சமீபத்திய சென்னைப் பயணத்தின் பொழுது நான் பார்த்த முக்கியமான விசயத்தில் ஒன்று வடபழனி கோவிலில் பார்த்த வடஇந்திய தொழிலாளிகள்...
கர்ம சிரத்தையாக கோவிலின் வளாகத்தை துப்புரவு செய்துகொண்டிருந்தனர் இரண்டு வடஇந்தியர்கள்.
சீருடையில்.
தமிழினம் உழவராப் பணி என்று விரும்பி செய்யும் ஒரு விஷயத்தை செய்ய வட இந்தியாவில் இருந்து ஆட்கள் இருக்குமதியாகி இருப்பது மனதில் சலனத்தை உண்டு செய்கிறது.
ஏற்கனவே கொத்து வேலைக்கு சாரி சாரியாக இறங்கிவிட்டார்கள்.
நம்மவர்கள் போல பதினோரு மணிக்கு ஒரு பிரேக் பிறகு ஒரு மணிக்கு ஒரு பிரேக் அப்புறம் மூன்று மணிக்கு ஒரு குட்டித்தூக்கம் என்பதெல்லாம் இல்லை.
இறங்கி அடிக்கிறார்கள். நம்மவர்கள் பெரும் ஊதியத்தில் சில நூறுகள் குறைத்தே வாங்குகிறார்கள். அதிலும் அவர்களுக்கு ப்ரோக்கர் கமிசன் வேறு உண்டு.
உழைப்பைக் கைவிட்டு டாஸ்மாக்கை தஞ்சம் புகுந்த தமிழ் உழைக்கும் வர்க்கம் என்று விழிக்கும் என்பதுதான் தெரியவில்லை
நியாயமான ஆதங்கம் தோழரே
ReplyDeleteத.ம.1
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
ReplyDeleteபல துறைகளில்இவ்வாறாக வட இந்தியர்களைக் காண முடிகிறது. நம்மவர்கள் வேலை இழக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த ஊதியம் தரப்டுவதோடு அதிக உழைப்பு அவர்களிடமிருந்து பெறப்படுகிறது. காசுக்காக நம்மவர்கள் செய்யும் இந்தப் பிழைப்பைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தமிழர்கள் சில துறைகளை கைவிட்டு விட்டார்கள் என்பதனை விட, லாப நோக்கில், திட்டமிட்டே புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பதே உண்மை
ReplyDeleteஉங்களுடைய தலைப்பைச் சார்ந்த, .‘தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள்’ http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_26.html என்ற தலைப்பில் நானும் ஒரு பதிவை எழுதி இருக்கிறேன். அதன் இறுதியில் நான் குறிப்பிட்டு இருப்பதை (இதனை வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில்) இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவிற்கான பின்னூட்டங்களையும் அவசியம் படிக்கவும்.
// இப்படி ஏன் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களை மட்டுமே பணியில் வைத்துக் கொள்கிறார்கள்; உள்நாட்டு தமிழர்களை வைத்துக் கொள்வதில்லை? இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல். உள்ளூர் தமிழர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும், தொழிலாளர் பிரச்சினை, சில இடங்களில் ஜாதி கட்சிகளால் பிரச்சினை – இவையே முக்கியமான காரணமாக சொல்லப் படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் மேஜை சுத்தம் செய்ய, சாப்பிட்ட இலையை எடுக்க ஆட்கள் கிடைப்பது கஷ்டம். இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பதால் இங்குள்ள முதலாளிகளுக்கு பிரச்சினை இல்லை. இதேபோல் வடக்கில் உள்ளவர்கள் இந்தி பேசாத மாநிலத்தில் உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு காலத்தில் இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இப்போதோ இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே அவர்களுக்கு வேலை இல்லை. இதுபோல் வடக்கு தெற்கு இரண்டிலும், மொழி தெரியாத தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி சுரண்டலைச் செய்யவே பல நிறுவனங்கள் விரும்புகின்றன //
உழைப்புச் சுரண்டல் எப்படி எல்லாம் அரங்கேறும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் :(
ReplyDelete