சேலம் மாநகரில் விதைக்கலாம் அமைப்பின் முதல் கன்று
இருப்பினும் புதியோருக்காக
விதைக்கலாம் புதுகையில் இளைஞர்களால் மேதகு கலாம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
ஒவ்வொரு ஞாயிறும் ஐந்து மரக்கன்றுகளை நடுவதுதான் நோக்கம்.
பசுமையை நேசிக்கும், மாற்றத்தை முன்னெடுக்கும் விழைவுள்ள இளம் இதயங்கள் ஒன்றிணைந்து கடந்த ஒன்றரை வருடங்களாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை தொள்ளயிறது ஐம்பது கன்றுகளை நடவு செய்திருக்கிறோம்.
இந்த ஞாயிறு இயக்கத்தின் மிக முக்கியமான நாள்.
ஆம், சேலத்தில் விதைக்கலாம் இயக்கத்தின் கிளை ஒன்று செயல்படத் துவங்கிய நாள் 16/04/2007.
புகைப்படக் கலைஞர் திரு. சந்தோஸ் ராஜ் சரவணன் அவர்களின் பொறுப்பில் இன்று சேலத்திலும் விதைக்கலாம் தனது கிளையைப் பரப்பியது. புதுகையில் இருந்து மலை, பாக்கியராஜ், திரு, கார்த்திக், பசுமை வெறியர் குருமூர்த்தி என ஒரு பெரும் குழு முதல் நிகழ்விற்காக சேலம் சென்றது.
அதே நேரத்தில் புதுகையில், தோப்புப்பட்டியில் ஏழு மரக்கன்றுகளை அய்யனார் கோவில் வளாகத்தில் நாங்கள் ஒரு குழுவாக நட்டோம்.
நல்ல பணிகள், சமூகப் பொறுப்புள்ள பணிகள் இளம் தலைமுறையால் சாத்தியமாவது மகிழ்வு.
அமைப்பின் தன்னார்வலர்களில் ஒருவர் திரு.குருமூர்த்தி ஆறுமுகம், அமைப்பின் பதாகையை வரைந்த பொழுது.
விரியட்டும் கிளைகள்.
ஆறுமாதங்களுக்கு முன்னர் சிறு கன்றுகளாக அமைப்பு நட்டுவைத்த கன்றுகள் தோப்புக்கொல்லை பகுதி கிராமத்தினரால் அக்கறையோடு பராமரிக்கப்பட்டு, இன்று ஆள் உயரக் கன்றுகளாக நிற்கின்றன, அருகே திரு.வசந்த்
வசந்த், நாகு,சிவா, பாஸ்கர், திரு, கார்த்திகேயன் உடையப்பன், சுகந்தன், ராமதாஸ் போன்ற தன்விழைவு கொண்ட அர்பணிப்பாளர்கள் அமைப்பு கண்டெடுத்த முத்துக்கள்.
மலை இவர்கள் குறித்து விரிவாக எழுத இருப்பதால் ஒரு சுருக்கமான அறிமுகமாக முடித்திருக்கிறேன்.
அன்பன்
மது
பி.கு ஆலங்குடியில் இருந்து சந்தியா என்கிற எட்டாம் வகுப்புச் சிறுமி விதைக்கலாம் அமைப்பின் கிளையைத் துவக்க அனுமதி கோரியிருக்கிறார்.
சூப்பர்
ReplyDeleteநன்றி
Deleteஅனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteவிதைக்கலாம்.... கிளைகள் பெருகட்டும்....
ReplyDeleteகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி, தோழர் இது உழைக்கும் பெரும் குழுவிற்கு கிடைத்த அங்கீகாரம்
Deleteநல்லதொரு விஷயம் மரக்கன்றுகளை வழங்குவதும் பராமரித்து அவற்றின் வளர்ச்சியை தொடர்ந்து கவனிப்பதும் ..தொடரட்டும் இத்தகைய நற்பணிகள் ..வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோ
Deleteவாழ்த்துகள் அனைவருக்கும்!! விதைகள் பரவட்டும்! பூமி செழிக்கட்டும்!!
ReplyDeleteநன்றி வாத்தியாரே
Delete