மலர்த்தருவில் என்ன நடக்கிறது?


நீண்ட கால பணி அழுத்தங்களுக்கு பிறகு கோடை விடுமுறையில் மீண்டும் வலைப்பூ பக்கம் வந்தேன். 

ஒருவழியாக பழைய நண்பர்களின்  வலைப்பூக்களை வாசிக்க, மீள  இயன்றது.

கடந்த நான்காம் தேதி மைத்துனர் சரத்துக்கு  மனத்தைத் திருடிய கீர்த்தனாவுடன் மணவிழா. 

தொடர்ந்து கல்வியாண்டு துவக்கம். 

இந்த சூழ்நிலையில் வேறு எதுவும் எழுத முடியாது என்பதால் ஏற்கனவே முகநூலில் எழுதிய விஷயங்களை சிறு பதிவாக ஷெட்யூல் செய்தேன். 

ஜூன் இருபது வரை. 

என்ன பிரச்னை என்றால் எனது பதிவுகள் மட்டுமே வெளியாகும். நண்பர்களின் பதிவுகளைப் படிக்க முடியாது, அதைவிட அவர்களுக்கு பின்னூட்டம் விடமுடியாது. 

வித்யாசமான வனவாசம். 

போதாக குறைக்கு கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் பிளாக்கர் வெளியிட்ட புதிய வார்ப்புருக்களை  பயன்படுத்த ஏகப்பட்ட ஏழரை ஆகிவிட்டது. 

ஏற்கனவே இருந்த பட்டைகள் கருவிகள் காணாமல் போயின. 

மீட்டுக் கொண்டுவந்தால் நெருங்கிய நண்பர்களின் இணைப்புகள் எல்லாம் தொடர்பு பட்டையில் இல்லை. 

இஸ், நேற்று தமிழ் இளங்கோ அய்யா, வெங்கட்ஜி, என பார்த்துப் பார்த்து சேர்த்தாச்சு...

தில்லையகம் பதிவர்கள் ஆள் வைத்து அடிப்பதற்குள் அவர்கள் வலைப்பூவை இணைக்க வேண்டும்... 

இந்த மாதம் கொஞ்சம் எழுத முடியும் என்றே . நினைக்கிறன்.

பார்க்கலாம்.

அன்பன் 
மது 


Comments

  1. வருகைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    தொடர் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  2. இயன்றவரை எழுதுங்கள் தோழரே...
    த.ம.2

    ReplyDelete
  3. இதனால் என் பதிவுக்கு வரும் வாசகர் எண்ணிக்கை கணிசமாய் கூடுமென நம்புகிறேன் :)

    ReplyDelete
  4. எழுதுங்கள் நண்பரே

    ReplyDelete
  5. பணிதானே முதல் கடமை? அதை முதற்கண் கவனித்து, பின் மீண்டு(ம்) வந்து பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  6. எனக்கும் அவ்வாறான சூழல் பல நேரங்களில் ஏற்பட்டு விடுகிறது. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.

    ReplyDelete
  7. க்கும்... இந்த பகிர்வு தேவையா...?

    ReplyDelete

Post a Comment

வருக வருக