ஒரு பணிஒய்வு ஒரு பாராட்டு a retirement function and a felicitation

28/04/2016
திடீரென ஓர் அழைப்பு

நிலவன் அண்ணா

முனைவர்  ஜம்புலிங்கம் அவர்களின் பணி ஒய்வுப் பாராட்டு விழாவிற்கு வருகிறீரா என்றார்.



சொந்த அலுவல்களை தூக்கிதூரப் போட்டுவிட்டு வருகிறேன் என்றேன்.

கவிஞர் செல்வா, புலவர் மகா சுந்தர் அவர்களோடு நால்வராய் துவங்கியது பயணம்.

கவிஞர் செல்வா  பாடல்கள் ஏதுமே இல்லாமல் நூறு கிமி வேகத்தில் பறக்கவிட்டார் டிசையரை.

சில நிமிடங்களுக்கு பிறகு அண்ணாத்தே மூன்று மணிக்குத்தான் விழா எழுபது என்பது கிமி வேகத்தில் போனால் போதும் என்றார்.

செல்வா மிகப் பிரயத்தனப்பட்டு வேகத்தை குறைக்க முற்பட்டார்.

அவர் குறைத்தாலும் அவர் கால் அவரை அனுமதிக்கவில்லை.

நேரே தமிழ் பல்கலைக்கழகம்.  பேரவை அரங்கு.

முன்னணி வலைப்பதிவர் திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்கள் அரங்கில் இருந்தது மகிழ்வு.

அய்யா குடவாயில் பாலகிருஷ்ணன், சரஸ்வதி மகால் மணிமாறன் என்று அரங்கம் முழுதும் விருந்தினரும் நண்பர்களும் நிறைந்திருந்தனர்.

நெடுநாட்களாக இருந்த சந்தேகம் ஒன்றை அய்யா குடவாயில் பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன்.

சதுர ஆவுடைகள், வட்ட ஆவுடைகள் ஏன் ?

சதுர ஆவுடைகள் பல்லவர்கள் காலத்தியது என்றார்.

அத்தோடு பேலிக் சிம்பல் அல்ல லிங்கம் என்றார். யாரோ சில மேற்குலகவாசிகள் காமம் சார்ந்த குறியீடு என்று எழுதப்போக அதையே எல்லோரும் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல என்றும் சொன்னார். கேட்டுக்கொண்டேன்.

போற்பனைக்கோட்டையை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், சங்ககாலக் கொட்டைகளில் எஞ்சியிருப்பது இதுமட்டுமே. பாதுகாக்கப்பட்டு தொல்பொருள் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

இதற்கிடையே நிகழ்வின் கதாநாயகர் திரு. ஜம்புலிங்கம் அவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு வரவேற்றார்.

சில நிமிடங்களுக்குப் பின்னர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பாஸ்கரன் அவர்கள் வர விழாத் துவங்கியது.

முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் பணியை பாராட்டிப் பேசும் தொடர் பேச்சு.

மற்ற ஊழியர்கள் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதால் பெருமைப் படும் நிலையல், பல்கலைக் கழகத்திற்கு பெருமை சேர்க்கும் ஆய்வுப் பணிகளைச் செய்தவர் முனைவர் என்றார் ஒரு பேராசிரியர்.

விழாவில் ஜம்புலிங்கம் அவர்களின் துணைவியார் திருமிகு பாக்கியவதி அவர்கள் எழுதிய கோவில் உலா என்கிற நூல் வெளியிடப்பட்டது.

துணைவேந்தர் வெளியிட, குடவாயில் பாலகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

ஏற்புரைக்காகவே ஒரு தனிப்பதிவை எழுதும் அளவிற்கு அனுபவங்களையும் தரவுகளையும் கொட்டினார் முனைவர்.

காலை முதலில் படிப்பது கார்டியன், தி டெய்லி மெயில் மற்றும் தி ஹிந்து என்றார். (வ்வ்வ், நான் ஒரு காலத்தில் சயன்ஸ் டெய்லி படித்துக் கொண்டிருந்தேன் இப்போது அதுவும் இல்லை!)

விழாவிற்கு தாமதமாக வந்து பின்னே அமர்ந்திருந்த ஸ்டாலின் சரவணன் முனைவருக்கு வாழ்த்து தெரிவிக்க விடைபெற்றோம்.

எங்களுடன் ஸ்டாலின் இணைந்துகொள்ள வரும் வழியெல்லாம் கவிதைகளை பேசியபடி வந்த பயணம். மறக்கமுடியாது.

லிபி ஆரண்யாவின்

// ஜீப்பில் வரும் பெரிய கிருமிகளுக்கு மட்டுமே
இன்று அனுமதி
எனச் சிரித்தன சிறிய கிருமிகள்.//

என ஒரு கவிதை தொடர் விவாதத்தை துவக்கி வைத்தார்.

எனது மதிப்பிற்குரிய கவிஞர் அப்துல் ரகுமானின் பல கவிதைகளை நினைவு கூர்ந்து சொன்னார்கள்.

வாவ் அனுபவமாக இருந்தது.

அப்படியே சபை கலைந்துவிடாமல் நேராக ஞானாலயா சென்று அய்யாவை பாராட்டுவதுதான் திட்டம்.

அப்படி ஒன்றும் எளிதான திட்டமல்ல என்பது போனதும்தான் தெரிந்தது.

சி.பி.ஐயின் தோழர்  முத்தரசன் அவர்கள் தனது தோழர்களோடு வந்திருந்தார்.

வழக்கம் போல தரவுகளைக் கொட்டிக்கொண்டிருந்தார் பி.கெ அய்யா.

ஒருமணி நேரத்திற்கு பின்னர் தோழர் ஜீவா அவர்களிடம் காதைக்கடித்தேன்.

நீங்கள் உங்கள் நிகழ்வை முடித்துக்கொள்கிறீரா என்று கேட்க
நிலவன் அண்ணாதே ஆய்வுத் தம்பதியருக்கு சந்தன மாலைகளை அணிவித்து சால்வைகளைப் போர்த்தி வாழ்த்தினார்.

பிரபஞ்சனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் பொழுதைப் பொன் செய்தோம்.

நன்றிகள் நிலவன் அண்ணாத்தேவிற்கும் நண்பர்களுக்கும்



அன்பன்
மது

Comments

  1. இனிதாய் நிகழ்வுகள். தொடரட்டும்

    ReplyDelete
  2. தங்கள் அனைவரையும் சந்தித்ததில் பெரு மகிழ்வு அடைந்தேன் நண்பரே

    ReplyDelete
  3. இரண்டு நல்ல நிகழ்வுகளில் பங்குபெற்றீர்கள். மனது மகிழ்ச்சி எய்துகின்றது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  4. இருவருக்கும் எமது வாழ்த்துகளும்....
    த.ம

    ReplyDelete
  5. மறக்க முடியாத நிகழ்வுகளை ஆவணப்படுத்தியமைக்கு நன்றி மது!
    (இப்படித்தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் அடுத்தடுத்து வந்து, எழுதமுடியாமலே என்கையை இழுத்துச் சென்றுவிடுகின்றன.
    நீங்கள் உங்கள் பார்வையில் எழுதியது நல்லது)

    ReplyDelete
  6. கோடு போட்டீங்க,முனைவர் ஜம்புலிங்கம் அய்யா ரோடு போடுவார் பார்த்துக்கிறேன் :)

    ReplyDelete
  7. //பொழுதைப் பொன் செய்தோம்.//
    இந்த வரிகளே சொல்கிறதே எவ்வளவு இனிமையான சந்திப்பும் நிகழ்வுகளும் என்று ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி. தஞ்சைக்கு என்னால் (அப்பாவின் உடல்நிலையை முன்னிட்டு) வர இயலாமல் போய் விட்டது. ( குடவாயில் பாலகிருஷ்ணன் > குடவாயில் பாலசுப்ரமணியன் )

    ReplyDelete
  9. இனிமையான தருணங்கள் இல்லையா?

    பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக