தி பிரஸ்டிஜ் The Prestige (2006)

கிறிஸ்டபர் நோலன் படங்கள் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெசல்.

அதில் பிரஸ்டீஜ் ஜோர் ரகம்.

மேடை மந்திரவாதிகளுக்கு இடையே நடக்கும் தொழிற் போட்டியில் அவர்களது மந்திரவித்தைகளின் பின்னணியை நுட்பமாக சொல்லும் படம்.

ஹூஜ் ஜாக்மென், கிறிஸ்டியன் பேல் என இரண்டு மெகா ஸ்டார்கள் படத்தின் பலம்.


இருவருக்கும் இருக்கும் தொழில் போட்டியே படம் முழுதும், நட்போடு இல்லாமல் பழிதீர்க்கும் வன்மத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் அழிக்க முற்படுவது படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.


நாற்பது மிலியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்டு நூறு மிலியன் டாலர்களை வாரிக் குவித்தது படம்.


ஆஞ்சியர் மற்றும் போர்டன் எனும் இரு இளைஞர்கள் மில்டன் எனும் முன்னணி மந்திரவாதியிடம் இருக்கிறார்கள். மில்டன் தண்ணீர்தொட்டி மந்திர காட்சிக்கு பெயர்பெற்றவர். கைகளைக் கட்டி தண்ணீருக்குள் இறங்கி வேறொரு இடத்தில் இருந்து வெளிவரும் வித்தை அது.

தண்ணீருக்குள் கைக்கட்டோடு இறங்குவது ஜூலியா, ஆஞ்சியரின் மனைவி.

போர்டன் அவள் கைகளைக் கட்டி தண்ணீருக்குள் இறக்கிவிடுகிறான்.

மந்திரம் தப்பி, கைக் கட்டை அவிழ்க்க முடியாது இறந்து போகிறாள் ஜூலியா.

ஆன்ஜியரின் முழுக் கோபமும் போர்டனின் மீது திரும்புகிறது.

சில மாதங்களில் இருவரும் தனி நிகழ்சிகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் ஒருவரின் நிகழ்ச்சியில் ஒருவர் தலையிட்டு நிகழ்சிகளைச் சொதப்புகிறார்கள்.

மேலும் மேலும் வன்மம் வளர்கிறது.

போர்டனின் வெற்றிகரமான மந்திரவித்தையில் ஒன்று ட்ரான்ஸ்போர்டெட் மான்.

மேடையின் இரண்டு மூலைகளில் இருக்கும் தொடர்பில்லா பெட்டிகளில் ஒன்றில் நுழைந்து இன்னொன்றில் வெளிவருவதே நிகழ்ச்சி.

படத்தின் அதி முக்கியமான திருப்பத்தை இந்த வித்தைதான் செய்கிறது.

இதன் வெற்றியைக் கண்ட  ஆஞ்சியர் விஞ்ஞானி டெஸ்லாவைத் தொடர்பு கொண்டு தனக்கு ஒரு கருவியை வடிவமைத்துத்தர கோருகிறான்.

டெஸ்லா வெற்றிகரமாக ஒரு கருவியைத் தயாரித்துத்தர அந்தக் கருவியைக் கொண்டு ஆஞ்சியர் வெற்றிகரமான வித்தைக்காரனாகிறான்.

ஆனால் இன்னொரு எதிர்பாரா  பிரச்னை வருகிறது.

அது என்ன என்பதுதான் சுவாரஸ்யம்.


கூல் பாக்டர்

விஞ்ஞானி டெஸ்லா மற்றும் அவரது ஆய்வகம்.

எடிசனின் ஆட்கள் அவரைத் துரத்தி துரத்தி அடிப்பது. (பன்னாட்டு நிறுவனங்கள் போட்டியாளர்களை எப்படி கையாளும் என்பதை உணரவைத்த காட்சி)

படத்தின் அதி முக்கியமான விசயமாக டெஸ்லா பார்ட்டைத்தான் நான் சொல்வேன்.


வாவ் படம்

படங்கள் மீது மரியாதையும், தொடர் ரசனையும் உருவாக்கும் படைப்பு.


மிஸ் பண்ணக்கூடாத படங்களில் ஒன்று.


அன்பன்
மது 

Comments

  1. நல்ல அறிமுகம்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  2. பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது தோழரே விமர்சனம்.
    த.ம. 2

    ReplyDelete
  3. நண்பர் மது,

    கிறிஸ்டபர் நோலனின் படங்களை நான் விரும்புவதன் காரணம் ஒரே படம்தான். The Prestige. Memento கூட கொஞ்சம் அயற்சியான முயற்சி. ஆனால் பிரெஸ்டீஜ் வாவ் ரகம்.

    படத்தின் அந்த மர்மம் நூற்றாண்டு சினிமாவில் புதிது.

    டெஸ்லா பற்றி சொல்லியிருந்தது கண்டு மகிழ்ச்சி. டெஸ்லா பற்றி ஒரு நீண்ட பதிவே எழுதலாம். அத்தனை ஆச்சர்யங்களை தனக்குள் அமைதியாக அடக்கிவைத்திருந்தவர்.

    இந்தப் படத்தில் டெஸ்லா வாக நடித்திருந்தவர் ராக் இசையின் பிரபலங்களில் ஒருவரான David Bowie.

    இந்தப் படம் குறித்த திகைப்பும் வியப்பும் எனக்கு எப்போதும் குறையாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மேலதிக தகவல்களுக்கு நன்றிகள் இசைப்பதிவரே

      Delete
  4. தொடர்ந்து ஆங்கிலப் பட விமர்சனமாக எழுதித் தள்ளுகிறீர்கள் நண்பரே
    படம் பார்க்கும் அளவிற்குத் தொடர்ந்து நேரம் கிடைக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. இந்தப் படத்தை பார்த்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு

      Delete
  5. நோலன் பற்றி கேள்வி பட்டுள்ளேன் ,அவர் படத்தைப் பார்க்கும் பேறு இன்னும் கிடைக்கவில்லை :)

    ReplyDelete
    Replies
    1. இன்டெர் ஸ்டெல்லார் இன்னுமா பார்க்ல

      Delete

Post a Comment

வருக வருக