அவன்ஜர்ஸ் இனிபினிட்டி வார்ஸ்


புகுமுன்

திரைப்பட உலகம் எனக்கு பல சமயங்களில்  ஆச்சர்யத்தையும் திகைப்பையும் கொடுத்திருகிறது.

குறிப்பாக ஐ.எம்.டி.பி டாப் 250 படங்களில் நேற்று வெளியான படங்கள் கூட இடம்பெற முடியும் என்பதை பார்த்து வியந்திருக்கிறேன்.

எல்லா காலத்துக்குமான திரை ரத்தினங்கள் என்று சில படங்களை சொல்லலாம்.  பென்ஹர், காசாபிளாங்கா, டு கில் எ மாகிங் பேர்ட் போன்ற படங்கள் அற்புதமானவை.

குறிப்பாக கிளாசிக் திரைப்படங்களை விரும்பி பார்ப்பவராக நீங்கள் இருந்தால் தவிர்க்கவே கூடாத படங்களில் ஒன்று டு கில் எ மாக்கிங் பேர்ட்.  தவிர்க்கவே தவிர்க்க கூடாத படங்களில் ஒன்று இது. 1962இல் வெளிவந்த இந்த படத்திற்கு அருகே சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இன்டெர்ஸ்டெல்லார் படம் இருக்கும். ரசிகர்களின் ரசனைக்கேற்ப பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும். பியூர் ஜெம் போன்ற படங்கள் பட்டியலில் இருந்தாலும், புதிதாக வரும் படங்களும் இணைந்துகொள்ளும்.

உங்களுக்கு திறமையும், வாய்ப்பும் இருந்தால் நீங்கள் இயக்கம் படம் கூட கட்டாயம் இந்த பட்டியலில் சேர்ந்துவிடும் என்கிற வாய்ப்பு உணர்த்துகிற உண்மை தருகிற மகிழ்வு வாவ்.

அந்தவகையில் திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் அவன்ஜர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் பாகம் ஒன்று வெறும் பதினோரு நாட்களில் பில்லியன் டாலர் வசூல் சாதனையை செய்திருக்கிறது.

ரூசோ சகோதரர்களின் படைப்பாற்றளுக்கு  இது ஒரு மகுடம்.

இப்போது அவன்ஜர்ஸ் படம் குறித்து.

அதீத பொருட்செலவில் வெளிவந்திருக்கும் படம், என்சாம்பில் காஸ்ட், (பல முன்னனணி நட்சத்திரங்களை ஒருங்கே பயன்படுதுத்தல்) அவர்களுக்கான ஊதியமே கூரையை கிழித்துவிடும் இல்லையா.

வியப்பிலும் வியப்பாக வின் டீசலுக்கு ஐம்பது மில்லியன் டாலர்கள் ஊதியமாக த்ரப்பட்டிருகிறது.

படத்தை பார்த்தோர் என்மீது கோபம் கொண்டு கேட்கலாம். படத்துல எங்க சார் இருக்கார் வின் டீசல்.

அனிமேட்டட் கதா பாத்திரமான குரூட் என்கிற மரம் பேசுகிற நான்கே நான்கு வசனங்களுக்காக இவ்வளவு பணம்.

வெறும் குரல் நடிப்புதான் என்று நீங்கள் சொன்னாலும், வின் டீசலுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் ஐம்பது மிலியன் டாலர்கள்.

அவன்ஜர் சீரிஸின் அதி முக்கியமான கதா பாத்திரங்களில் ஒன்றான பிளாக் விடோவிற்கும் முப்பத்தி ஒரு மில்லியன் டாலர்கள். ஹாலிவுட் வரலாற்றிலேயே ஒரே படத்திற்கு இவ்வளவு அதிகமாக ஊதியம் பெற்றது இவர்தான்.

இவருக்கு போய்எப்படி என்றெல்லாம் கேட்கிறார்கள். ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஒரு பாடகி என்பதும் அவருக்கென்று ஒரு வலிமையான  ரசிகர் படை உண்டு என்பதும் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதோடு கூட அம்மணிதான் ஹாலிவுட்டின் அதிக ஊதியம் பெரும் நடிகையாக 2014ம் ஆண்டிலிருந்து இருக்கிறார்.

இப்படி நட்சத்திர பட்டாளம் ஒன்றை, அவர்களின் முக்கியத்துவம் குறையாமல் ஒரு படத்தில் பயன்படுத்தும் பொழுது உற்பத்தி செலவும் அதிகரிக்கத்தானே செய்யும்.

இந்தியாவில் மட்டும் 180 கொடிகளை வசூல் செய்திருக்கும் இந்தப்படம்  இன்னும் ரஸ்யாமற்றும் சைனாவில் திரையிடப்படவில்லை. அங்கே திரையிடப்பட்டிருந்தால் இதைவிட இன்னொரு மடங்கு வசூல் செய்திருக்கும்.

இதுவரை வந்த அவன்ஜர் திரைபடங்களில் இல்லாத ஒரு சிறப்பாக இதில் வரும் வில்லன் தானோஸ் ரசிகர்களின் மனதில் நிற்கிறான்.

பிரபஞ்சத்திற்கு ஒரு எல்லை இருக்கிறது. எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும், பசியும் பட்டினியுமாக எல்லோரும் உயிரோடு இருப்பதைவிட, பாதிபேரை போட்டுத்தள்ளிவிட்டு மீதிபேர் முழு வயிறோடு சாப்பிடலாம் என்பதுதான் தேனோஸ் நம்பும் தத்துவம்.

மக்கள் தொகையை குறைப்பதை ஒரு சொடக்கில் செய்ய விரும்புகிறான் தேனோஸ். அவனக்கு அந்த சக்தியை தரும் இன்பினிட்டி கற்களை தேடி அடைகிறான்.

இந்த திட்டத்தை அவன்ஜர்ஸ் ஏற்காமல் அவனோடு மோதுகிறார்கள்.

என்ன ஆனது என்பதுதான் கதை.

படத்தின் வி.எப்.எக்ஸ் அருமையோ அருமை என்றால் இசை அதேபோல.

திரக்கதை எழுதியவர்கள் குறித்து தனியாகவே எழுதலாம். இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு திரைக்கதையை வடிவமைக்கிறார்கள். பிறகு திரைபடம் எடுக்கத் துவங்குகிறார்கள்.

படத்தில் மிக மிக அழுத்தமான காட்சிகளில் ஒன்றான, தொனோஸ் தன்னுடைய மகள், கமொரவுடன் பேசுவதும், அதனைத் தொடர்ந்து அவனக்கு ஆன்மாவை கட்டுப்படுத்தும் சோல்ஸ்டோன் கிடைப்பதும் மிக சென்டிமென்டாக படமாக்கப்பட்டிருகிறது.

 வர்ணங்கள் முப்பரிமாணத்தில் விளயாடும், பார்வையாளர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் விதத்தில் படம் இருக்கிறது.

குழந்தைகள் இருந்தால் தவிர்க்காமல் பார்க்கவேண்டிய படம்.


Comments

  1. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம் நண்பரே

    ReplyDelete

Post a Comment

வருக வருக