152 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் விண்ணியல் நிகழ்வு


152 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் விண்ணியல் நிகழ்வு ...

அம்மணி

பார்க்கவேண்டும் என்று ஒரே அடம்.
உருப்படியாக இதையாவது செய்வோமே என்று ஸ்ப்ளெண்டரை மதுரை சாலையில் திருகினேன்.



ஒருவழியாக வெள்ளாற்று பாலம் வந்தபொழுது தெரிந்தது

நீங்கள் பார்க்கலையா என்றார்

என்னுடைய நிலா பில்லியனில் இருக்கு என்றேன்

நறுக்கென்று ஒரு கொட்டுதான் மிச்சம்.

சரி அருகே இருக்கும் ராகவேந்தர் கோவிலில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று சென்றால் கோவில் வளாகங்கள் பூட்டப்பட்ட விஷயம் அப்போதுதான் தெரியும்.

இரண்டு பெண்மணிகள் கோவிலுக்கு வர விசாரித்தால் நெருங்கிய நட்பு வட்டம்!

எஸ்.பி அலுவலகத்தில் பணியில் இருக்கும் அவரின் இளைய மகன் ஒருவர் காவல்துறையில் இருப்பதாக தெரிவித்தார்.

மகிழ்ச்சியான சந்திப்பு.

புதுக்குளத்தில் அமர்ந்து பார்க்கலாம் என்றால் மரச்செறிவு...

கடுப்பில் அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளருக்கு அழைத்து எதுவும் நிகழ்வுகள் இருக்க என்றேன்

இங்கேதான் புதுக்குளத்தில் இருக்கோம் என்றார்.

அட.

கிழக்கு கரையில் அறிவியல் இயக்க தொண்டர்கள் அனைவரும் இருக்க பொதுமக்களுக்கு தொலைநோக்கி வழியாக கிரகணத்தை காட்டும் பணியை செய்துகொண்டிருந்தார்கள்.

காலையிலேயே வாட்சப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

நமக்கும் வாட்சப்புக்கும் சில ஒளியாண்டுகள் தொலைவு என்பதால் பார்க்க தவறிவிட்டேன்.

தொலைநோக்கி வழியே கிரகண நிலவை நேரில் பார்த்த நிறைவு அம்மையாருக்கு.

எதிர்பாரா சந்திப்பாக சச்சின் குழுவை சந்தித்தோம். சச்சின் இப்போது சென்னையில் அதுவும் குடும்பத்துடன். சித்தன்ன வாசல் இலக்கிய குழுவின் இரண்டு முக்கிய புள்ளிகள் இப்போது சென்னையில்.

ஆக, புதுகையின் அடுத்த தலைமுறை இலக்கிய புள்ளிகள் இப்போது சென்னையில் மையம் கொண்டிருக்கிறார்கள்.

தூயனும், வியாபி கார்த்தியும் சென்னை நோக்கி நகர்ந்தால் ஒரு நிகழ்வு முழுமை பெரும்.

பிரியத்துக்குரிய மைத்துனர் பாலகிருஷ்ணன் நீங்கள் பார்த்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவே பார்த்தேன். நல்ல அனுவபவம்தான்.

ஒரு நீண்ட நடைக்கு பிறகு பேசிக்கொண்டே திரும்பினோம்.
அறிவியல் இயக்கத்தின் தன்னார்வலர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள்

Comments

  1. வணக்கம் சகோ!

    நலமாக இருக்கின்றீர்களென உங்களின் உவகையோடிழைந்த பதிவே சான்று!..:)
    அப்படியே நலமும் வளமும் பெருக மகிழ்வோடு இருங்கள்! மகிழ்ச்சி!

    நிலாவோடு நல்ல நிகழ்வு படித்து மனம் குளிர்ந்தேன்!

    நேற்றைய பதிவு பார்த்து மௌனமாகி விலகிவிட்டேன்...
    இல்லையேல் ஓவென இங்கே இருந்து குழறியிருப்பேன் சகோ..:,(

    இதுவும் இப்படியும் கடந்து போகின்றன சில.........

    ReplyDelete
    Replies
    1. சகோ நலமா...
      மகிழ்வு உங்களை பார்த்ததில் ...
      இந்தப்பதிவு குறித்து மகிழ்வும் முந்திய பதிவு குறித்து பதறியும் பதிவிட்டிருக்கிறீர்கள்..
      உண்மையை சொல்லப்போனால் முந்தய பதிவில் குறிப்பிடப்பட்ட அலுவலர் இறுதிநொடிவரை தனது காதல் மனைவி மீது வைத்திருந்த அன்பை உணர்ந்ததால்தான் இந்தப்பதிவு சாத்தியமாயிற்று.

      ஒரு பெருந்துயர் கற்பினைகளையும் தருகிறது ...

      Delete
  2. அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.

    ReplyDelete
  3. அருமையான தகவல்

    ReplyDelete

Post a Comment

வருக வருக