கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2

சி.ஜி ஹோலிப்பண்டிகை.

அத்துணை வர்ண கலாட்டாக்கள். ஹீரோயினே பச்சைக்கலர்,  ஊதாக் கலர், வில்லி ஆயிஸா தங்கமுலாம் பூசப்பட்டு.



ரெகுலர் ஆங்கில சூப்பர் ஹீரோப்படம் என்று உள்ளே போனால் சராசரி ரசிகர்கள் டரியல் ஆகிவிடுவார்கள்.

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் தொழில்நுட்பக் கொண்டாட்டமாக வந்திருக்கிறது படம்.

கதாபாத்திரங்களே வண்ணமயமாக இருந்தால், பின்னணி அதைவிட கலாட்டா, ஒரே வர்ண ஜாலம்.

கார்டியன்ஸ் முதல் பாகம் வெகு அழுத்தமான கதையோடு வெளிவந்து வசூலில் சக்கைப்போடு போட்டது.

இரண்டாம் பாகம் முதல்பாகம் அளவு அழுத்தம் உள்ள கதையில்லை என்றாலும் சிலமுறை பார்க்கலாம்.

இது சிஜி ஹோலி கொண்டாட்டம்.

கதை அறிவியலில் மிக முன்னேறிய ஒரு காலகட்டத்தில்  நடப்பதால் நம்ம ஆட்களுக்கு பின்தொடர்வது கொஞ்சம் சவால்தான்.

என்ன நாயகன் பீட்டர் குயில் தனது தந்தையைச் சந்திக்கிறான். அவனது தந்தை ஒரு செலஸ்டியல், கடவுள் நிலையில் இருக்கும் அவர் தனெக்கென ஒரு கிரகத்தை உருவாக்கிஇருகிறார்.

அந்த கிரகத்தின் அழகிய கட்டிடங்களும், இயல்பும் வாவ் என அசத்துகின்றன. இந்த நிலையில் தனது மகன் பீட்டர் குயில் ஏகேஏ ஸ்டார் லார்ட்டை தனது வாரிசாக பயிற்சி கொடுக்கிறார்.

என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கதையில் எதிர்பாராத  திருப்பமாக யாண்டு நல்லவனாகிறான். இதற்கு ஸ்டாலோன் இவனை மிரட்டியது ஒரு காரணமாக இருந்தாலும் ரொம்ப காலமாக கெட்டவன் வேஷம் போட்ட ஒரு நல்லவன் என்பது படம் முடியும் பொழுது தெரிகிறது.

படத்தின் அசத்தும் இரண்டு கதாபாத்திரங்கள் என்றால் ராக்கெட் என்கிற ராக்கூன் மற்றும் பேபி க்ரூட்.

படத்தின் துவக்கத்தில் பேபி க்ரூட்  (விண்டீசல்) ஆடும் ஆட்டமும் அதன் களேபர பின்னணியும் செமை.

யாண்டுவின் விசில் கொலைகள் அசத்தும் வர்ண கலாட்டா.

அதே போல பாம் வைக்கும் காட்சியில் அசத்தும் க்ரூட் சோ கியூட்.

ராக்கெட் ஒரு சோதனையின் காரணமாக அற்புததிறன்களைப் பெற்ற ஒரு ராக்கூன்.

ஆனால் மனிதர்கள் போல பேசும், அறிவியல் கருவிகளை உருவாக்கி கையாள்வதில் அசத்தும். குறிப்பாக விண்கலத்தை செலுத்துவதில் எக்ஸ்பர்ட்.

இந்த பாகத்தின் கதாநாயகனே ராக்கெட்தான்.

ட்ராக்ஸ், கொமோரா, ராக்கெட், பேபி க்ரூட் மற்றும் பீட்டர் குழுவில் எதிர்பாராவிதமாக இரண்டு புதிய மெம்பர்கள்.

கடந்த பாகத்தில் அடிவாங்கி சிதைந்த நெபுலா, கடந்த பாகத்தில் விசிலடித்து கொல்லும் வில்லன் யாண்டு.

இந்தக் கோடையில் தவறவிடக் கூடாத படங்களில் இதுவும் ஒன்று.

1969இல் காமிக்ஸ் உலகில் அறிமுகமான கதாபாத்திரங்கள், 2017ல்  தியேட்டரில் வசூல் செய்வது தான் ஆச்சர்யம். 

மூன்றாம் பாகமும்  தயாராகிக்கொண்டிருகிறது. 

காத்திருக்கேன் 

அனபன்
மது 

Comments

  1. வணக்கம்
    விமர்சனத்தில் சொல்லிய கதைக்கருவை படித்த போது பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. விமர்சனத்திற்கு நன்றி தோழர்.

    ReplyDelete
  3. பார்க்க ஆசைப்பட்ட படத்தைப் பற்றிய பகிர்வினைக் கண்டேன். நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக