மணிகண்டன் ஆறுமுகம் என்கிற தனிமனித ராணுவம்.



மணியிடம் ஒரு பெரும் குறை உண்டு. அது எதைச் செய்தாலும் உயிரைக் கொடுத்து செய்வது. தமிழ்நாடு ஆசிரிய முன்னேற்றச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரு பெரும் அணியை களத்தில் இறக்கிவிட்டார். டெல்டா பகுதிகளில் இவர் போல இடையறாது களத்தில் சுலன்றவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.



பல ஆண்டுகளுக்கு முன்னால் மணி குறித்து ஒரு நண்பர் சொன்னதுதான் "டேய், அவன் வெறி பிடிச்சவன்". வெறி நல்லதுதான். தமிழுக்கு, உரிமைப் போராட்டத்திற்கு, தமிழர் தொல்லியல் தேடலுக்கு, சக மனிதனின் துயர் துடைக்கும் மனிதநேயப் பணிகளில் வெறி இருப்பது நல்லதுதான்.

ஏன் இப்படி சொல்கிறேன் என்பவர்கள் மணியின் முகநூல் காலக்கோட்டிற்குச் சென்றால் "யோவ் இவன் மனுசனா மிஷினா?" என்று கட்டாயம் கேட்பார்கள்.

சராசரி மனித சேவை எல்லைகளை அனாயாசமாக நீட்டிதிருக்கிறார் மணி.

சான்சே இல்லை.












தம்பி என்பதில் கூடுதல் செருக்கு.


தொடர்வோம்
அன்பன்
மது

Comments

Post a Comment

வருக வருக