பொங்கல் அன்று தங்கரத உலா


ஒன்று விட்ட அப்பத்தா ஒருவர் இயற்கையோடு கலக்க இவ்வருடம் பொங்கல் அன்அபிஷியல் பொங்கல். 

மாலை அம்மா புதுகை மாரியம்மன் கோவிலுக்கு செல்லலாம் என்று சொல்ல சென்றோம். 

எதிர்பாராவிதமாக முன்னாள் தலைமையாசிரியர் திரு.ஜி.ஜெயக்குமார் அவர்கள் பொங்கல் அன்று தங்கதேர் இழுக்கிறேன் என்ற பிரார்த்தனையை நிறைவேற்ற காத்திருந்தார். 

என்னையும் அழைத்தார். குழந்தைகளை கண்காணிப்பதே பெரும் வேலை என்பதால் வருகிறேன் என்று சொல்லி பிரார்த்தனைக்கு சென்றோம். 

பிரார்த்தனைக்கு பிறகு வெளியே வரும் பொழுது அம்மனை வெள்ளிச்சிவிகை வீசி, பதாகைகளோடு தங்கரத்தில் கொலுவிருத்தி உலாவுக்கு தயாரானார்கள். 

அம்மாவிற்கு கொள்ளை மகிழ்ச்சி. 

திருமிகு.ஜி.ஜெ அவரது குடும்பத்துடன் ரதம் இழுத்தார். 

பிறகு அம்மா சொன்ன கோவில்களுக்கு சென்றுவிட்டு இல்லம் திரும்பினோம். 




எங்கள் வீட்டின் சின்ன வால்..

மாரியம்மன் உலா காணொளி 

Comments

  1. நன்றாக இருக்கிறது...

    கீதா: தங்க ரதம் என்றால் முழுவதுமே தங்கமா?!! மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றுகிறது..கருத்துகள் உலாவருது!!!..

    ReplyDelete

Post a Comment

வருக வருக