இரண்டு வார்த்தைகள்
லைவ் வயர் மனிதர்கள்
வெட் ப்ளாங்கட் மனிதர்கள்
லைவ் வயர் என்றால் கரண்டு பாஸாயிட்டு இருக்கும் கம்பி இல்லையா ?
எப்போதும் துடிப்பு.
லைவ் வயர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் மகிழ்வை நிரப்புவார்கள். வெகு எளிதாக பிறரை நண்பர்களாக்கிகொள்வார்கள்.
எல்லோரையும் பாராட்டத் தெரிந்தவர்கள்.
குறைகளை நேரடியாக அல்ல வலிக்காமல் சொல்லும் வித்தை தெரிந்தவர்கள்.
இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
வெற்றிகரமாக,
பொருள் பொதிந்ததாக,
அடுத்தவர்களை ஆகர்சிப்பதாக.
இவ்வளவுதானா
இவர்கள் குறித்து மேலும் பார்க்கும் முன்
வெட் பிளாங்கெட் ஆட்கள் என்ன செய்வார்கள் என்பதையும் பார்க்கலாம்.
ஈரப்போர்வைகள் யாருக்குத் தேவை?
முகத்தை நிரந்தரமாக சிடு சிடுவென வைத்திருப்பார்கள்.
இது ஒரு பின்விளைவை உருவாக்கி, இவர்களின் வாழ்க்கையை சிக்கல் மிகுந்ததாக்கிவிடும்.
நிரந்தர நண்பர்கள் என்று யாருமே இவர்களுக்கு இருக்கமாட்டார்கள்.
ஒரு ஆளைப்பார்த்த இரண்டு செகண்டில் அவரைப்பற்றிய இருபது குறைகளை சொல்வார்கள்.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் ஈரப் போர்வையா, லைவ் வயரா ?
கொஞ்சம் பொறுங்கள்.
பிரைன் கெமிஸ்ட்ரி என்ன சொல்கிறது என்பதையும் பாப்போம்.
லைவ் வயர்களின் மூளையில் செரடோனின் என்கிற வேதிப்பொருள் சுரக்கிறது. இது லைவ் வயர்களின் மனதை மகிழ்வாக வைத்திருப்பதுடன், அவர்களின் ஆளுமையை தீர்மானிக்கிறது.
வாழ்வின் மகிழ்வான அனுபவங்களை மனதில் ஒரு திரைப்படம் போல ஓட்டுகிறது.
லைவ் வயர்களின் ஆயுளை அனாயசமாக நீட்டிப்பதில் அவர்களின் மனப்பாங்குக்கு ஒரு அதிமுக்கியமான பங்கு உண்டு.
வெட் ப்ளாங்கெட்கள் மூளையில் கார்டிசால் என்கிற வேதிப்பொருள் சுரக்கிறது. இந்த சுரப்பு வெகு அபாயகரமானது.
இது அந்த நிமிடம் வரை வாழ்வில் நடந்த அத்துணை வேதனையான நிகழ்வுகளையும் ஒரு திரைப்படம் போல ஓட்டுகிறது. சிறுவயதில் சைக்கிளை எடுத்த ஓட்டும் பொழுது கீழே விழுந்து முட்டி பெயர்ந்தது முதல், நேற்று மேனஜர் கொடுத்த பாட்டு வரை தொடர்ந்து நினைவில் வரும்.
இதே நிலை சில நாட்களுக்குமேல் நீடித்தால் டிப்ரசன் நிலைக்கு போய்விடுவார்கள். மீட்சிரொம்பவே சிரமம்.
நிரந்தர நண்பர்களோ, நலம் விரும்பிகளோ இல்லாத வாழ்வு மிக சீக்கிரமே முடிந்துவிடும்.
ஆம், மலர்ந்த முகத்துடன் இருப்பவர்களைவிட சிடுமூஞ்சிகள் சீக்கிரமே போய்ச்சேர்ந்துவிடுகிறார்கள் என்கிறது மருத்துவம்.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் லைவ் வயரா ? வெட் ப்ளாங்கட்டா ?
மகிழ்வின் கீற்று தொடரும்
அன்பன்
மது
http://www.malartharu.org/2017/07/be-live-wire.html
http://www.malartharu.org/2017/07/be-positive.html
http://www.malartharu.org/2017/07/say-cheese.html
பழகுவோம்! நன்று
ReplyDeleteநன்றி அய்யா
Deleteசெரடோனின் சுரக்க வழி வகையை ஆராய்கிறேன் :)
ReplyDeleteநன்றி அய்யா
Deleteலைவ் ஒயராகவே இருக்க விரும்புகிறேன்....
ReplyDeleteதொடரட்டும் சிறப்புப் பகிர்வுகள்.
நன்றி அய்யா
Deleteநாங்கள் எப்போதும் லைவ் வயராகவே இருக்க விழைகிறோம்...நல்ல பதிவுகள் !!!! தொடர்கிறோம்/..
ReplyDeleteநன்றி அய்யா
Deleteசெரோட்டோன் சுரக்கும் வழியில் பயனிப்போம்
ReplyDelete