புதுகை புத்தகத்திருவிழா 2017 தொடர் நிகழ்வு -2



முதல்வர்  மகேஸ்வரி பரிசாகப் பெற்ற நூற்களுடன்  

இரண்டாமிடத்தில் சிரஞ்சனி
மூன்றாமிடத்தில் அபிராமி 

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் ஆலோசனையின் பேரில் பள்ளி மாணவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில்  உண்டியல்கள் தரப்பட்டன. உண்டியல்களின் சேமிப்புத்  தொகை அறிவியல் இயக்கம் தந்த டோக்கன்களாக மாற்றிக்கொள்வதாகத் திட்டம்.  உண்டியில்  சேமித்த மாணவர்கள்  டோக்கன்களைக்  கொடுத்தே திருவிழாவில் நூற்களை வாங்கிக்கொள்ளலாம்.

முன்னூற்றி ஐம்பது பேர் பயிலும் எம் பள்ளியில் வெறும் இருநூற்றி ஐம்பது உண்டியல்கள்தான் வாங்கப்பட்டன. மீதம் கேட்பாரின்றி கிடக்க அருகே உள்ள திருக்கோகர்ணம் பெண்கள் பள்ளி ஆசிரியர் திரு.சுரேஷ் அவர்களிடம் வழங்கிவிட்டேன், அவரது  மாணவிகள் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்களை சேமித்து அதற்கு ஈடான  டோக்கன்களைப்   பெற்றுக்கொண்டார்கள்.

எம் பள்ளி மாணவர்களுக்கு  உண்டியல்கள் தொடர்பாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தேன். அதிகமாக பணத்தை சேகரிக்கும்  முதல் மூன்று மாணவர்களுக்கு அவர்கள் சேகரித்த தொகைக்கு ஈடாக நானும் நூற்களை வழங்குவேன் என்பதுதான் அது.

முதல் மூன்று இடங்களிலுமே மாணவியர்கள்தான்! அதிலும் வெகு சமீபம்வரை கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்!

குறிப்பாக முதலாம் இடத்தில் இருக்கும் குழந்தை மகேஸ்வரிக்கு  வீடே கிடையாது! செங்கல் சூளையில் பணிபுரியும் பெற்றோர்கள், சூளையின் அருகே குத்துமதிப்பாக ஊன்றப்பட்ட நான்கு கல்லுக்கால்களில் இருக்கும் குடில்தான் அவளது வீடு. உண்மையில் வீடில்லாப் புத்தகங்கள் இவைதான். இவளது அண்ணன் தர்மராஜ் தொல்காலச் சான்றுகள் தேடுதலில் எங்களுக்கு உதவியாக இருப்பவன். அப்படி சந்திக்க போனபோது வீடு இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்தது இன்றும் நினைவில். பிள்ளை ஏற்கனவே நண்பா அறக்கட்டளை வழங்கிய நூற்குவியல்களை இங்கேதான் வைத்திருக்கிறாள்! கல்வி இவளுக்கு சிறகுகளைத் தரட்டும். வறுமைத்தளை தெறிக்க கல்விச்சாதனைகளைப்  படைக்கட்டும்.

நிகழ்வைச் சாத்தியமாக்கிய அத்துணை நல்லுள்ளங்களுக்கும்
நன்றிகள்.
மிக குறிப்பாக  முதல் நபராக சந்தைப்பேட்டை மகளிர் பள்ளிக்கு உண்டியல்களை வழங்கி ஊக்கம் தந்த புதுகையின் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும்
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்
மணவாளன், (தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுகை). அவர்களுக்கும்,
தோழர் பாலகிருஷ்ணன் (மாநில பொறுப்பாளர்,அறிவியல் இயக்கம்), தோழர் வீரமுத்து, தோழர் துரை நாராயணன், தோழர் விக்கி, தோழர் சோலை ...ஆகியோருக்கும்

எம் பள்ளிக்கு உண்டியல்களை தனது இருசக்கர வாகனத்தில் சுமந்து வந்து வழங்கிய தோழர் புதுகைப் புதல்வன் உள்ளிட்டோருக்கும்

இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கும் வணக்கத்துக்குரிய சக ஆசிரியப்  பெருமக்களுக்கும், தலைமை ஆசிரியர் (பொ) தேன்மொழி அவர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றி

மேடையேறி குழந்தைகளுக்கு தம் கரங்களாலேயே நூற்களை பரிசளித்த சக ஆசிரியர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்களுக்கும் நன்றிகள்

முதல்வர்கள் விவரம்
முகேஸ்வரி, பத்தாம் வகுப்பு
சிரஞ்சனி, எட்டாம் வகுப்பு
அபிராமி, ஒன்பதாம் வகுப்பு

இப்போது இது

மலர்த்தரு நூற்தேனீ நிகழ்வு -2

ஏன் மாணவிகள் ?, மாணவர்கள் யாருமே இல்லையா? என்கிற கேள்விக்கு மிகக்கசப்பான பதில்கள் இருக்கின்றன பொறுமை இருந்தால் ...

அவர்களின் விருப்பத்துக்குரிய  நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் வந்தால் ஐநூறு ரூபாய் செலவழிக்கும் ஒரு மாணவர் கூட நூற்களை  வாங்கவில்லை. பலர் கழண்டுகொண்டுவிட்டார்கள். கழண்டவர்களைக் குறித்த கோபம் ஏதுமில்லை, இருப்பினும் அவர்களை இம்மாதிரி நிகழ்வுகளில் ஒன்றிணையச் செய்யும் வித்தைகள் குறித்து சிந்திக்கிறேன்.

பரிசு வழங்கும் நிகழ்வின் படத்தொகுப்பு

முதல்வர்  மகேஸ்வரிக்கு, பொன்னாடையுடன் நூற்களை வழங்குகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்










இரண்டாமாவர் சிரஜ்ஞ்சனி அவர்களுக்கு பரிசுகளை ஆசிரியர்கள் வழங்கியபொழுது





மூன்றாம் இடத்தில் இருக்கும் அபிராமிக்கு ஆசிரியர்கள் பரிசளித்த பொழுது









Comments

  1. நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  2. மாணவிகளின் பணி போற்றுதற்குரியது. இந்தப் சிறப்பான பணியை மேற்கொண்ட உங்களுக்கும், துணை நின்ற பெருமக்களுக்கும் வாழ்த்துகளுக்கும், நன்றியும்.

    ReplyDelete
  3. திண்டுக்கல் புத்தகத்திருவிழாவுக்குப் பேசப் போன நான், அங்கு வழங்கப்பட்டு வந்த மாணவர் புத்தகவிழா உண்டியலைப் பார்த்துவிட்டு, காலம் பார்க்காமல் இருந்து காத்திருந்து அதன் மாதிரி உண்டியல் ஒன்றைப் பெற்று வந்து தங்கம் மூர்த்தியிடம் தந்த நோக்கம் உங்கள் செயல்களால் முழுமையடைகிறது நண்பா! இதுபோல் நம் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் செய்யத் துணிந்துவிட்டால் உண்டியல் இல்லாமலே புத்தகவிழா விற்பனை உயரும் என்பதில் சந்தேகமில்லை! வாழ்த்துகள். (ஆமா கடைசிவரை அந்த முதல்வர் எவ்வளவு தொகைக்குப் பரிசு பெற்றார் என்னும் ரகசியத்தைச் சொல்லவே இல்லயே!?!)
    எப்படியாயினும் வாழ்த்துகள் ஆசிரியப் பெருமகனாருக்கும் அன்பான குழந்தைகளுக்கும்.

    ReplyDelete
  4. தோழரே!

    வீடில்லாப் புத்தகங்களைப் படிக்க வைத்ததற்கு மிக்க நன்றி.

    பச்சை வண்ணத்தில் அழகர்

    பள்ளியாற்றில் இறங்கியது நன்றாக இருந்தது.

    நன்றி.

    த.ம. 2

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தொடரட்டும் புத்தக வாசிப்பு.

    ReplyDelete

Post a Comment

வருக வருக