இன்னும் ஒரு தொழில் முனைவோர்



அப்துல் ஒரு தனியார் கல்லூரி விரிவுரையாளர் ...

வழக்கமான பிரச்சனைகள், குறைந்த சம்பளம், அதீத வேலைப் பளு ...

ஒரு நாள் துணிச்சலாக குட்பை சொல்லிவிட்டார் ...


அடுத்து அவர் செய்ததுதான் செய்தி.

அவரது வீடு ஒரு மாநில நெடுஞ்சாலையில் இருந்தது.

நான்கு பரம்பரைகளைப் பார்த்த வீடு.

முன்புறம் திண்ணை, பின்னே நீண்ட பெருவெளி.

அப்துல் ஒரு இயற்கைச் செக்கை வாங்கி வீட்டின் கொல்லைப்புரம் நிறுவினார்.

(அது என்ன இயற்கைச் செக்கு, மாடுகள் சுற்றி வரும் வேகத்திலேயே ஆர்.பி.எம் செட் செய்யப்பட்டு மின் மோட்டார் மூலம் சுழலும் செக்கு, வாகை மர உட்பாகம் கொண்டது,, இரண்டு லெட்சம் ரூபாய்களுக்குள் கிடைக்கிறது)

இயற்கை முறையில் பிழியப்பட்ட எண்ணைகள் என்று ஒரு பெரும் பதாகையை வீட்டின் திண்ணையில் வைத்தார் அப்துல். மாநில நெடுஞ்சாலையில் இயற்கை எண்ணை வகைகளை வாங்க பெரும் வரிசையில் மகிழுந்துகள் நிற்க ஆரம்பித்தன.

இன்று அவர் இரண்டாவது செக்கை நிறுவிஇருக்கிறார் என்கிறார் நண்பர்கள்.

(தகவல் நிலவளம் ஆசிரியர் மதிப்புறு சந்திரசேகரன்)

Comments

  1. வணக்கம். உள்ளே வரலாமா..??

    அந்த தொழில் முனைவோருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம். தகவலைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நம்பிக்கையே வளர்ச்சி
    த.ம.

    ReplyDelete
  3. பாராட்டிற்குரியவர்
    பாராட்டுவோம்

    ReplyDelete
  4. அப்துலின் முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  5. நல்ல விஷயம்.... அவருக்கு எனது பாராட்டுக்களும்.....

    ReplyDelete
  6. மிக மிக நல்ல விஷயம். இப்போதையத் தேவைக்கு ஏற்ற தொழில் மட்டுமல்ல அவரது முயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துகள்!

    துளசி, கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக