நீங்கள் என்பது மூன்று பேர்!


நீ உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால்
இந்த உலகத்தில்  போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல்
நீ வாழலாம்



கெத்தை விடாதே
நீ கெத்தை விடாதே
ஏறுனாலும் மாறினாலும்
கெத்தை விடாதே

 என்று இன்றைய தலைமுறை பாடினாலும் அடிநாதம் என்னவோ சுயம் அறியும் பயணம்தான்.

உன்னையே நீ அறிவாய் சாக்ரடீஸ் சொன்னது அதி முக்கியமான விசயம் அல்லவா.

ஏன் நம்மை அறிய வேண்டும்?

நாம் யார் என்று நமக்குத் தெரிந்தால், நமது பலம் என்ன என்பது தெரிந்தால், நமது பலவீனம் பற்றிய புரிதல் இருந்தால் வாழ்க்கை ஒரு நதி போல ஓட ஆரம்பிக்கும் இல்லையா?

தன்னை அறிதல் பயிற்சியில் அடிக்கடி சொல்லப்படும் விசயம் திரீ யூ.

நீங்கள் என்பது மூவர்.

ஆம், நாம் ஒவ்வொருவருக்கும் மூன்று பிம்பங்கள்.

நாம் நம்மைப் பற்றி மனதில் என்ன நினைத்திருக்கிறோம்?,
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?,
நமது செயல்கள் நமது மனபிம்பத்தை வெளிப்படுத்துகிறதா?

ஆனந்த் தான் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.
அவரது வாசகர்கள்  அவரை அப்படியே நினைக்கிறார்கள்.
அவருடைய எழுத்து உண்மையிலேயே அற்புதமாக இருக்கிறது.

ஆக, ஆனந்தின் மூன்று பிம்பங்களும் சமநிலையில் இருக்கின்றன. இவர் வாழ்க்கையும் ஆனந்தம்தான்.


மாறாக அவரது வாசகர்கள் அவரை நான்காம்தரமான எழுத்தாளர் என்று நினைத்தால் ஒருமைநிலை கெட்டுவிடுகிறது. .

இது அவருடைய ஆளுமையும், செயல்பாடுகளையும் பாதிக்கும்.

அப்போ என்ன செய்யலாம் ஆனந்த்,

இரண்டு வாய்ப்புகள்

ஒன்று எழுதுவதை நிறுத்திவிடுதல்

இரண்டு தனது பாணியை, வார்த்தை வங்கியை, தொடர்ந்து உழைத்து செழுமைப்படுத்திக் கொண்டு தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராக மாற்றிக்கொள்ளுதல்.

தேர்வு ஆனந்த்துடையதுமட்டுமல்ல!

தொடர்வோம்

அன்பன்
மது 

Comments

  1. சுருக்கமாக எனினும்
    மிகச் சரியான அருமையான விளக்கம்
    ஆர்வமுடன் தொடர்கிறோம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  2. என்னைப் பொறுத்தவரை : பத்து பேர்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் அது டைம் மேனஜ்மென்ட்டில் வரும்

      Delete
  3. அருமை தோழரே.. தொடர்கிறேன்

    ReplyDelete
  4. நீங்கள் என்பது மூன்று பேர்! நல்லதொரு பகிர்வு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.

    ReplyDelete
  5. வித்தியாசமான சிந்தனை. ஆனாலும் உண்மை அதுவே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவரே

      Delete
  6. அருமை... தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.குமார்

      Delete
  7. நமது அனைவருக்குமே .மிக அருமையான பதிவு அனைவரும் சுய ஆராய்ச்சி செய்ய உதவும்

    ReplyDelete
  8. பதிவின் ஆரம்பத்தில் பாடுவது திண்டுக்கல் தனபாலன் போல அல்லவா இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆகா
      டைப் பண்ணும் பொழுது அவரைத்தான் நினைத்தேன்

      Delete
  9. #ஒன்று எழுதுவதை நிறுத்திவிடுதல்#
    அதெப்படி முடியும் ?உள்ளே இருக்கும் குருவி தூங்க விடாதே :)

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா தொடர்க அய்யா

      Delete
  10. நல்ல பதிவு...எல்லோருமே தன்னை ஆராய்ந்து தன்னை அறிந்து கொள்ளுதல் நலம்தான்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக