ஸ்பைடர் மேன் ஹோம் கமிங்



மார்வல் நிறுவனத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் ஒன்று ஸ்பைடர் மேன். முதல் முதலில் ஸ்பைடரை நான் பார்த்தது புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். தியேட்டரில்தான்.



பிறகு அந்நிய தொலைக்காட்சி சானல்களின் தொடர்களில் ஒன்றாக ஸ்படைரை பார்த்தேன். மிகநீண்ட காலத்திற்கு பிறகுதான் ஹாலிவுட் ஸ்பைடர் படங்களை எடுக்க ஆரம்பித்தது.

என்னைப் பொறுத்தவரை ஸ்பைடர் மேன் படங்கள் ஸ்கிரீன்  வொர்த்தி இல்லை என்றுதான் நம்பினேன்.

ஆனால் 2002இல் ஸ்பைடர் மேன் வந்தபொழுது சிலாகித்துப் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவனாக இருப்பேன் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

முதல் மூன்று ஸ்பைடர் மேன் படங்களும் ரொம்ப சீரியஸாக பீட்டர் பார்க்கரைக்  காட்டியிருக்கும்.

உலகின் வில்லன்களை சட்டத்தின் பிடிக்கு கொண்டுவருவதே ஸ்பைடர் மெனின் வேலை. வில்லன்களை கொல்லும்  பணியை இவரே செய்ய மாட்டார். தங்கள் செய்யும் அபாயகரமான பணிகளால் அவர்களே பரலோகம் போய்விடுவார்கள்.

படு சீரியஸாக இருக்கும் ஸ்பைடரின் இயல்பை மாற்றி முயற்சித்து மீண்டும் அமேஸிங் ஸ்பைடர் மேன் என்கிற பெயரில் ரீபூட் செய்து கையைச் சுட்டுக்கொண்டார்கள்.

அழகான ஹீரோயின் எம்மா ஸ்டோன் இருந்தாலும் படம் என்னவோ சரியாகப் போகவில்லை. கதை ரொம்பவே சொதப்பல்.

தற்போது வெளிவந்திருக்கும் ஹோம் கமிங் ரொம்பவே வித்யாசம்.

உலகெங்கும் விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இதுவரை வந்த ஸ்பைடர்களில் இருந்து ரொம்பவே வேறுபடுகிறார்.

சீரியஸான ஜானர் என்பதில் இருந்து ஒரு டீன் காமெடியாக மாறிவிட்டது படம்.

நூற்றி எழுபத்தி ஐந்து மிலியன்களை போட்டு இதுவரை இருநூற்றி எழுபத்தி ஐந்து மிலியன்களை வசூல் செய்துவிட்டார்கள்.

வசூல் இன்னும் நிற்கவில்லை என்பதைப் பார்க்கையில் படம் இன்னுமே வசூல் செய்யும் என்றே தோன்றுகிறது.

புதுகை ஆர்.கே.பி யில் இருந்து வெளியில் வரும்பொழுது படம் சூர மொக்கை என்றபடி விடைபெற்ற வினோத்தின் பார்வையில் படம் தமிழ் ரசிகர்களுக்கு எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

உண்மையில் ஒரு பளிச் சிறுவனின் டீன் சாதனைத் தாகமும், காதலும், அதில் அவனுக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும் பல்புகளும் அதில் இருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதும் படத்தில் வந்திருக்கிறது.

பல படங்களில் ஹீரோவாக பார்த்த பார்க்கரை பலமுறை மீட்கிறான் அயர்ன் மேன்.

வசூல் நன்றிக்காக ஒரு ரொம்ப சின்ன ஷாட்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இருக்கும் ஸ்பைடியை மீட்கும் அயர்ன்மெனைக் காட்டியிருக்கிறார்கள்.

விசில் பறக்கிறது தியேட்டரில்.

இன்னொரு முறை விசில் பறக்கும் இடம் ஒரு பெரிய பார்க்கில் இருந்து வேற்று வெளிக்கு ஸ்பைடர் தனது இழைகளை  அனுப்பி அது வெறுமே கீழே விழுந்தவுடன் ஒடத் துவங்கும்பொழுது.

என்னை பொறுத்தவரை ஹாலிவுட்காரர்கள் வசூலை மட்டுமே குறிவைத்து இயங்குவதில்லை.

இந்தப் படத்தை எதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், ஸ்பைடியை அவனது அதிநவீன சூட் இல்லாமலேயே ஒரு ஆசிட் டெஸ்டுக்கு உள்ளாக்குவது.

பேட் மேன், அயர்ன் மேன், சூப்பர்மேன், கேடயம் இல்லாத கேப்டன் அமெரிக்க என்கிற வரிசையில் இனி ஸ்பைடரும் தனது அற்புத சூட் இல்லாமல் ஹீரோவான பாகம் இது.

முழுக்க முழுக்க டீன் படம் என்பதால் அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் இந்த ஸ்பைடர்மேன்.

ஒரு முறை பார்க்கலாம் தவறில்லை.

அன்பன்
மது

Comments

  1. இங்கு இன்னும் வரவில்லை...

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்
    பார்க்க முயற்சி செய்கிறேன் நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  3. பார்க்க வேண்டும்..நாளை பெரும்பாலும் பார்த்துவிடுவேன்...

    கீதா: அமெரிக்கர்கள் நிச்சயமாக வசூலுக்காக மட்டும் படம் எடுப்பதில்லை என்பது பல படங்களில் அறியலாம்..நிறைய படங்கள் நல்ல கான்செப்ட், மெசேஜ்-டெக்னிக்கல் என்று பல கலந்து கட்டியிருக்கும்...வழக்கம் போல் நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  4. இது போன்ற படங்களை பார்பதில்லை!

    ReplyDelete

Post a Comment

வருக வருக