நமக்கான ஆகச் சிறந்த உதவிகள் நமக்குள் இருந்தே வருகின்றன.
இருக்கிற பணி அழுத்தத்தில், வாழ்வு தரும் சிக்கல்களில் இருந்து மீண்டு மகிழ்வான மனநிலையை மெயின்டன் செய்வது எல்லோருக்கும் இயல்பானதாக இருக்கமுடியாதுதான்.
ஆனால், ஓவ்வொரு முறை மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழும் பொழுதும் அவற்றை தடுத்து நேர்மறை எண்ணங்களாக மாற்றிக்கொள்ளும் பழக்கம் அவசியம்.
இது வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.
இந்த வேலை நமக்கு கிடைக்குமா என்று கேள்வியோடு இன்டர்வியூவிற்கு போகிறவரைவிட, நமக்கு கிடைக்கலைனா யாருக்கு கிடைக்கும் என்கிற மனநிலையில் போகிறவர்க்கு பணிவாய்ப்புகள் எளிது இல்லையா?
அப்படியே கிடைக்காவிட்டால் கூட இதைவிட நல்ல பணி நமக்கு கிடைக்கும், மெருகேற்றிக் கொள்வோம் மீண்டும் முயல்வோம் என்பதுதான் பாசிட்டிவ் பாய்ண்ட்.
ஆக, சிபாரிசு கடிதமோ, செல்வாக்கோ செய்யாத வித்தையை நேர்மறைச் சிந்தனை செய்யும்.
ஆம், நமக்கான ஆகச்சிறந்த உதவிகள் நமக்குள்ளே இருந்துதான் வருகின்றன.
எடிசனை நினைத்துப் பாருங்கள்
ஒரு பெரும் தீ விபத்தில் தன்னுடைய ஆய்வகம் முற்றாக எரிந்துபோன பொழுது
அய்யோ போச்சே என்ற உதவியாளர்களிடம் சொன்னார்
ரொம்ப நாளா நம்ம ஆய்வுக்கூடத்தை மாடர்னைஸ் பண்ணனும்னு நெனச்சேன் ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு இப்போ என்றார்.
பாசிட்டிவ் மனிதர்கள் அழிவின் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவார்கள்.
ஏன், என்றால் அவர்கள் நம்புவது வெளியில் இருக்கும் பொருட்களை அல்ல,
அவர்களின் நம்பிக்கை அவர்களின் மீது, அவர்களின் திறன்கள் மீது
சார், சொல்றது ஈஸி ஆனா என்னால அவ்வளவு ஈசியாக பாசிட்டிவ் பக்கத்துக்கு வரமுடியலை என்பவரா நீங்கள்
எங்கே
ஒருமுறை சீஸ் சொல்லுங்கள் ....
Say Cheese
தொடர்வோம்.
அன்பன்
மது
http://www.malartharu.org/2017/07/learn-to-be-happy.html
http://www.malartharu.org/2017/07/be-live-wire.html
http://www.malartharu.org/2017/07/say-cheese.html
பாசிட்டிவ் மனிதர்கள் அழிவின் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவார்கள்..... Well said.
ReplyDeleteதொடர்கிறேன் மது.
மிக மிக அருமையான பதிவுகஸ்தூரி..இருவரும். எப்போதும் பாசிட்டிவ்....ஸோ சீஸ்..
ReplyDeleteநம்பிக்கையில் நம்பிக்கை வைப்போம். அருமை.
ReplyDelete