இந்திய அரசு யாருக்கான அரசு?

இந்திய அரசு யாருக்கான அரசு?
படியுங்கள் - பகிருங்கள்
(என்னை டேக் செய்யாதீர்கள். யார் வேண்டுமானாலும் காபி-பேஸ்ட் செய்யுங்கள்.)
மத்திய அரசுக்கு தென் மாநிலங்கள் பற்றி சிறிதும் அக்கறை இல்லை என்பது மட்டுமல்ல, தென் மாநிலங்கள்மீது கடும் வெறுப்பும் உண்டு என்ற கருத்துக்கே வர வேண்டியிருக்கிறது.


ஏன்?
பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புக்கு உள்ளான கேரளத்துக்கு வெறும் நூறு கோடியும், பிறகு 500 கோடி வரையும் மட்டுமே நிவாரணம் அளித்துள்ளது.
அரிசி தருவோம், ஆனால் அதற்கான தொகையை நிவாரண உதவியிலிருந்து பிடித்துக் கொள்வோம் என்பது அராஜகத்தின் உச்சம்.
அது போக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்க முன்வந்த 700 கோடி ரூபாய் உதவியை மறுத்திருக்கிறது மத்திய அரசு.
இதற்கு, வெளிநாட்டு உதவியை வாங்குவதில்லை என்பது கொள்கை முடிவு என்று சப்பைக்கட்டு கட்டுகிறது.
நக்கித் தின்னும் ஊடகங்களும் இதற்கு சப்பைக்கட்டு கட்டுகின்றன.
உண்மையில் கொள்கை முடிவு எப்படி இருக்கிறது?
தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் என்ன சொல்கிறது?
சர்வதேச ஒத்துழைப்பு என்ற 9ஆம் அத்தியாயத்தைப் பார்ப்போம்.
9.2 Accepting Foreign Assistance
As a matter of policy, the Government of India does not issue any appeal for foreign assistance in the wake of a disaster. However, if the national government of another country voluntarily offers assistance as a goodwill gesture in solidarity with the disaster victims, the Central Government may accept the offer. The Ministry of Home Affairs, Government of India is required to coordinate with the Ministry of External Affairs, Government of India, which is primarily responsible for reviewing foreign offers of assistance and channelizing the same. In consultation with the concerned State Government, the MHA will assess the response requirements that the foreign teams can provide.
அன்னிய உதவியை ஏற்றுக்கொள்ளுதல்
பேரிடர் நிகழும்போது வெளிநாடுகளின் உதவியைக் கோருவதில்லை என்பதை இந்திய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது. ஆயினும், வேறொரு நாட்டின் அரசு நல்லெண்ண நோக்கத்துடன், பேரிடர் பாதித்த மக்களின் நலனுக்காக தன்னார்வத்துடன் உதவ முன்வந்தால், மத்திய அரசு அதை ஏற்கலாம். இத்தகைய வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகளைப் பரிசீலிக்கும் பொறுப்புள்ள வெளியுறவு அமைச்சகத்துடன் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதை முறையாக வழிநடத்த வேண்டும். வெளிநாடு வழங்கக்கூடிய உதவிகளைக் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் ஆலோசித்து, உள்துறை அமைச்சகம் மதிப்பீடு செய்யும்.
— இது ஏதோ பழைய செய்தி அல்ல. 2016 மே மாதத்திய அறிக்கை. வழக்கம்போல சுயவிளம்பரப் பிரியரான மோடியின் படத்துடன், வாழ்த்துச் செய்தியுடன் வெளிவந்திருக்கிற பேரிடர் மேலாண்மைத் திட்ட அறிக்கையின் 145ஆம் பக்கத்தில் உள்ள தகவல். (லின்க் முதல் கமென்ட்டில்)
ஆக, இதிலிருந்து தெரிவது என்ன?
• மத்திய அரசு சொன்ன கொள்கை முடிவு என்பது அப்பட்டமான பொய்.
• உதவியைப் பெறுவதில்லை என்பது கொள்கை முடிவு அல்ல.
• உதவி கோருவதில்லை என்பதே கொள்கை முடிவு.
• தானாகக் கோருவதில்லை, கிடைத்தால் ஏற்பதில் தவறில்லை என்பதே கொள்கை.
இப்படியிருக்கையில், யுஏஈ கொடுக்க முன்வந்த 700 கோடியை மறுப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
கேரள அரசின் மீதான - கேரள மக்கள் மீதான வெறுப்பு தவிர, வேறு காரணம் இருக்க முடியுமா?
சொந்த நாட்டு மக்கள் துன்பத்தில் சாகும்போது அவர்களுக்கான உதவிக் கரமும் நீட்டாமல், நீளும் உதவிக் கரங்களையும் மடக்கிப் பிடிக்கிறது என்றால் அது அரசு அல்ல. அதுதான் பேரிடர்.
என்ன செய்யப்போகிறீர்கள் நண்பர்களே?

--
இது பெரியவர் ஷாஜகான் அவர்கள் எழுதிய பதிவு 

நண்பர்கள் பகிரவும் 

Comments

Post a Comment

வருக வருக