வெனிசூலாவும் நாமும்...Venezuela VS India



நேற்று பத்திரிக்கை காமில் தோழர் குமரேசன் அசாக் அவர்களின் கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது.



வெனிசூலாவின் பெட்ரோல் விலை நிர்ணய கொள்கை குறித்து பேசியது கட்டுரை.

வெனிசூலாவின் வெற்றிக்காரணம் ஹூகோ சாவேஸ் என்கிற ஒப்பற்ற தலைவன் மட்டுமல்ல அந்த தலைவனை தேர்ந்தெடுத்த மக்கள், அவர்கள் ஒட்டுமொத்தமாக பின்பற்றும் இடதுசாரி சிந்தனைத்தளம் என்பதும் வியப்பு.

அத்துணை மாய விளம்பர வலைகளையும் மீறி சாவேசை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், அதன் பலன்தான் சாவேஸ் எடுத்த கொள்கை முடிவுகள்.

அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த தன் நாட்டின் கச்சா எண்ணையை தேசிய உடமையாக்கி டீசல் விலையைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கிறார்.

பெட்ரோல் .72 பைசா, டீசல் 58 பைசா மட்டுமே. விலை உயர்வெல்லாம் பெட்ரோலுக்கு மட்டுமே. டீசல் விலை உயர்வை தவிர்க்கிறார்கள். காரணம் மக்கள் நலன். ஏனைய எல்லாப் பொருட்களின் விலையும் ஏறும் என்கிற கொள்கை.

தனது பதினான்கு ஆண்டு ஆட்சிகாலத்தில் தோழர். சாவேஸ் கொள்கை முடிவுகளை மக்களுக்கு சாதகமாக மாற்றி, ஒரு தளத்தை ஏற்படுத்திவிட்டார்.

அவருக்கு பின்னே பொறுப்புக்கு வந்தவர்களும் அவரின் கொள்கை முடிவுகளை தொடர்கிறார்கள். காரணம் மக்களின் சிந்தனைத்தளம்.

இந்திய மக்களாட்சியின் மிகப்பெரிய சாபக்கேடுகளில் பொறுப்பற்ற வாக்காளர்ளாகிய நாம்தான்.

திரையரங்கில் தேசியகீதத்திற்கு எழுந்து நிற்பது மட்டுமல்ல தேசபக்தி.

வாக்கை சரியான வேட்பாளருக்கு அளிப்பதும்தான்.

அன்பன்
மது

கட்டுரையின் இணைப்பு 

Comments

  1. இந்திய மக்களாட்சியின் மிகப்பெரிய சாபக்கேடுகளில் பொறுப்பற்ற வாக்காளர்ளாகிய நாம்தான்.

    உண்மை
    உண்மை

    ReplyDelete
  2. வெனிசூலா என்றால் சாவேஸ்தான் நினைவிற்கு வருவார். அடுத்து நினைவிற்கு வருவது பீடல் காஸ்ட்ரோவுடனான அவரது நட்பும், வாசிப்பும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக