இன்றைய வீதிக் கூட்டத்திற்காக பிரட்ரிக் போர்சித் குறித்து பேசினேன்.
அவன்ஜர் நாவல் குறித்து சொல்லும் பொழுது வியட்நாம் வீரர்கள் எப்படி நிலத்திற்கு அடியில் சுரங்க வளைப்பின்னல் அமைத்து அமெரிக்க வீரர்களை தாக்கி அழித்தார்கள் என்பதைச் சொன்னேன்.
அதற்காக அமெரிக்க தயாரித்த சிறப்பு வடிவமைப்பைக் கொண்ட கைத்துப்பாக்கிகள் குறித்தும் சொன்னேன்.
எனது உரை மீதான கருத்துக்களில் முக்கியமான கருத்து தமிழாசிரியர் கு.மா. திருப்பதி அவர்களின் கருத்து.
பூமிக்கு கீழே சுரங்கம் அமைத்துத் தாக்குவது என்பது தமிழர் மரபுகளில் இருக்கிறது.
பெரிய மருதுவின் ஒரு படைப்பிரிவு இப்படித்தான் ஆங்கிலேயர்களை துவம்சம் செய்தார்கள்.
மருது சகோதர்களின் படைப்பிரிவு ஒன்று நிலத்தின் கீழே இருந்தவாறே ஆங்கிலப் படை எவ்வளவு தொலைவில் வருகிறது, படையணியின் எண்ணிக்கை என்ன என்பது பற்றியே செய்திகளை நிலத்தின் அடியில் இருந்தே அறியும் திறனோடு இருந்ததைக் குறிப்பிட்டார்.
திடுமென நிலத்தில் அகன்ற வாய் போலத் திறந்து குதிரைகளோடு வெள்ளைப் படையணியை நிலத்திற்குள் இழுத்து காலி செய்திருகிறார்கள்.
அப்புறம் எப்படி தோற்றார்கள் ...
தமிழன் வேறு எப்படித் தோற்பான்?
அணுக வேண்டியவர்களை அணுகி என்ன நடக்கிறது என வெள்ளையர் கேட்க நிலத்தடி ரகசியம் கசிந்திருக்கிறது.
ஆமா அவர்களை எப்படி வெளிக் கொணர்வது என்று கேட்க
ஒண்ணுமில்ல எஜமான் மிளகாய்ப் பொடியைத் தூவுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் நம்மவர்கள் ...
அப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்?
வேதனை
ReplyDeleteகாட்டிக் கொடுப்பதற்கென்றே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
உண்மை உண்மை
Deleteமிளகாய்ப் பொடியா..அடடா நம்மவர்களுக்கு நம்மவர்களே..வேதனை.
ReplyDeleteவேதனைதான்
Deleteபோட்டுக் கொடுத்துச் சதிசெய்யும் கூலிப்படைகள், கறுப்பு ஆடுகள் எல்லா காலத்திலும் உண்டு போலும்..மிக மிக வேதனை...
ReplyDeleteதுளசி, கீதா