இன்றைய தினங்களில் கவிதை என்பது வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியக்கூடாது. ஒரு சின்ன முடிச்சை போட்டு அதை வாசிப்பில் அவிழ்த்து மகிழ்வதே சவாலான வாசிப்பாக இருக்கிறது.
என் ஆறாவது
விரல் வழியே
சிலுவையிலிருந்து
வழிகிறது ரத்தம்,
என் மாம்சம்
வார்த்தை ஆகிறது
மேற்கண்ட வரிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் 1987ம் ஆண்டு பால்வீதி தொகுப்பில் வந்தது. கவிதை வெளியில் ஒரு புதுப் பாய்ச்சலை கவிக்கோவின் வரிகள் ஏற்படுத்திய அதே வேளையில் பலரும் கோவின் உடல் வரிகளைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ள எளிதில் புரிந்துகொள்ள முடியாத கவிதைகள் அணிவகுக்க ஆரம்பித்தன
//என் ஆறாவது
விரல் வழியே//
என்ற வரிகளைப் புரிந்துகொள்ள நமக்கு ஆறாவது விரல் கவிஞரின் பேனா என்கிற புரிதல் வேண்டும். இல்லாவிட்டால் காதல் படத்தில் கிளைமாக்சில் இர்ர் இர்ர் என்று கத்திக்கொண்டு ரோட்டில் திரியும் பரத் போல ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.
கவிதைகள் வாசிப்பு சவாலாகத்தான் இருக்க வேண்டுமா?
அவை ஒரு குழந்தையின் எளிய புன்னகையாக நம்மை ஆகர்சிக்கவேண்டாமா?
ஒரு பொக்கை வாய்ப்புன்னகைக்கு நாம் உயிரையே எழுதித்தந்து விடுவோமே!
கவிதைகளில் இந்த இலகுத்தன்மை இனி வரவே வராதா என்கிற நிலையில் பெரும் ஆறுதலாய் வந்த தொகுப்புதான் கவிஞர் தங்கம் மூர்த்தியின் தேவதைகளால் தேடப்படுவன்.
நிலவுகள் பூக்கும் பூமி என்கிற தலைப்பே பல காப்பியங்களைச் சொல்ல கவிதையோ நம் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.
கானகம் கடவுளாகும் அற்புதத்தை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே புலரும் கலை மெட்டாபிசிகள் உயரங்களை வெகு இலகுவாக தொடுகிறதைப் பார்க்கிறோம்.
நீண்ட காத்திருப்பிற்கு பிறகு வரும் நண்பன் நெகிழ்ச்சியான புன்னகையை நம் முகத்தில் தருவிப்பது போல கவிஞரின் கவிதைகள் நம்மை ஈர்க்கின்றன.
நிறங்கள் எனும் கவிதை பகிரும் அழுத்தத்திற்குட்பட்ட நகர வாழ்க்கைப் படிமம் ஒரு வலியை நமது மனங்களில் விளைவிக்கிறது.
தலைப்பு வேண்டுமானால் தேவதைகளால் தேடப்படுபவன் என இருந்தாலும் எல்லாக் கவிதைகளும் காதலையும், வாழ்வின் கொண்டாட்டங்களை மட்டுமே பேசவில்லை.
ஒரு கவிதை இதயத்தின் காதலை, வெளிச்சத்தை, இருளை, தகிப்பை, மருளை நமக்கு இந்த தொகுப்பு துல்லியமாக அறிமுகம் செய்கிறது.
மின்தூக்கிகளை விட சக்திவாய்ந்த தன்தூக்கிகள் குறித்து பேசும் கவிதை காலத்தின் குறுநகை.
//குழந்தைகள்
விரல் நீட்டிக் காட்டும்
வானவில்லுக்கு
ஆயிரம் வண்ணங்கள்.//
என ஒரு கவிதை குழந்தையை கொண்டாட , அவர்கள் மீது நாம் கட்டவிழ்க்கும் வன்முறையை படம் பிடிக்கிறது இன்னொரு கவிதை.
பற ...பற...
அம்மா
ஒரு சிறகையும்
அப்பா
மறு சிறகையும்
இறுகப் பிடித்துக் கொண்டு
குழந்தைக்கு
அறிமுகப் படுத்துகிறார்கள்
வானத்தை
இப்படி நான் ரசித்த கவிதைகளை பகிர வேண்டுமானால் முழுத்தொகுப்பையுமே பகிர வேண்டியிருக்கும் .
எனவோ நட்பூஸ்
தொகுப்பை வசித்து உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.
அன்பன்
மது
வாவ்... செமத்தி விமர்சனம்
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே
நன்றி
நல்ல அறிமுகம். நன்றி நண்பரே. புத்தகம் வாசிக்க நினைத்திருக்கிறேன் - உங்கள் அறிமுகம் நன்று.
ReplyDeleteஉண்மைதான். கவிதை என்பது எளிதில் புரிவதாகவும் வியந்து வாசிப்பதாகவும் இருக்க வேண்டும். கவிதைகளில் பொய்கள் இருந்தாலும் நயமான கற்பனைகள் அதனை காணாமல் செய்து விட வேண்டும். கடினப்பட்டு புரிந்து கொள்ள முயற்சிப்பதெல்லாம் கவிதைகளா?
ReplyDeleteகவிரசனையுடன் விமரிசனம் அருமை.
ReplyDelete