் சமூகத்தை சீரழிக்க வந்தவர்கள்...
ReplyDeleteஅலைபாயுதே சொன்னதைவிட அபத்தம் ஓகே கண்மணியில்... லிவிங் டூகெதர்...
இப்ப இதில் புள்ள பெத்துக்கிட்டு.... அடுத்து...?
சரியான விமர்சனம்.
நண்பர் மது,
ReplyDeleteபடம் நான் பார்க்கவில்லை. பொதுவாக மணி ரத்னம் படங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ஆனால் இந்தப் படம் என்னை கவரவில்லை.
அதுசரி, உங்களிடம் ஒரு கேள்வி,
ஆணும் ஆணும் மோகம் கொள்ளும் தன்பால் உறவை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனை கொண்ட நீங்கள் ஆணும் பெண்ணும் தாலி கட்டிக்கொண்ட பின்தான் குடும்பம் நடத்தவேண்டும் என்று சொல்வது முரணாகத் தோண்றவில்லையா? இதில் பதை பதைக்க என்ன இருக்கிறது? தன்பால் உறவே தவறில்லை என்றாகிவிட்ட போது இதுபோன்ற பத்தாம் பசலி நம்பிக்கைகள் மட்டும் மாறாது போலும். இப்போது மட்டும் கலாச்சாரம், பண்பாட்டு இத்யாதி பேசவிழைவீர்கள்..... வேடிக்கைதான்.....
யு ஹாவ் காட் எ பாயிண்ட்
Deleteசமீபகாலங்களில் மணிரத்தனத்தின் படங்கள் ஈர்க்கவில்லை. காரணம் கதையோ கருவோ அல்ல...ஆனால் ஏனோ ஈர்க்கவில்லை...ரோஜாவின் அழகை அவரது பிற படங்கள் மிஞ்சவில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து...
ReplyDeleteகீதா
உண்மைதான் தோழர்
Deleteநல்லாயிருக்கே....காரிகன் சொல்வது ! தங்கள் பெண் பிள்ளையை குழந்தை பெற்ற பிறகு திருமணம் முடிக்க எந்த பெற்றோராவது சம்மதிப்பார்களா? இந்த வேசித்தனத்தை யார் ஏற்பார்கள்? சும்மாவே இளைஞர்கள் தறி கெட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி படம் வந்தால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல ஆகி விடாதா?
ReplyDeleteசினிமாவில் எதையும் எளிதாக காட்டி விடலாம். நிஜம் ....ரொம்பவே சுடும். யார் குடும்பத்திலாவது இப்படி நடந்தால் பெண்ணைப் பெற்றவர் கூனிக் குறுகி நடக்க வேண்டி வரும். மணிரத்தினத்திற்கு ஏற்படும் அரிப்பு ஆசையெல்லாம் சினிமாவாக காட்டிக் கொண்டார். அவ்வளவுதான்! வயதில் மூத்த இயக்குனர் காசு பார்க்கும் நோக்கில் இளைஞர் மனதில் விஷம் பதித்திருக்கிறார்.
நம் மண்ணில் நம் நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் ஜீரணிக்க முடியாத விஷயங்களாகத்தான் இன்றும் பார்க்கப் படுகின்றன. வெளிநாட்டு கலாச்சாரத்தில் ஊறி வரும் இளைஞர்களுக்கு இப்படி வழி காட்டினால் இன்னும் சீர்கேடான நிலைக்கு போவதற்குத் துணிவார்கள்.
திரை மொழி எல்லாம் அழகாய் இருந்து என்ன பயன்? சொல்ல வந்தது 'A ' சமாச்சாரம். தேவையற்ற வேண்டாத முரணான கருத்து. நாகரீகமான ' எக்ஸ் ' .
ஆம், பார்த்துவிட்டீர்களா ?
Deleteமுற்போக்கு என்ற பெயரில் எந்த சீர் கேட்டையும் நியாயப் படுத்த முடியும்
ReplyDeleteஆண், குழந்தை பெறுபவனாக இருந்தால் அப்படி சொல்லி இருப்பானா?
வாய்புகள் இருக்கிறது என்றே தோன்றுகிறது
Deleteதிருவாளர் மணி அப்படி ஒரு ரகம்
வருகைக்கு நன்றி அய்யா
என்ன சுஹாஷினி உங்களுக்கு விமர்சிக்க அனுமதி தந்துட்டாரா? :)
ReplyDeleteமணிரதனம் படங்களில் ஈர்ப்பு குறைந்துவிட்டது. காதல், லிவ்-இன் டுகெதெர், கல்யாணம் பண்ணாமல் குழந்தை பெற்றுக்கொள்ளுதல்னு எதையாவது "பெருசா" சொல்றதுதான் இவர் இன்றைய திறமை. போரடிக்கிது மது. நெட் ஃப்ளிக்ஸ்லதான் காதல் கண்மணி பார்த்தேன். அதே ரொம்ப சுமாராத்தான் இருந்துச்சு. இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலம் முடிந்த போது கொண்டாடிய மணி விசிறி எல்லாம் இன்னைக்கு மணிக்கும் சரக்கு தீர்ந்துடுச்சுனு ஒத்துக்கிட்டா நம்ம எங்கேயோ போயிருப்போமே? தனக்குனு வந்துட்டா பேசும் விதமே வேற மாதிரி இருக்குமே? என்ன பண்ணுறது..
பாலசந்தர், பக்யராஜ், பாரதிராஜா மாதிரி இப்போ மணிரதனம் நிலைமை..
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தை நாம் கற்றுக்குவோம்.
வெகு நாட்களுக்கு பிறகு...
Deleteசந்தித்ததில் மகிழ்வு வருண்
அகத்தியன் கோகுலத்தில் சீதைக்கு பிறகு காணமல் போய்விட்டார் ..
ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருத்தப்பட்டேன் ..
ஆனால் மணி பேசாமல் படம் எடுப்பதை நிறுத்தியிருக்கலாம்
கருந்தேள் ராஜேஷ் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் பாருங்கள்