தொழில் முனைவோர் வானில் இருந்து குதிக்கிறார்களா?
ஜான் ஒரு தனியார் கல்லூரி பேராசிரியர்.
அப்பா அம்மா விருப்பப்படியே நன்கு படித்து நன்கு மதிப்பெண் பெற்று ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்.
சமூகத்தால் மதிக்கப்படும் ஒரு பணி,, சேவை ...
ஜானுக்கும் மன நிறைவு.
பிரச்னை என்ன வென்றால் சம்பளம் வரவில்லை..
ஒருமாதம் சரி..
இரண்டாவது மாதம் ...என்னப்பா இது...
மூன்றாவது மாதம் ... ஆகா என்ன நடக்குது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஆசிரியப் பணி என்பது சம்பளம் தந்தால் மட்டுமே செய்ய வேண்டிய பணி அல்லவே?
தனது பணியில் எந்தக் குறையும் வைக்காத ஜான் நிர்வாகத்தால் சரிவர நடத்தப்படவும் இல்லை.
ஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் வேலையைத் தூக்கி கடாசி விட்டார்.
ஆமாப்பா ஆமா, தமிழத்தில் பல தனியார் கல்லூரிகள் தங்கள் விரிவுரையாளர்களுக்கு ஊதியம் தருவதும், காவிரியில் தண்ணீர் வருவது போலத்தான்.
ஜான் கொஞ்சம் மாற்றி யோசித்தார்.
படிப்பு,, பட்டம், ஊர் பேச்சு எல்லாவற்றையும் தூக்கி பரணில் போட்டார்.
நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார்.
தனது கிராமத்தில் இருக்கும் குடியானவ மக்களைச் சந்தித்து மாடுகளை மேய்த்துத் தர முடியுமா என்று கேட்க, ஊதியத்திற்கும், பத்து மூட்டை நெல்லுக்கும் மாடுகளை மேய்த்துத்தர ஒப்புக்கொண்டனர்.
இரண்டு ஜோடிகள், நான்கு ஜோடிகளாகி இன்று பல ஜோடி மாடுகள் எளிய கிராம மக்களால் மேய்க்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மாடுகளின் பின் தொடை ஒன்றில் ஜே என்கிற குறியோடு மலைகளில் திரிகின்றன மாடுகள்.
தமிழகத்தில் இன்று நாட்டு மாடுகளை நம்பி வாங்கும் ஒரு மனிதராக ஜான் அறியப் பட்டிருக்கிறார்.
அவரது முன்னால் சகாக்கள் இன்னும் விரிவுரையாளர்களாகவே தொடர்கின்றனர்.
திரு ஜான் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவித்தியாசமாக நினைப்பவர்கள், முயல்பவர்கள் சாதனை படிக்கிறார்கள் என்பதற்கு இவரும் சான்று.
ReplyDeleteபோற்றுதலுக்கு உரியவர்
ReplyDelete'ஜான்' ஏறினால் முழம் சறுக்கும் என்கிற பழமொழியைப் பொய்ப்பித்து விட்டாரே :)
ReplyDelete