வழக்கம் போல எழுத்தாளுமை அய்யா ராஜசுந்தர்ராஜன் அவர்களின் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த அவரது திரையனுபவம்
ஸ்கெட்ச்
__________
ஓ’ஹென்றி திருப்பம்னா என்னென்னா, கதைமுடிவுல திருப்பிப் போடுறது. அதுக்கான தமிழ் எடுத்துக்காட்டு, கடைசிவரை பசுமாட்டைப் பற்றி எழுதிவிட்டு கடைசி வரியில் அப்படியாப்பட்ட பசுமாடு கட்டப்பட்டிருந்தது இப்படியாப்பட்ட புளியமரத்தில் என்று முடிப்பது. இதோட நீதி என்னென்னா, “குழந்தைத் தொழிலாளர்களை ஊக்கப்படுத்த வேண்டா.”
என்னது இது, பசுமாடு? புளியமரம்? குழந்தைத் தொழிலாளர்கள்?
எங்க வீட்டுல ஒரு பசுமாடு இருந்ததா, எங்க கொல்லைல ஒரு புளியமரம் நின்னதா, அந்தப் பசுமாட்டை மேய்க்கிறது அல்லது அதுக்கு கூளம்போடுறது நானா, நான் அப்பொ சின்னப் பையனா, அதுதான் அது.
பசுமாடுதான் தமன்னா. மேய்க்கிறவன் விக்ரம். அவளை இவன் மேய்க்கிறதுதான் மெயின் கதை. புளியமரம் துணைக்கதை. அது என்னென்னா, கடன் வாங்குனவன் கட்டலைன்னா, கடன்ல வாங்குன வண்டியைத் தூக்குறது.
ஆனா, விக்ரம் ஒன்னும் சின்னப் பையன் இல்லையே? அங்கேதான் இருக்கு மருமம்! அது பசுமாடு மேய்க்கணும் புளியமரத்துல கட்டணும்கிற ஆசை. (மருமத்தை உடைத்துவிட்டேனோ?)
தமன்னா பற்றி ஜொள்ளிஜொள்ளி “தேவி” படத்துக்கு எழுதியிருந்தேனா, நீ மாடுமேய்ச்சது போதும்னு சேலையெக் கட்டி விட்டுட்டானுவோ இந்தப் படத்துல, நெட்டுக்கு.
‘நார்த் மெட்ராஸ்’னா, அதுலயும் ‘ரவுடி’னா, கீழ்ஜாதி பயல்னு அர்த்தம் போல! ‘சாஹித்ய யுவ புரஸ்கார்’ விருதுவாங்குன “தூப்புக்காரி” நாவல்ல, சாணாத்திக்கும் சக்கிலியனுக்கும் ஒரே தொழிலுதான். பீ அள்ளுறது. ஆனா என்ன ஆச்சு?
தமன்னா, அய்யரு பொண்ணு. அது அய்யரு பொண்ணுன்னு காட்டவேண்டிய அவசியம் என்ன? இன்னொருத்தி, ஒரே ஜாதிப் பொண்ணுதான்னு நினைக்கிறேன், இவன் படிக்கலைன்னு இவனை நிராகரிக்கிறாள்ல? அய்யரு பொண்ணுக கூறுகெட்டதுகள்னு காட்டுறதுக்கா? பாவம் சுவாதி! இதுக்குத்தானே ஆசைப்பட்டீர் இயக்குநகுமாரா?
படம் தொடங்கி, பதினைந்து நிமிஷத்துக்குள்ளயே பிரச்சனைக்கு வந்திடணும். அல்லது அரைமணிக்குள்ளாவது. இடைவேளையில் வருது பிரச்சனை. அப்படீன்னு விக்ரமே சொல்றாரு. ஆனா அந்தப் பிரச்சனைக்கும் முடிவுக்கும் சொல்லப்பட்ட நீதிக்கும் ஒரு தொடுப்பும் இல்லைன்னு படம் முடியுது.
இடைவேளைக்கு அப்புறமா பாட்டுமேல பாட்டு வந்துக்கிட்டே இருந்துச்சா, “வாழ்ந்தால் உன்னோடுதான் வாழணும்”ங்கிற பாட்டு வரியில கரென்ட் போச்சா, “யப்பா, சாமி, அந்தப் பாட்டுக்கு அப்புறமா படத்தைப் போடு!”ன்னு கூச்சல். ஆனா ஆப்பரேட்டர் மறுபடியும் மாடுமேய்க்கிற சீன்ல, அதாவது அந்தப் பாட்டுக்கு முந்தியே ஆரம்பிச்சார். “யப்பா, க்ளைமாக்ஸ் ஃபைட்டை போட்டு படத்தை முடியப்பா!” என்று கூக்குரல். நல்லவேளை, அந்தப் பாட்டு மூணு வரியோட முடிஞ்சு போச்சு.
ஆக மொத்தம், “நீ அரிசி கொண்டா! நான் உமி கொண்டாறேன். ரெண்டுபேரும் ஊதிஊதித் தின்னலாம்,” என்பதே படிப்பினை. அரசி டிக்கெட்/பார்க்கிங் பணம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரர்!
ReplyDeleteஅன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்!
இன்பத் தமிழ்போல் இனித்து!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!