இடஒதுக்கீடு அவசியமா? தோழர் கொண்டல் ராஜ் அவர்களின் பதிவு



நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டாலும் சரி, மருத்துவ உயர்படிப்பு பற்றி பேசினாலும் சரி இன்னுமா இடஓதுக்கீடு முறை வேண்டும் தகுதியின் அடிப்படையில் எப்போதுதான் மாறப்போகிறீர்களென்று உயர்குடி மக்களின் சார்பாக இன்னும் தெளிவாக சொல்வதென்றால் பார்ப்பனர்களின் குரலாக சில இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்கள் இப்போது சத்தமாக கேட்கிறார்கள்.



அவர்களுக்கு ஒன்றும் மட்டும் புரியவே மாட்டேங்குது. இடஓதுக்கீடு இருக்கும் இந்த காலத்திலும் கூட அரசு கல்வி நிறுவனங்களிலும் சரி, நீதிபதி பதவிகளிலும் சரி ஏன் இன்னும் சொல்லப்போனால் அரசின் உயர்பதவிகளிலும் இன்னும் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு மத்திய அரசு பதவிகள் (Group A , B, C ) மொத்தம் 19,71,350 பேர் இதில்
SC = 17.31%
ST = 7.51%
OBC = 19.53%
FC = 55.65% (மக்கள் தொகையில் வெறும் 3% இருந்துகொண்டு பாதிக்கும் மேலான இடங்களை எடுத்துக்கொள்கிறார்கள்)
அடுத்து சென்னை ஐ.ஐ.டியில் எடுத்துக்கொள்ளுங்கள் பேராசியர்கள், உதவி பேராசியர்கள் என மொத்தம் 536பேர் இருக்கிறார்கள் இதில்
SC= 2.05% (11பேர்)
ST=0.37% (2பேர்)
OBC = 11.01% (59பேர்)
FC= 86.57% (464பேர் பார்ப்பனர்கள்)
இந்திய அளவிலுள்ள 13( IIM) ஐ.ஐ.எம் களின் 7லில் மட்டுமே உருப்படியான கணக்குகள் இருக்கிறது அதிலும் இடஓதுக்கீடு முறை சுத்தமாக இல்லை 7ஐ.ஐ.எம்களின் Faculty க்கள் மொத்த எண்ணிக்கை 233 இதில்
SC = 2
ST = 0
OBC =6
FC = 225
இப்படியாக 3% பேர் எல்லா அரசுத்துறைகளையும் இட ஓதுக்கீடு எனும் முறை அமலில் இருக்கும்போதே அபகரித்திருக்கும் சூழலில் இடஓதுக்கீடே இல்லையென்று சூழல் இருந்தால் இந்த 3%பேர் தான் எல்லா வேலை வாய்ப்புகளிலும் இருப்பார்கள். அந்த நிலையைத்தான் இடைநிலை சாதிக்காரர்களாகிய நீங்கள் விரும்புகிறீர்களா?
- தோழர் கொண்டல் சாமி
Kondal Samy

Comments

  1. இட ஒதுக்கீட்டில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது என்பதை வசதியாக பலரும் மறந்து விடுகிறார்கள்.இவர்கள் தங்களுக்கு போட்டியாளர் தங்கள் ஜாதிக்காரர்கள் தான், என்பதை புரிந்து கொள்வதே கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. ஆம், அய்யா
      வருகைக்கு
      நன்றி அய்யா

      Delete

Post a Comment

வருக வருக