கவிதை எப்போது பிரவகிக்கிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டிருகின்றன.
அற்புதமான கவிதைகள் எழுகிற பொழுது கவிஞர்கள் வேறு ஒரு உலகில் நடமாடுகிறார்கள் என்பதே உண்மை.
ட்ரான்ஸ் என்று சொல்வார்கள்.
கிராமத்தில் திருவிழாவில் சில பெண்கள் சாமி ஆடுவார்களே அது போல.
திடுமென பேராழி ஒன்றில் மூழ்கிய அனுபவம் அது.
மீண்டவர்கள் கவிமுத்தை எடுத்து வருகிறார்கள்.
மீரா செல்வக்குமாரின் சின்னவள் கவிதைத் தொகுப்பை படித்த பொழுது இப்படித்தான் தோன்றியது.
காதலிக்கு கவிதை எழுதியே கவிஞர் பட்டம் வாங்கியோர் மத்தியில் மீராவின் சின்னவள் ஒரு ஆச்சர்யமான வித்யாசம்.
ஆம், தமது இளையமகள் குறித்த நினைவுகளையும், அவளது அருகாமை தந்த மன மலர்ச்சிகளையும் கவிதையில் வடித்திருக்கிறார்.
கல்விக்காக தன்னைப் பிரிந்து, சென்னையில் இருக்கும் தனது மகள் குறித்த நினைவுகளின் கவிதை வார்ப்பு இந்த தொகுப்பு.
இந்த ஒரு காரணத்திற்காகவே தனித்து நிற்கிறது. தொகுப்பின் அத்துணைக் கவிதைகளும் சின்னவளின் சேட்டைகள், அவளது அன்புப் பரிமாறல்கள் என்று கமருகின்ற ஞாபகங்கள்.
அருமையான வாசிப்பனுபவத்தை தரும் கவிதைகள்.
உயிராடை
நேற்றைய
ஒரு வெளியூர்
பயணத்தின் இடையே
என்ன உடை வேண்டுமென்றேன்
எனக்கொன்றும்
வேண்டாம்
நல்லதாய்
உனக்கெடுத்துக்கொள்
என்கிறாள்
என்கிற கவிதையில் விரிகிற சித்திரம் தகப்பனை ஒரு தோழனாக கருதும் சின்னவளை அதை ரசிக்கும் கவிஞரை நமக்கு அறிமுகம் செய்கிறது.
சிக்காத பட்டாம் பூச்சிகளாய்த் திரியும் வார்த்தைகளை சின்னவள் என்கிற ஒற்றைச் சொல் சிக்க வைக்க கவிஞருக்கு கவிதை வசமாக என்னைப் பெத்தவளே என்கிறார் மகளை.
படிக்கச் சென்ற மகளுக்கு இப்படி ஒரு கவிதை தொகுப்பு சாத்தியமா என்கிற நம்பமுடியாக் கேள்வி நம்மை துரத்திக்கொண்டே இருக்க தொகுப்பின் பக்கங்களில் எல்லாம் நிரம்பி இருக்கிறது சின்னவளின் தகப்பன் பிரியம்.
நிச்சயம் இது தமிழின் குறிப்பிடத்தகுந்த தொகுப்புத்தான்.
தனது இளைய மகளின் பிறந்தநாள் பரிசாக இந்தத் தொகுப்பைக் கொடுத்த கவிஞரும், அவரது நோக்கமறிந்து விரைந்து அச்சிட்டுக் கொடுத்த காகிதம் பதிப்பகம் மனோ பாரதிக்கும் வாழ்த்துகள்.
அபியும் நானும் போல சின்னவளும் செல்வாவும்...
வாழ்த்துகள் செல்வா
அன்பன்
மது
அழகான விளக்கவுரை தோழரே கவிஞருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி தோழர்
Deleteஅருமை... இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி தோழர்
Deleteமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநல்லதொரு நட்பு உங்களுக்கு வாய்த்தமைக்கும் வாழ்த்துகள்
நன்றி சகோ
Deleteமுகநூலில் இந்நூலைப் படித்துக்கொண்டிருப்பதாகக் கூயிருந்ததைப் பார்த்தேன், தற்போது அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். கவிஞருக்குப் பாராட்டுகள். உங்களுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி முனைவரே
DeleteArumai......nalla vimarsanam
ReplyDeleteபெயரிலேயே மீராவைக் கொண்டிருக்கும் பாசமிக்க அப்பாவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி :)
ReplyDeleteநன்றி அய்யா
Deleteதந்தை மகள் நட்பு காலமெல்லாம் தொடரட்டும் ..சின்னவள் சிறந்தவள்
ReplyDelete