நவீன், ஜோ விஜய், நியாஸ், இப்ராஹிம், ராமகிருஷ்ணன் என புதுகையின் அடுத்த தலைமுறை இளைஞர்களை கொண்டு துவக்கப்பட்ட அமைப்பு போப்ஸ்.
புதுகையின் நீர் ஆதரத்தை அழிக்கும் நீருருஞ்சி மரங்களை அகற்றக் கோரி களம் புகுந்த அமைப்பு. தொடர்ந்த பல்வேறு மக்கட் சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது.
கஜா தினங்களில் புதுகையின் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் பயணித்து மீட்பிலும் நிவாரணத்திலும் ஈடுபட்ட குழுக்களில் ஒன்று.
ஒவ்வொரு கிராமத்தையும் பார்வையிட்டு, சேதங்களை அலசி ஆராய்ந்து, உண்மையான சேதத்தையும், பயனாளிகளையும் இனம் கண்டு நிவாரணம் வழங்கிய குழு.
பொறுப்புடன் நடந்து கொண்ட அமைப்பில் ஒன்று போப்ஸ்.
போப்ஸின் ஜோ.விஜய் வீடே வெள்ளத்தில் இருக்க, கஜா விடைபெற்ற மூன்று மணிநேரங்களில் களத்தில் இருந்தார். அதே போல தங்கள் வீடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து வருந்தாது மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளைச் செய்தது.
தற்போது மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பின் செயல்பாடுகளை அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து தருகிறேன்.
போற்றத்தக்கவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete