தொழில் முனைவுச்சிந்தனைகள்



ஒவ்வொரு முறை தொழில் முனைவுப் பயிற்சியை கல்லூரி மாணவர்களுக்கு துவங்கும் பொழுதும் எனக்கு தோன்றும் விசயம் இதுதான்.

தப்பான நபர்களிடம் பேசிக்கொண்டிருகிறோம்....

பயிற்சி அளிக்க வேண்டியது இவர்களின் பெற்றோருக்கு...


சரியாத்தான் யோசிக்கிறேனா ....

எனக்கு வரும் எரிச்சல்களில் மிகத் தொன்மையான எரிச்சல் ஒன்றைப் பகிர்ந்தால் உங்களுக்குப் புரியும்.

புரிகிற மாதிரி சொல்கிறேன்...

பி.எட் படிப்பை தனியார் கல்லூரியில் இரண்டு லெட்சம் கொடுத்துப் படிப்பார்கள்.

ஆனால் பட்டம் பெற்ற பின்னர் நான்கு பேர் ஒன்றிணைத்து ஒரு பள்ளியைத் துவக்கமாட்டார்கள்.

ஏற்கனவே உள்ள பள்ளிகளில் பணிக்கு விண்ணப்பித்து பாடாய்ப்படுவார்கள்.

பிரச்னை எங்கே இருக்கிறது என்றால்

முதன்மைக் காரணியான "துவங்கும் மனப்பாங்கு இல்லாததுதான் காரணம்".

(டேய் கல்வியை வணிகம் என்று சொல்றியே என்று யாரும் என் சொக்காயைப் பிடித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல)

அடுத்தது ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பிக்கும் விதிகள் குறித்து ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் அறியாது இருப்பதுதான்.

ஆக மனப் பாங்கும், விதிகளும் அறிந்த ஒரு குழுவால் ஒரு புதிய கல்வி நிறுவனத்தை துவங்க முடியும் என்பதே உண்மை.

முதல் தடைக்கள் வழக்கம் போல மரபு சார்ந்து சிந்திக்கும் பெற்றோராகத்தான் இருப்பார்கள்.

நான் கேள்விப்பட்ட ஒரு பேராசிரியர் குறித்து அடுத்த பகிர்வில் சொல்கிறேன்

Comments

  1. மாறுபட்ட பயனுள்ள பதிவு தோழரே
    த.ம.1

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே
    பலரும் சொந்தமாய் செயலாற்றிட தயங்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  3. சிந்தனை எல்லாம் சரி...

    தண்ணி (liquor) பழக்கம் உண்டா...? அப்படி இல்லை என்றால் என் தளத்திற்கு ஏன் வருவதில்லை...?

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. நல்ல வழிகாட்டல் இங்கே இல்லை - உண்மை.

    ReplyDelete
  5. ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்பது எல்லோருக்கும் பொருந்தாது ஜி :)

    ReplyDelete

Post a Comment

வருக வருக