தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை என்று கோஷமிடுவோர் கவனத்திற்கு


2.
சில விஷயங்கள் பொதுவெளியில் பேசப்படுவது சங்கடம்.

அப்படி ஒரு விஷயம் தனியார்பள்ளி கட்டண விகிதங்கள்.

முதற்கண் கல்வி சேவை என்று சொல்வது ஒரு போங்காட்டம்.

கல்வி சேவை என்றால் அது அரசுப்பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்தக் குழந்தைகளோடு, பல சாதிக் குழந்தைகள் ஒன்றாக நடத்தப்படும் அந்தப்பள்ளிகளில் என் பிள்ளை படிப்பதா என்கிற எண்ணத்தில்தான் தனியார்பள்ளிகளை நோக்கி ஓடுகிறார்கள்.

மேலும் ஆங்கிலம், ஆய்வகம், நூலகம் பளிச் வித்யாசம் காட்டும் சீருடை  என இன்னபிற காரணிகள்.

பிரச்னை என்ன வென்றால்.

தாம் விரும்பும் பள்ளியில் தன்னால் கட்டணம் செலுத்த முடியாது என்கிற வலிதருகிற உண்மை அறைகிறபொழுது அடுத்த பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் அதே பள்ளியில் தகராறை ஆரம்பிப்பது வழக்கமாக ஆயிருக்கிறது.

மன்னியுங்கள்.

தனியார்பள்ளிகள் சேவை செய்கின்றன என்று அவர்கள் சொல்லலாம்.

இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.

ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.

அவர்கள் சேவையை தரவேண்டும் என்றால் ஒரு அறக்கட்டளை  நிறுவி அதன் மூலம் நிதி திரட்டித்தான் தரமுடியும்.

அந்தமாதிரி அறக்கட்டளைக்கு யார் நிதி உதவி செய்வார்கள் ?

அரிதினும் அரிதான நபர்கள்.

உண்மை இப்படி இருக்க, பள்ளியை நிறுவ, ஆசிரியர் ஊதியம், பணியாளர் ஊதியம், பேருந்து, அதன் கடன் என பல்வேறு நிதித்தேவைகளை எப்படி அவர்கள் சமாளிப்பார்கள்.

அரசு ஏதும் அவர்களுக்கு நிதி தருகிறதா?

அல்லல்தான் தரும்.

ஒரே அழைப்பு உங்க பள்ளியில் இருந்து ஒரு ஐந்து லட்சம் வந்துரனும்.

அம்புட்டுதான்.

ஒரு பக்கி அமைச்சராக இருந்தால் ஓகே.  விடிஞ்சா ஒரு ஒரு புது பக்கி அமைச்சரானல். எத்துணை ஐந்து லட்சம் என்பதை கணக்கிடுங்கள்.

ஆமா, இந்த ஐந்து லட்சங்களெல்லாம்  யார் பாக்கட்டில் இருந்து உருவப்படுகிறது?

ஆக, நண்பர்கள் குரல் எழுப்பவேண்டியது எதை நோக்கி என்றால்

எந்த விதமான அங்கீகார, அதிகார அமைப்பும் லஞ்சம் கோராத ஒரு தளத்தை. அதன்மூலம் இலவசமாக பைசா செலவில்லாமல் கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெரும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

என்ன ஈர வெங்காயத்திற்கு தற்போதைய முறையில்  அங்கீகாரம்?

அங்கீகாரம் ஒரு திறந்தமுறை வெளிப்படையான தரக்குறியீட்டின் மூலம் தரப்படவேண்டும்.

இதற்கு அதிகாரிகளோ, அமைச்சர்களோ தேவை இல்லை.

யார் தரவேண்டும்?

ஒரு சேவை மனப்பான்மை உள்ள குழு.

இப்போ கட்டணக் குறைப்புக்கு கோரும் நண்பர்கள் போல பலர்.

பத்திரிக்கைகள், ஊடககங்கள், கல்வியாளர்கள் உள்ளடக்கிய குழு  போதுமே.

இதில் எதற்கு அதிகாரிகள்?

இந்த திசையில் பயணித்தால் நன்மை விளையும்.

வேலை கிடைக்காமல் வெளியில் இருக்கும் ஆசிரிய பயிற்சி பெற்ற சேவை மனப்பான்மை உள்ள இளைஞர்கள் நீங்கள் கேட்கும் குறைந்த கட்டணத்தில் கல்வி சேவையை வழங்க முன்வருவார்கள்.

இதை விடுத்தது தற்போதைய நிலையில் கட்டணக் குறைவுக்கு குரல் எழுப்புவது சரியல்ல.

உங்கள் கடையில் நீங்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு நான் எப்படி விலை வைக்க முடியும்?

கல்வி இப்போ கமாடிட்டிப்பா

1.
தற்போது நட்புக்கள் தனியார் பள்ளி கல்விக்கட்டண உயர்வை எதிர்த்துப் பதிவிட்டுவருகிறார்கள்..

நீதிமன்றம் நிர்ணயித்த தொகையைவிட அதிகமாக வசூல் செய்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு..

நான் தனியார் கல்வியை ஆதரிப்பவன் அல்ல,

இருப்பினும் இந்தப்பிரச்சனையின் இன்னொரு பக்கத்தை நாம் பேசுவதே கிடையாது..

முதலில் யார் உங்களை தனியார் பள்ளிக்கு போகச்சொன்னது...

உங்களுக்கு அங்கே இருக்கிற கட்டிடம், லாப், தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசும் சூழல், ஒருபோதும் புழக்கத்தில் விடாத அழகான கண்ணாடிப்பெட்டிகளில் அடுக்கப்பட்ட நூலகம் இத்யாதி இத்யாதி என எல்லாம் பிடித்த பிறகுதானே போகிறீர்கள்.?

அப்புறம் என்னத்துக்கு குய்யோ முய்யோ என்று கதறுகிறீர்கள் ?

அவர்கள் இடத்தில், அவர்கள் சேவைக்கு அவர்கள் கட்டணம் நிர்ணயிப்பதுதான் சரி.

தவறு என்றுவாதிட்டால்  அதைவிட குறைவான கட்டணம் வசூலிக்கும் பள்ளிக்கு சென்றுவிடவேண்டியதுதான்.

இதைவிடுத்து அவர்கள் நிறுவனத்தில் அவர்கள் வழங்கும் சேவைகளுக்கு நான் கட்டணம் நிர்ணயிப்பது முறையாகாது.

டேய் அறிவோடு பேசு

கல்வி சேவை இல்லையா? அதை இலவசமாகத்தானே தரணும்? என்கிறீர்களா ?

உங்களுக்கு கக்கன் தெரியுமா?

அரசியலை சேவையாக தவமாக செய்தவர், அந்திமத்தில் அரசுப் பொது மருத்துவமனையில் ஒரு படுக்கை கூட கிடைக்காமல் தரையில் விரிக்கப்பட்ட பாயில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்.

ஒரு தமிழனுக்கு இவர் குறித்து தெரியாது.

வெள்ளைக்காரன் இவரை அடித்து துவைத்து  ஒரு குதிரைவண்டியின்  கால் வைத்து ஏறும் படியில் உடலை வைத்து,  கைகள், கால்கள் சாலையில் இழுபட வண்டியை மதுரை தெருக்களில் செலுத்தினான்.

அப்படி தவ வாழ்வு வாழ்ந்து நமக்கு விடுதலை வாங்கித்தந்த அவரை நம் முன்னோர்கள் தோற்கடித்தனர்.

அதன் பின்விளைவுதான் இன்று காணும் சமூகம் அதன் அவலங்கள்.

இப்படி தேசத்துக்காக சேவை செய்த ஒருவரை அறியாமல் வாழும் நாம் கல்வியை சேவையாக கொடுங்கள் என்று தனியார் பள்ளி தாளார்களை கோருவது எவ்விதத்தில் நியாயம்.

சேவை செய்தால் அரசு ஆஸ்பத்திரியில் வைத்தியத்திற்கு படுக்கை கூட கிடைக்காது.

இவ்வ்ளோ சவுண்ட் கொடுக்கிறீங்க சரி

மகிழ்ச்சி

ஒரு பள்ளியை நடத்த எங்கெங்கே எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என்று தெரியுமா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு  சி.பி.எஸ்.சி பள்ளிக்கு அனுமதி பெற தண்டம் அழ ஐம்பது லட்சம் என்கின்றன சிட்டுக்குருவிகள்.

இவ்வளவு பணம் என்ன இழவுக்கு, இதில் சேவை எங்கிருந்து வரும்? எப்படி வரும்?

அப்போ நீ கொள்ளையடி, எனக்கு கொடு என்று தனியார்பள்ளிகளை சுரண்டும் மந்திரிகளையல்லவா நாம் கேள்வி கேட்கவேண்டும். (எல்லா கட்சியும் அடக்கம்)

ஒரு கல்லூரியின் தரச் சோதனைக்கு வந்த முனைவர் ஒருவர் வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.

நல்லா லாங் செயின், டாலர் வைத்து, டாலர் தொப்புள்ள இருக்கிறமாதிரி வாங்கித்தாங்க.

தாளாளர் வாங்கித்தான் தந்ததாக சொல்கிறார்கள். (ஓ பொண்டாட்டிக்கு நான் எதுக்குடா வாங்கித் தரணும் என்றெல்லாம் கேட்கவில்லை)

இந்த பக்கம் சுத்தம் செய்யப்படாமல் நாம் அந்தப்பக்கம் கட்டணக் கொள்ளை என்று ஸ்வுண்ட் விட முடியாது.

நண்பர்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

பின்னூட்டங்கள் வாயிலாக ...

Comments

  1. இங்கு இவ்வளவு சிக்கல் உள்ளதா?

    ReplyDelete
  2. ஒரு பள்ளியை நடத்த எங்கெங்கே எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என்று தெரியுமா?//

    கஸ்தூரி ரேட் கொஞ்சம் குறாய்வா சொன்னாப்புல தெரியுது...ஹா ஹா ஹா ஹா...இப்ப தெரியலை...அதாவது இப்ப தொடங்கிய பள்ளிகள் எப்படி வெட்டினாங்க வெட்டலைன்றது தெரியலை...ஏன்ன இப்ப எல்லாமே கணக்கில் வரணும்னு சொல்றதுனால...எப்படித் தொடங்கினாங்கனு தெரியலை...சிட்டுக்குருவி ஏதேனும் சொன்னால் தெரியும்..

    அடுத்து வருகிறேன். கல்லூரி தரம் பற்றியது....என் மிக மிக நெருங்கிய நபர் கல்லூரி தரக்கட்டுப்பாட்டிற்கான லேப் எல்லாம் எப்படி இருக்கிறது என்று மதிப்பிட சென்ற போது....சரியாக இல்லாதவற்றைச் சொன்ன போது...பெட்டியும், பட்டுப் புடவையும் வழங்கப்பட...இவர் மறுத்துவிட்டு வர...இவர் அப்புறம் அழைக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்....மற்றவர்களுக்கு //தாளாளர் வாங்கித்தான் தந்ததாக சொல்கிறார்கள். (ஓ பொண்டாட்டிக்கு நான் எதுக்குடா வாங்கித் தரணும் என்றெல்லாம் கேட்கவில்லை)// யெஸ் இதே இதனுடன் இன்னும் சில....அடுத்து முக்கியப் பிரமுகர்..பெரும் புள்ளி... வெளியில் சொல்ல முடியாது அவருக்கு மட்டும் சில லட்சங்கள் பெட்டி கொடுக்கப்பட்டது அது தவிர இன்னும் பல...

    சரி அடுத்து தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த பெருங்காய டப்பா பல்கலைக்கழகத்திற்கு முதல்வர் ஆவதற்கு ரேட் என்ன தெரியுமா? வெளியில் சொல்ல முடியாது...இப்போது சமீபத்தில் கோவையில் பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் பிடிபட்டது ஒரு பேராசிரியர் ஆக எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் நிறைய தெரியும் கஸ்தூரி. நம் வீட்டிலும் கல்வித்துறையில் நபர்கள் உள்ளதால். எனக்கு மிக வியப்பு, இந்தப் பிடிபடும் ஆசிரியர்களின் மனைவிகளும் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருப்பது மனதிற்கு மிகவும் வேதனை. அதுவும் நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு...வெட்கமாக இருக்கிறது. கணவன்மார்களைத் தட்டிக் கேட்கமாட்டார்களா? எப்படி அவர்களால் வாழ முடிகிறது வியப்பாக இருக்கிறது...

