ஒரு வேளாண் ஆய்வாளர் தனது இற்றை ஒன்றில் யன்படுத்தியிருந்த பதம் என்னைக் காயப்படுத்தியது ...
"நம்மாழ்வாரிய மூடர்கள்" எனும் பதம்தான் அது.
சமயங்களில் படித்த துரோகியாக இருப்பதைவிட மூடராக இருப்பது எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.
ஆமாம், நம்மாழ்வார் என்ன செய்துவிட்டார்?
ஒரு எளிய விதையில்தான் பெரும் மரம் துவங்கும்.
நம்மாழ்வார் எங்களின் எளிய விதை.
அவர் இல்லை என்றால் இயற்கை விவசாயம் என்று எங்கள் இளம் தலைமுறை பேசியிருக்காது.
மென்பொருள் துறையை விடுத்தது வேளாண்மை செய்ய வந்திருக்காது.
அவர் இரத்தத்தையும், ஆன்மாவையும் கரைத்து பயணித்த, பாதையில்தான் இன்று அவரது எண்ணற்ற சீடர்கள் பயணிக்கிறார்கள்.
மருத்துவர்.சிவராமன் பேசினால் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். நம்மாழ்வார் தளம் அமைத்துத் தந்திருக்கவிட்டால் நமது பெரியாஸ்பத்திரி மருந்தாளுனரே சிவராமன் அவர்களின் பேச்சை வெற்றுப்பேச்சு என்று சொல்லியிருப்பார். நாமும் ஆமோதித்திருப்போம்.
உரமிடா விவசாயம் (ஆர்கானிக் பார்மிங்) இவ்வளவு பிரபலமாக யார் காரணம்?
இயற்கையை நேசிக்கும் ஒரு பெரும் தலைமுறையை உருவாக்கியவர் அய்யா நம்மாழ்வார்.
தஞ்சை டெல்டாவில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டம், சர்வதேசமும் திரும்பிப் பார்த்த ஜல்லிக் கட்டுப் போராட்டம், இன்றைய நெடுவாசல் போராட்டம், சூறையாடப்படும் மதுக்கடைப் போராட்டம், என அத்துணைப் போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணி ஐயா தந்த விழிப்புணர்வின் தொடர்ச்சிதான்.
நம்மாழ்வார் தம் ஆயுள் முழுதும் கரைத்து உருவாக்கிய தளத்தை ஒருகாலும் இழந்துவிடமாட்டோம்.
அவரை பின்பற்றுவது மூடத்தனம் என்றால்
அய்யா நாங்கள் மூடர்களாகவே இருக்கிறோம்.
நீங்கள் அறிவாளிகளாகவே இருங்கள்.
படித்த பட்டம் பெற்ற, ஹார்வர்டில் ஆணி புடுங்கியோர் அரசியலில் என்ன செய்து கொண்டிருகிறார்கள் என்று பார்க்கும் எவரும் படிக்காத மேதை காமராஜை நன்றியுடன்தான் நினைத்துப் பார்ப்பார்கள்.
அதே போல நாளைய சமூகம் நன்றியுடன் நினைக்கும் பெயர் அய்யாவின் பெயராக இருக்கும்.
அன்பன்
மது
முடிவில் சொன்னது நடக்கும் தோழர்
ReplyDeleteத.ம
அதே போல நாளைய சமூகம் நன்றியுடன் நினைக்கும் பெயர் அய்யாவின் பெயராக இருக்கும்.
ReplyDeleteஉண்மை
உண்மை
நல்லதே நடக்கும்......
ReplyDeleteபடிச்சவன் பாட்டையும் எழுதினவன் ஏட்டையும் கெடுத்த கதை எல்லோரும் அறிந்ததே! படிக்காத மேதைகள் பலர் பொது நலம் கருதி செய்து விட்டுப் போன எத்தனையோ நல்ல விஷயங்கள் இன்று எல்லோரும் அனுபவிக்கும்போதுதான் அவர்களின் அருமை தெரிகிறது. தூற்றுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும். நம்மாழ்வார் அப்போது நினைக்கப்படுவார். இருக்கும் காலத்திலேயே கொண்டாடும் பழக்கம் தமிழனிடத்தில்தான் இல்லையே!
ReplyDeleteஇவரைப் போன்ற படைத்த விஞ்ஞானி சொன்னதை நம்பி ,கெமிக்கல் உரமிட்டதால் மண் மலடானதுதான் மிச்சம் !ஆனால் அந்த விஞ்ஞானிக்கு ஏகப் பட்ட விருதுகள் வேறு :)
ReplyDeleteசிலர் தங்களை மேதைகளாகக் காட்டிக் கொள்ள உண்மையான மேதைகளை மட்டம் தட்டிப் பேசுவார்கள். மேலும் சிலர், மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களை எதிர்த்து எழுதுவதாலேயே தாங்கள் புகழடைந்து விடலாம் என முயல்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை இணையத்தில் வர வர உயர்ந்து விட்டது. நம்மாழ்வார் ஐயாவையும் அவரைப் பின்பற்றுபவர்களையும் பற்றித் தவறாக எழுதியவரும் அப்படியொரு கீழ்த்தர ஆளாகத்தான் இருப்பார். எறும்பூரக் கல் தேயலாம்; மலை தேயாது! நம்மாழ்வார் மலை! நீங்கள் வருந்தாதீர்கள் மது!
ReplyDeleteஉறுதியாகச்க்சொல்லலாம் நடக்கும்!
ReplyDelete