மனுஷ்ய புத்திரன் குறித்து ஒரு பெண் கவிஞர் பாகம் இரண்டு

பதிவின் முதல் பாகம்

சித்தென்னா வாசல் இலக்கியச் சந்திப்பு அமைப்பு முன்னெடுத்த மனுஷ்ய புத்திரனின் கவிதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்வின் அனுபவப் பகிர்வு.



புதுகை இலக்கிய வட்டத்தில், சுரேஷ் மான்யா என்று அறியப்பட்டிருக்கும் அதிதீவிர வாசகர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என பல்வேறு இலக்கியதளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நண்பரின் முன்னெடுப்புதான் சித்தென்னா வாசல் இலக்கியச் சந்திப்பு.


உண்மையில் தமிழ் இலக்கிய உலகில் தங்களது முத்திரையை ஆழப்பதிக்கப் போகும் இளம் இலக்கிய அணியின் ஒரு முன்னோடி சுரேஷ் மான்யா.

சச்சின், தூயன், வியாபி கார்த்திக் போன்ற அதிதீவிர வாசகர்களும் படைப்பாளிகளும் நிறைந்தது இவரது இலக்கிய அணி. உண்மையை சமரசமின்றி சொல்லப் போனால் தங்கள் பள்ளிப் பருவத்தில் பல்வேறு கல்விச் சாதனைகளைச் செய்த மூளைக்கார கூட்டம்! தூயனின் பெயர் அவர் பயின்ற பள்ளியின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இருக்கிறது. இதைப் பார்த்தவுடன்தான் ஆகா இந்த க்ரூப் கொஞ்சம் விவகாரமான சாரி சாரி விவரமான குரூப் என்று முடிவு செய்தேன்.

அதீதமாய் வாசிப்பதுதான் இந்தக் குழுவை இலக்கியத் தளத்தில் இயங்க வைக்கிறது.

இப்படிப்பட்ட புரிதலுடன் இருந்ததால்தான் இவர்களால் நடத்தப்பெரும் கூட்டத்தை தவறவிடக்கூடாது என்று நான் ஆஜர் ஆனேன்.

மனுஷ்ய புத்திரனுக்கு புகழ் மாலை சூட்டும் கூட்டம் என்பது அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது.

அருமை தோழர் சூர்யா சுரேஷ் புலரின் முத்தங்கள் பற்றி பேசச் சொன்னால் மனுஷ்ய புத்திரனைக் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று உன்மத்தம் அடைந்த நிலையில் பேசினார்.

மேடையில் இருந்து இறங்கியவுடன் போன் செய்து பிடி என்று பிடித்தேன்.

நான் எதிர்பார்த்து புலரின் முத்தங்கள் குறித்த ஒரு ஆழமான உரை. உரையின் ஆழம் குறைவாக இருந்ததுதான் நான் அவரைக் உரிமையுடன் கடித்ததின் காரணம். பள்ளித்தோழர் என்பதால் அந்த உரிமை எனக்குண்டு.

எல்லாம் நன்றாகத்தான் போனது.

அதிகமாய் எதிர்பார்க்கப்பட்ட அந்த பெண் கவிஞர் எழுந்து மைக்கைப் பிடிக்கும்வரை!

தொடர்வோம்

அன்பன்

மது

Comments

  1. மைக்கைப் பிடிக்கும்வரை!அடுத்து ?....காத்திருக்கிறேன் :)

    ReplyDelete

Post a Comment

வருக வருக