குழந்தைகள் விடுமுறையில் ஒரு பாட்டைப் பாடிக்கொண்டே இருந்தனர்.
லெட் இட் கோ...
எனக்குமே பிடித்த பாடல்
டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட ப்ரோசன் படத்தின் பாடல்.
பாடலின் வரிகளும் அசத்தல் என்றால் படமாக்கிய விதமும் அற்புதமாக இருக்கும்.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு மொழிபெயர்ப்பை முயன்றேன்.
முகடுகளில் வெண்பணி ஒளிரும் இன்றிரவு
ஓர் காலடித்தடமும் காணாது
தனிமையின் பேரரசு
பேரரசின் அரசி நான்
ஊளையிடும் ஊதல் உள்ளே சுழலும் இந்தப் புயலைப் போலவே
உள்ளே அடங்காமல்
வானகம் அறியும் என் முயற்சிகளை
அவர்களை உள்ளே விடாதே
அவர்களைப் பார்க்க விடாதே
எப்போதும் போல நல்லவளாகவேயிரு
மறைத்துக்கொள், வருந்தாதே
அவர்கள் அறியவேண்டாம்
போகட்டும் அவர்களுக்கும்தான் தெரியுமே
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
இனிமேலும் அடக்கமுடியாது
போகட்டும் விடு, போகட்டும் விடு
வேறுபுறம் திரும்பு, கதவை அடி
கவலைகள் வேண்டாம்
அவர்கள் என்ன சொல்வார்கள்
புயல் ஆர்ப்பரித்து வீசட்டும்
குளிர் என்னை ஒன்றும் செய்யாது
வேடிக்கைதான் தொலைவு எப்படி
எல்லாவற்றையும் சிறிதாக்கிவிடுகிறது
தவறோ, சரியோ, விதியோ எனக்கில்லை
நான் விடுதலையானவள்
ஒருகாலத்தில் எனைஅசைத்த அச்சங்கள்
நெருங்குவதுகூட இல்லை
இது என்னால் என்ன முடியும் என்று பார்க்கும் நேரம்
எல்லைகளை சோதிக்கவும் தகர்த்து சாதிக்கவும்
இல்லையா
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
நான் காற்றோடும் வானோடும் கலந்தேன்
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
இனி ஒருபோதும் நான் அழுவதை நீ பார்க்க முடியாது
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
இங்கே நிற்கிறேன் இங்கே இருப்பேன்
வீசட்டும் புயல் ஆர்பரித்து
என் சக்தி காற்றில் பாய்ந்து நிலத்தில் பரவுகிறது
எங்கெங்கும் என் ஆன்மா பணிவடிவங்களில் சுழல்கிறது
என் ஒரு எண்ணம் பணிவெடியாய் வெடிக்கிறது
ஒருபோதும் என் கடந்த காலத்திற்கு போகமாட்டேன்,
கடந்த காலம் கடந்த காலமே
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
நான் விடியலின் ஒளிக்கீற்றாய் எழுவேன்
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
அடக்கஒடுக்கமான பெண் போய்விட்டாள்
இங்கே நான் ஒளிநிறைந்த பகலில் இருப்பேன்
வீசட்டும் ஆர்பரிக்கும் புயல்
மூலப் பாடல் கீழே கானொளியில் .
லெட் இட் கோ...
எனக்குமே பிடித்த பாடல்
டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட ப்ரோசன் படத்தின் பாடல்.
பாடலின் வரிகளும் அசத்தல் என்றால் படமாக்கிய விதமும் அற்புதமாக இருக்கும்.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு மொழிபெயர்ப்பை முயன்றேன்.
முகடுகளில் வெண்பணி ஒளிரும் இன்றிரவு
ஓர் காலடித்தடமும் காணாது
தனிமையின் பேரரசு
பேரரசின் அரசி நான்
ஊளையிடும் ஊதல் உள்ளே சுழலும் இந்தப் புயலைப் போலவே
உள்ளே அடங்காமல்
வானகம் அறியும் என் முயற்சிகளை
அவர்களை உள்ளே விடாதே
அவர்களைப் பார்க்க விடாதே
எப்போதும் போல நல்லவளாகவேயிரு
மறைத்துக்கொள், வருந்தாதே
அவர்கள் அறியவேண்டாம்
போகட்டும் அவர்களுக்கும்தான் தெரியுமே
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
இனிமேலும் அடக்கமுடியாது
போகட்டும் விடு, போகட்டும் விடு
வேறுபுறம் திரும்பு, கதவை அடி
கவலைகள் வேண்டாம்
அவர்கள் என்ன சொல்வார்கள்
புயல் ஆர்ப்பரித்து வீசட்டும்
குளிர் என்னை ஒன்றும் செய்யாது
வேடிக்கைதான் தொலைவு எப்படி
எல்லாவற்றையும் சிறிதாக்கிவிடுகிறது
தவறோ, சரியோ, விதியோ எனக்கில்லை
நான் விடுதலையானவள்
ஒருகாலத்தில் எனைஅசைத்த அச்சங்கள்
நெருங்குவதுகூட இல்லை
இது என்னால் என்ன முடியும் என்று பார்க்கும் நேரம்
எல்லைகளை சோதிக்கவும் தகர்த்து சாதிக்கவும்
இல்லையா
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
நான் காற்றோடும் வானோடும் கலந்தேன்
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
இனி ஒருபோதும் நான் அழுவதை நீ பார்க்க முடியாது
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
இங்கே நிற்கிறேன் இங்கே இருப்பேன்
வீசட்டும் புயல் ஆர்பரித்து
என் சக்தி காற்றில் பாய்ந்து நிலத்தில் பரவுகிறது
எங்கெங்கும் என் ஆன்மா பணிவடிவங்களில் சுழல்கிறது
என் ஒரு எண்ணம் பணிவெடியாய் வெடிக்கிறது
ஒருபோதும் என் கடந்த காலத்திற்கு போகமாட்டேன்,
கடந்த காலம் கடந்த காலமே
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
நான் விடியலின் ஒளிக்கீற்றாய் எழுவேன்
அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
அடக்கஒடுக்கமான பெண் போய்விட்டாள்
இங்கே நான் ஒளிநிறைந்த பகலில் இருப்பேன்
வீசட்டும் ஆர்பரிக்கும் புயல்
மூலப் பாடல் கீழே கானொளியில் .
நல்லதோர் மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றிகள்
Deleteபாடலைக்கேட்டேன், பதிவைப் படித்தேன். நன்றி.
ReplyDeleteசெல்ல மகள்கள் முனுமுனுக்கும் பாட்டு ..
Deleteஎனக்கும் பிடித்த பாடல்
அதோடு எல்லோரும் பார்க்கும் வண்ணம் ரசிக்கும் வண்ணம் இருந்ததால் பதிந்தேன்..
நன்றி
நல்லாயிருக்கே லெட் இட் கோ ..அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
ReplyDeleteசெம! கலக்குறீங்க கஸ்தூரி!! பாராட்டுகள்! மீண்டும் சிறு பிள்ளையானோம்...!!!
ReplyDeleteகீதா: மகனுடன் பார்த்ததுண்டு...மீண்டும் இப்போது கேட்டி மகிழ்ந்தேன்...மிகவும் பிடித்த பாடல்...