சாமி கண்ணைக் குத்திடும்


வீதிக் கூட்டத்தில் ஒரு வினோதமான செய்தியைப் பகிர்ந்தார் தோழர் ஒருவர்.

அவர் அலுவலகத்தில் ஒருவருக்கு மருத்துவ அவசரம்.

பத்து நாட்களில் ஒரு அறுவைச் சிகிச்சையை எதிர்கொண்டே ஆகவேண்டும்.


மருத்துவ விடுப்பு கோரினால் மறுக்கப் பட்டிருகிறது.

காரணம் கேட்டால் இன்னொருவர் மருத்துவ விடுப்பு கோரியிருப்பதால் தர இயலாது என்று சொல்லியிருக்கிறார்.

என்ன காரணத்தினால் அந்த இன்னொருவர் மருத்தவ விடுப்பு எடுக்கிறார் என்று விசாரித்தால் பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்காக.

நம்ம ஆள் காண்டாகி அய்யா மருத்துவ விடுப்பு முறைப்படி இவருக்குத்தானே வழங்கப் படவேண்டும்.

இன்னும் பத்து நாட்களில் இவருக்கு அறுவை செய்யா விட்டால் சிக்கலாகிவிடுமே என்றதற்கு கொடுத்த விளக்கம்தான் கிளாஸ் மாஸ்.

அய்யா அவரு பழனிக்கு போறார்

நான் மறுத்தேன் என்றால் சாமி என்னை ஏதாவது செய்துவிடும் என்று சொல்ல நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறார்.

இப்போதெல்லாம் தற்செயல் விடுப்புகளில் கூட "பழனிக்கு செல்வதால்" என்கிற காரணங்கள் எழுதப்படுகின்றனவாம்.

பக்திக்கும் மூட நம்பிக்கைக்கும் ஒரு சின்னக் கொடுத்தான் இடையே ...

இல்லையா ?

#பெரியார்பிறந்தமண்

Comments

  1. வேதனையாக இருக்கிறது தோழரே சமூகத்தை நினைத்து.
    த.ம

    ReplyDelete
  2. இதன் பெயர்தான் பக்தியா

    ReplyDelete
    Replies
    1. fear it seems
      நன்றி தோழர்

      Delete
  3. இப்படிலாம் பதிவு போட்டா சாமி கண்ணை குத்திடும்

    ReplyDelete
  4. தாம் தப்பித்துக்கொள்வதற்காக இப்படி காரணம் சொல்வதுண்டு.

    ReplyDelete
  5. ஒவ்வொரு காரியத்திற்கும் தமிழக அரசு கொடுக்கும் விளக்கம் போலவே ' சாமி கண்ணை குத்தும் ' விளக்கமும் இருக்கிறது. மிக்க நன்று!

    ReplyDelete
  6. நான் சொல்ல வந்ததை நம்ம ராஜி போட்டுட்டாங்க....அதே...மூடர்! என்னத சொல்ல...
    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக