தமிழர்க்கு வேட்டி கட்ட சொல்லித்தந்ததே ஆரியர்தான், தமிழர்க்கு என எந்த மெய்யியலும் இருந்ததில்லை என்று அடித்து பேசி போங்காட்டம் ஆடும் ஊடக பெருச்சாளிகள், போலி வரலாறு புனையும் சங்கரமட சனாதனிகளுக்கு இந்தக் கட்டுரைத் தொகுப்பு சமர்ப்பணம்.
ஆசிவகம் என்கிற பெயரை எனக்கு முதலில் சொன்னவர் சீ.ஆ. மணிகண்டன், தமிழ் தேசிய செயல்பாட்டாளர், எங்கள் சந்திப்பின் பொழுதுதான் மணி வீரப்பன் திட்டத்தினால் சிறையில் இருந்து விடுதலை அடைந்திருந்தார்.
உங்களுக்கு ஒரு நூலைத் தருகிறேன் படியுங்கள் என்று சொன்னார்.
ஆனால் சில ஆண்டுகள் கழித்து எனக்கு ஆசிவகம் குறித்த நூலைத் தந்தவர் மகா சுந்தர்.
பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்ட நூல்.
சித்தன்னவாசல் குறித்த அவரது பார்வை ஒரு வியப்பு.
அவரது கருத்துப் படி சித்தன்னவாசல் ஒரு ஆசிவகத் தலம். ஏனைய ஆய்வாளர்கள் கூறுவது போல ஒரு சமணத்தலம் அல்ல!
இப்படி பல்வேறு விசயங்களை அறிமுகம் செய்த நூல் அது.
விரிவாக எழுத நினைத்திருந்து தள்ளிப் போன வேளையில் ஊமைக்கனவுகள் தளத்தில் வெகு விரிவாக ஆசிவகம் குறித்த தகவல்கள் வர ஆரம்பித்திருக்கிறது.
ஆசிவகம் பின்னர் வைணவ மதத்தில் ஈர்த்து செரிக்கப்பட்டது.
இதைத்தான் கஜேந்திர மோட்சம் என்று சொல்கிறார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஏன் என்றால் நான் ஒரு ஆசிவகன்.
முன்னோர்களின் குல தெய்வக் கோவில்கள் மிகச் சரியாக இந்தப் புள்ளியை நோக்கி என்னை தள்ளுகின்றன.
என்று எழுதப்போகின்றேன் என்று தெரியவில்லை.
தற்போது ஊமைக் கனவுகள் தளத்தில் கணினித் தமிழ்க் கதிரோன் ஜோசப் விஜூ அவர்களால் பகிரப்பட்ட பதிவுகளின் தொகுப்பு இது.
http://oomaikkanavugal.blogspot.com/2016/10/blog-post_12.html
http://oomaikkanavugal.blogspot.com/2016/10/blog-post_19.html
http://oomaikkanavugal.blogspot.com/2016/10/2.html
http://oomaikkanavugal.blogspot.com/2017/04/3.html
http://oomaikkanavugal.blogspot.com/2017/05/4.html
நண்பர் கணினித் தமிழ்க் கதிரோன் ஜோசப் விஜூ அவர்களின் கட்டுரைகளைப் படித்து வியந்து வருகின்றேன் நண்பரே
ReplyDeleteநன்றி
வணக்கம்
ReplyDeleteநன்றாக சொல்லியுள்ளீர்கள் நானும் படித்தேன்...சிந்திக்க வேண்டிய விடயம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் தோழரே ஊமைக்கனவுகள் தளத்திலும் படித்து வருகிறேன் தாங்களும் எழுதுங்கள் ஆவலுடன்...
ReplyDeleteத.ம.
ஆசிவகம் இதுவரை அறிந்திராத சமயம். விரைவில் விரிவாய் எழுதுங்கள்.
ReplyDeleteஆசிவகம் பற்றி ஊமைக்கனவுகள் தளத்தில் சகோ எழுதுவதைத் தொடர்கிறோம். சுவாரஸ்யமாக இருக்கிறது.
ReplyDeleteகீதா: ஆம்...ஆசிவகம் வைணவம் சொல்லுவது போல் இருந்ததால் எனக்குப் பல ஐயங்கள் எழுந்தது ஆசீவத்திலிருந்துதான் தழுவல் என்பதை உங்கள் பதிவு சொல்லுகிறது. அப்போ அ கஜேந்திர மோட்சக் கதைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ன? ம்ம்ம்...விஜு சகோ அடுத்து தொடரும் போது இன்னும் பல விளங்கும்....எத்தனை தகவல்கள் நாம் அறியாதது...
கட்டுரைகளைப் படித்து பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டிருக்கிறேன்
ReplyDeleteஜோசப் விஜூ அவர்களின் கட்டுரைகளைப் படித்துப் பயன்பெறலாம். அத்தனையும் சிறந்த ஆய்வுகள்
ReplyDelete