கவிஞர் கிரேஸின் பாட்டன் காட்டைத் தேடி என்கிற கவிதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவ பகிர்வு.
மரபுக் கவிதைகளின் காதலி, சங்க இலக்கியப் பாக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவரும் தனித்துவமிக்க தமிழ்த் தொண்டர் கிரேஸின் இரண்டாவது தொகுப்பு.
பொதுவாக பெண்கள் மழை, நிலா, வானம், காதல் என அதீத அளவுகளில் ஏற்கனவே புனையப்பட்ட கருப்பொருள்களைத்தான் எடுத்துக் கொள்வார்கள் எனும் கருத்தை இந்த தொகுப்பு தகர்த்திருக்கிறது.
சாய்கின்ற மரங்களுக்கு மட்டுமல்ல வாழ்வில் எந்தத் தருணத்திலும் வீழ்ச்சிகளைச் சந்திக்கிற ஆளுமைகளை காணும் போதேல்லாம் எதிரொலிக்கும் "சாயும் மரம்" எனும் கவிதை.
இவர் கவிதைகளின் கருப்பொருள்கள் சுற்றுச்சூழல், நதிநீர் மேலாண்மை, சூழல் மாசுபாடு என்று பிற பெண்கவிஞர்கள் தொடத் தயங்கும், ஏன் தொட விரும்பாத கருப்பொருள்களை போற்றுகின்றன கவிதைகளை.
தீவிரமாய்ச் சுதந்திரம் பேசும் விதையின்றி காடா கவிதையோடு விடுதலை நாள் கொண்டாட்டங்கள் மிட்டாய்களோடு அல்ல கயவர் உயிர் கொய்து நிகழ்த்தப்படவேண்டும் என காத்திரமாய் உறுமும் கவிதையும் உண்டு தொகுப்பில்!
புயலை ஒரு கவிதை ஆற்றுப்படுத்தினால், இன்னொரு கவிதை சட்டினி சாட்சியாய் விரிகிறது.
கவிஞரின் அதீத சங்கத்தமிழ் பழக்கம் கவிதைகளில் வருவதால் அவை காலத்தால் கொஞ்சம் பிற்பட்டவை போல தெரிந்தாலும் சமகால சமூக அவலங்களைச் சாடுவதிலும், சூழல் மாசுபாடுகளைக் நிறுத்துவது குறித்தும் வெகு அழுத்தமாய் பேசுகின்றன.
கட்டாயம் கேட்கப்பட வேண்டய கவிதைகள்.
வாழ்த்துகள் கவிஞர் கிரேஸ் பிரதீபாவிற்கு!
அடுத்த தொகுப்பு இன்னும் அசத்தலாய் வரட்டும்.
வாழ்த்துக்கள் சகோ.
அன்பன்
மது.
சில எடுத்துக்காட்டுக்களை தந்திருக்கலாமே நண்பரே!
ReplyDeleteஇருமொழிப் புலமை கொண்டவர்களின் எழுத்துக்கள் என்றுமே மேலானவையாக இருக்கும் என்பது என் அனுபவமும் கூட.
- இராய செல்லப்பா நியூஜெர்சி
பல எடுத்துக்காட்டுகளே தந்திருக்கலாம் ...
Deleteஇனி சரி செய்து கொள்கிறேன்
அருமை தோழரே விவரிப்பு வாழ்த்துகள் சகோ கிரேஸ் பிரதிபா அவர்களுக்கு....
ReplyDeleteத.ம. 1
நன்றி தோழர்
Deleteவாழ்த்துக்கள் கிரேஸ் ..
ReplyDeleteவணக்கம் அண்ணா.
ReplyDeleteமுதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், வெகு தாமதமாய் இங்கு வருவதற்கு. மன்னியுங்கள் அண்ணா, சூழ்நிலை அப்படியாக்கிவிட்டது.
உங்கள் விமர்சனப் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா. சொல்லப்போனால் நூல் வெளியிட்ட சில நாட்கள் உங்கள் விமர்சனத்திற்குக் காத்திருந்தேன். ஆனால் நீங்கள் எழுதிய சமயம் பார்க்க முடியாமல் போயிருக்கிறது, வருத்தமாக இருக்கிறது அண்ணா. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி
வாழ்த்திய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்
ReplyDelete