    கீதா

    ReplyDelete
  3. கண்டிப்பாகப் பெற்றோர் மீதுதான் குற்றம் என்பேன் நான். பள்ளியில் கொண்டு சேர்த்துவிட்டுப் பின்னர் கட்டணம் அதிகம் என்று சவுண்ட் விடுவது, போராடுவது சரியல்ல...பள்ளி தொடங்க வேண்டுமென்றால் எத்தனை சானல்களுக்கு அவர்கள் வெட்ட வேண்டும் என்று தெரியும்..எனக்கு மிக மிக நன்றாகவே தெரியும்....கல்வி என்பது சேவை இல்லை....வியாபரமாகி விட்டது என்பது உண்மை...பெற்றோர் விழித்துக் கொள்ள வேண்டும்...சொல்லிப் பயனில்லை என்றே தோன்றுகிறது கஸ்தூரி...

    கீதா

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது உண்மை. பள்ளி என்று இல்லை, இங்கு மருத்துவம் படிக்க, மருத்துவர் ஆக, சாலை போட, கட்டிட கான்டராக்ட்... எதை எடுத்தாலும் கப்பம் கட்டாமல் முடியாது. அப்புறம் ஒவ்வொன்றிலும் தரம் எப்படி எதிர்பார்க்க முடியும்?​

    ReplyDelete
  5. தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு கட்டணக்கொள்ளை என்று கூறுவது சரியில்லைதான்! அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து தனியாருக்கு செலுத்துவதில் ஒரு பத்து சதவீதம் அனைவரும் செலவழித்து அரசுப்பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

    ReplyDelete
  6. மிகச் சரியான பார்வை.
    அப்படியே அரசியல் வாதிகளை சாடியது பற்றி.

    தற்போதய கால கட்டத்தில் அரசியல் என்பது மிக செலவு பிடிக்கும் விஷயம். கொள்கை (?) பிடிப்போடு களப்பணி செய்பவர்கள் யார் இருக்கிறார்கள்? அப்படி செய்ய யாருக்கு நேரம் இருக்கிறது?

    தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள ஒவ்வொரு அரசியல் வாதியும் எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. கிடைத்த பின்னும் அதை தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது! எங்கிருந்து வரும் அந்த பணம் ? சுற்றி சுற்றி நம்மிடமிருந்து தான்!

    இப்படியெல்லாம் செலவு செய்யாத அசல் கம்யூனிஸ்ட்கள் உள்ளனர். அவர்களைப் போன்றவர்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தோற்கடித்துக்கொண்டே இருந்தால் எப்படி இதெல்லாம் மாறும் ?

    ReplyDelete
  7. மிகச் சரியான பார்வை.
    அப்படியே அரசியல் வாதிகளை சாடியது பற்றி.

    தற்போதய கால கட்டத்தில் அரசியல் என்பது மிக செலவு பிடிக்கும் விஷயம். கொள்கை (?) பிடிப்போடு களப்பணி செய்பவர்கள் யார் இருக்கிறார்கள்? அப்படி செய்ய யாருக்கு நேரம் இருக்கிறது?

    தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள ஒவ்வொரு அரசியல் வாதியும் எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. கிடைத்த பின்னும் அதை தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது! எங்கிருந்து வரும் அந்த பணம் ? சுற்றி சுற்றி நம்மிடமிருந்து தான்!

    இப்படியெல்லாம் செலவு செய்யாத அசல் கம்யூனிஸ்ட்கள் உள்ளனர். அவர்களைப் போன்றவர்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தோற்கடித்துக்கொண்டே இருந்தால் எப்படி இதெல்லாம் மாறும் ?

    ReplyDelete

Post a Comment

வருக வருக