ஆல்வரெஸ் கெல்லி Alvarez Kelly(1961) ஆநிரை கவர்தல்


ஆநிரை கவர்தல் 
ஆபிரகாம் லிங்கனால் திறமையான மாட்டுத்திருட்டு என்று குறிப்பிடப்பட்ட ஒரு திருட்டுச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

ஆல்வரெஸ் கெல்லி, ஒரு மெக்சிகன் கவ்பாய், அமெரிக்க உள்ளநாட்டுப் போரின் பொழுது யூனியன் படைகளுக்கு ஆயிரக்கணக்கில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்தது இவரது தொழில்.

யுத்தத்தில் பணம் செய்வது இயற்கை என்பது இவரது வாதம்.

1864இல் நடந்த சம்பவத்தை 1966இல் படமாக்கிருக்கிறார்கள்.

யூனியன் கர்னல் ஸ்டட்ஸ்மான் ஆல்வாரெஸ் கெல்லியை மிரட்டும் காட்சியுடன் துவங்கிறது படம். ஏற்கனவே பல ஆயிரம் மைல்கள்  பயணித்து வந்த கெல்லி இன்னும் ஒரு ஆயிரம் மைல்கள்  தனது மாடுகளை ஓட்டி ஒப்படைக்க வேண்டும் என்று மிரட்டுகிறார் கர்னல்.

வேறு வழியில்லை என்று பணிக்கிறார் கெல்லி. ஆனால் எதிர்பாராவிதமாக கெல்லியை கடத்துகிறது கான்பிடரேட் படை.

கெல்லியை மிரட்டி அத்துணை மாடுகளையும் தங்கள் பகுதிக்கு ஓட்டிவரவேண்டும் என்று ஆணையிடுகிறார் கண்பிடரேட் கர்னல், டாம் ரோசிஸ்ட்டர்.

கெல்லி, பணிய மறுக்க அவரது விரல் ஒன்றை சுட்டு அகற்றவே வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார் கெல்லி.

விரலை வெட்டியதற்கு பழிவாங்குவதற்காக கர்னல் டாமின் காதலி லிஸ்சை கப்பலேற்றி அனுப்பிவிடுகிறார் கெல்லி.

இருவருக்கும் இடையே வெறுப்பு தணலாக கனல்கிறது.

யூனியன் படைகளின் பலத்தைத் தாண்டி மாடுகளை கொண்டுவரமுடியாது என்கிற நிலையில் அவற்றை நீரில் மூழ்கடித்து கொல்லச்சொல்கிறார் டாம்.

இந்த இடத்தில் யாருமே எதிர்பார்க்கா வண்ணம் கெல்லி படைக்கு தலைமை தாங்குகிறார்.

பெரும் எண்ணிக்கையில், பீரங்கிகளுடன் இருக்கும் யூனியன் படைகளை மாடுகளை வைத்து துவம்சம் செய்து (வசந்தபாலனின் அரவான் நினைவில் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல, பாகுபலி மட்டும் என்ன வாழுதாம் என்றும் கேட்கவேண்டாம் ) மாடுகளை வெற்றிகரமாக கண்பிடரேட்கள் வசம் ஒப்படைக்கிறார்.

இது உண்மையில் நடந்த சம்பவம்.

செமையான திரைப்படம்தான்.

இன்னொரு விஷயம் கெல்லி ஒரு கௌபாய் என்றாலும், பெண்கள் விஷயத்தில் ஜேம்ஸபாண்ட்.

படத்தில் வரும் பெண்கள் இருவர் வெகு அழுத்தமாக முத்திரை பதிக்கிறார்கள்.

விக்டோரியா ஷா, ஒரு லிப்லாக்கில் கெல்லியை எதிர்தரப்பில் கைதியாக்கிவிட அங்கே இருக்கும் லிஸ் ஒரு லிப்லாக்கில் அவளது விடுதலையை கெல்லி வாயிலாக அடைகிறாள்.

பழைய படங்களை விரும்பும் மக்கள் தவிர்க்க வேண்டாம். 

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தை வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. கான் வித் த விண்ட் , ஆல்வாரெஸ் கெல்லி போன்ற படங்கள் அடிமை முறையை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் எடுக்கப்பட்டவை.
இது ஒன்றுதான் ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயம். இருந்தாலும் படம் ஜோராத்தான் இருக்கு.

அன்பன்
மது


Comments

  1. நல்லதோர் அறிமுகம். முடிந்தால் இணையத்தில் பார்க்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக