வனமுகடு பரபரப்பாய் இருந்தது.
ராஜ் என்கிற விமானி பக்கத்து நாட்டின் மீது பறந்து கொண்டிருந்த பொழுது பிடிபட்டதே ஊரெங்கும் பேச்சாக இருந்தது.
அண்டை நாடான வின்முகட்டின் குடிகள் பிடிபடுகிற வனமுகடு வீரர்களை என்ன செய்வார்கள் என்பது தெரியும்.
ஈவு இரக்கமே இருக்காது. கொன்று விடுவார்கள்.
இத்துணைக்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி ஒரு தேசமே இல்லை. திடீரென தாய்நாட்டில் இருந்து பிரிந்து தன்னை வின்முகடு தேசம் என அறிவித்துக்கொண்ட நாடுதான் அது.
பக்கம் பக்கம் இருந்தாலும் வேறு வேறு கடவுள்களை வணங்கியதால் இரண்டு நாடுகளும் தங்களுக்குள் தீரா வெறுப்பை பராமரித்து வந்தன.
வனமுகட்டின் அதிபர் கொஞ்சம் மறைகழண்ட மதவாதி.
தோன்றுவதை எல்லாம் சட்டமாகப் போட்டு தனது சொந்தக் குடிமக்களையே நாட்டை விட்டு ஓட வைக்கும் வித்தையில் கைதேர்ந்தவர்.
ஆனால் அண்டை நாட்டு விசயத்தில் ஆள் உடும்புப் பிடியாக நம்பும் விசயத்தில் ஒன்று அப்படி ஒரு நாடே இல்லை என்பதுதான்.
ஏதாவது ஒரு இரவில் வின்முகட்டை முற்றுகையிட்டு பழையபடி தனது தேசத்தோடு இணைத்துக் கொள்வதுதான் அன்னாரது கனவு.
ஆனால் வின்முகடு பயங்கரவாதத்தில் உலகின் தலைமைக் கேந்திரமாக இருந்ததால் வலியப் போய் புற்றுக் கிருமியை நாமே ஒட்டிக் கொண்டது போல ஆகிவிடுமே என்று விட்டுவிட்டார்.
இந்த நிலையில் வின்முகட்டில் மாட்டிக் கொண்ட விமானியை இவர் எப்படியும் மீட்பார் என ஊடங்கங்கள் பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டபடியே இருந்தன.
தனது அலுவலகத்திற்கு வெளியே மின்னிக் கொண்டிருந்த காமிராக்களை பார்த்தபடியே ஒரு கோப்பையை சரித்துக் கொண்ட அதிபர் தனது நம்பிக்கைக்குரிய அமைச்சர் அமீபாவை பார்த்து தலையசைக்க ...
அமீபா விண்முகட்டின் உளவுப் பிரிவு தலைவரை அழைத்தார். உங்க பேமென்ட் ஆயிடுச்சு ...
வழக்கம் போல செஞ்சுருங்க என்றபடி போனை வைத்தார்.
அதிபரைப் பார்த்து குரூரம் வழியும் ஒரு புன்னகையை வீசினார்.
அதிபர் அதே புன்னகையை வாங்கி பிரதிபலிக்க ஊடகங்கள் பிடிபட்ட வீரர் கொலையுண்ட செய்தியை அலறின..
என்ன அமீபா இந்தத் தேர்தலையும் நாம் ஜெயிசுறாலாம்லா என்றார் அதிபர்...
நிச்யமான்னா என்றார் அமீபா
வனமுகடு வின்முகடு மக்கள் நேசம் பாராட்டினாலும் இசைந்திருந்தாலும் இந்த பாழாய்ப்போன அரசியல் ஆதாயத்துக்கு அரசியல்வியாதிகள் எதையும் செய்யுங்கள் :(
ReplyDeleteவேதனை
ReplyDeleteஇது ஏதோ நமது அரசியல் விவகாரங்களைச் சற்று உரசிச் செல்லுகிறதோ??!!!!! நம்மிடமிருந்து பிரிந்த தேசம்....வன்முறை...ம்ம்ம் வேதனைதான்! குரூர அரசியவாதிகள் இருக்கும் வரை எந்த நாட்டிலும் அமைதி மலருமா என்ன??!!!
ReplyDeleteகீதா