வெள்ளாமை என்றால் விளைச்சல்தானே வேண்டும் ?



மனப்பாட பாடல்களை நடத்தி இதோடு ஒருமாதம் ஆகிவிட்டது.

நான்கு பாடல்களில் முதல் பாடலின் இரண்டாவது பத்தி வரை வந்திருக்கிறார்கள் சிலர்.

குறிப்பாக ஆறுமுகம் (பெயர்மாற்றம்).

எட்டாம் வகுப்பில் கொஞ்சம் அழுத்திப் பிடித்து ஒப்படைப்புகளை கேட்டால் பள்ளியின் சுற்றுசுவருக்கு வெளியே ஓடிவிடுவான்.


சுவருக்கு மீது தலை தெரிந்தால் பார்த்துவிட்டு கூப்பிடுவார்கள் என்பதால், உடலின் மேல்பாகம் முழுதையும் கிடைமட்டமாக்கி, குனிந்தவாக்கில் ஓடிவிடுவான்.

ஒருமுறை இப்படி ஓடுகிறவனைப் பிடித்து விசாரித்து பெற்றோரை வரச் சொன்னேன்.




வந்தது அவனது அப்பா. பள்ளியின் மைதானத்தில் நடுவே அவனை நிறுத்தி அரைச்செங்கல் ஒன்றை எடுத்து அடித்தார்.




தொடர்ந்து செங்கல் பூசை விழவே குறுக்கே புகுந்து நிறுத்தவேண்டியதாகிற்று.




இன்று அவன் இருப்பது பத்தாம் வகுப்பில்.




ஆனால் ஆறாம் வகுப்பின் மனத்திறன்தான் இருக்கிறது.




பிரச்னை என்னவென்றால் தேர்ச்சி சதவிகிதம் ஒன்று இப்போதே காலி.




இப்படி மனப் பிரச்னை உள்ள மாணவர்களை பள்ளியை விட்டு அனுப்புவதும் ஒரு பயங்கரவாதம் என்கிற எண்ணமும் இல்லாமல் இல்லை.




ஏன் டீச்சர் என்னை பெயிலாக்கினீங்க என்ற நூலில் ஒரு வரி வருமே




நோயாளிகளையெல்லாம் வெளித்தள்ளிவிட்டு ஆரோக்கியமானவர்களை ஏற்றுக் கொள்ளும் வினோதமான மருத்துவமனைகள் போலாகிவிட்டன பள்ளிகள்.




மீண்டும் மீண்டும் இந்த வரி நினைவில் எழுந்துபடுத்துகிறது.







இவனைப் போல இன்னும் பதினோரு பேர்கள் இருக்கிறார்கள்.




சிலர் வெளிப்படையான பிரச்சனைகள் உள்ளவர்கள். சிலர் விட்டேத்திகள்.




இப்போதைக்கு மாவட்ட மாணவர் மன நல அலுவலர் நிர்மல் அவர்களைச் சரணடைய இருக்கிறேன்.




இவர்களை அணுகுவதும், குறைந்தபட்ச கற்றல் அடைவுகளை அடைய இவர்களுக்கு உதவுவதும் இயலும் என்றே நினைக்கிறன்.




மிக மோசமான மனத்திறன் நிலையில் இரண்டு பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். இவர்களுக்காக பிரார்த்திக்கலாம் அவ்வளவுதான். உண்மையில் இவர்கள் இருவரும் சிறப்பு பள்ளியில் இருக்கவேண்டியவர்கள்.




வழிபிறக்கலாம், அல்லது இன்னொரு பதிவில் வருந்திவிட்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து விட்டது என்று மார்தட்டிக்கொள்ளலாம்.




நிர்மல் ஜி விடும் வழிதான்.




பார்ப்போம்

Comments

  1. மனப்பாரம் கொஞ்சம் இறங்கிய
    திருப்தி இப்பதிவை எழுதியதும்
    உங்களுக்கு ஏற்பட்டிருக்கச் சாத்தியம்
    சுருக்கமாக எனினும் அருமையாகச்
    சொல்லிப்போனவிதத்தில்
    அது இப்போது எம்முள்...

    நல்லது நடக்க வேண்டும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. நோயாளிகளையெல்லாம் வெளித்தள்ளிவிட்டு ஆரோக்கியமானவர்களை ஏற்றுக் கொள்ளும் வினோதமான மருத்துவமனைகள் போலாகிவிட்டன பள்ளிகள்.
    உண்மையான வார்த்தைகள் நண்பரே

    ReplyDelete
  3. பள்ளிகள் கோவில்களுக்கு இணையானவை அதன் புனிதம் காக்கப்படவேண்டும்
    த.ம.

    ReplyDelete
  4. நிர்மல் ஜி காட்டும் வழியில் நார்மல் ஆக வேண்டுமென்பதே என் விருப்பம் :)

    ReplyDelete
  5. பள்ளியை விட்டு அனுப்புவதோடு நல்லதொரு வழியையும் காட்டுங்கள். அது அவர்களின் எதிர்கால நலனுக்கு நல்லது

    ReplyDelete
  6. இப்படி எல்லாம் ஆகி விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது...

    ReplyDelete

Post a Comment

வருக வருக