கஜா நாயகர்கள்

ஆம்பல் குழு

ஒரு இலக்கிய குழு, கவிஞர்கள் அரங்கு என்ன செய்யலாம்.



தீவிர இலக்கியம் பேசி, போஸ்ட் மாடர்னிச கவிதைகளை கதைக்கலாம். ஆனால் ஆம்பல் குழு கஜா தினங்களில் செய்த மீட்புப் பணிகள் அவர்களின் கவிதையின் ஈரம் போலவே அத்துணை நெகிழ்வு. ஆம்பல் யாழி கிரிதரன், ஆம்பல் கனிமொழி, ஆம்பல் சுரேஷ் என அத்துணை கவிஞர்களும் களத்தில் இருந்தது நெகிழ்வு.

நன்றிகள் அவர்களுக்கு.

அன்பு நண்பர்கள்

புதுகை அன்பு ஆட்டோ ஸ்பேர்ஸ் உரிமையாளர் அன்பு தனது நண்பர்கள் குழுவினரோடு களத்தில் இருந்தார். கீரமங்கலம், பேராவூரணி பகுதியில் மீட்புப் பணிகளில் இருந்தார்கள். கவிஞர் சுரேஷ் உள்ளிட்ட நண்பர்கள் இந்த பகுதி மக்களைச் சந்தித்து மீட்புப் பணிகளைச் செய்தார்கள்.

இக்குழுவின்  மோகன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் பத்மநாபன் ஒரு நெகிழ்வான அனுபவத்தை பகிர்ந்தார். மீட்புப் பணிகளுக்கு செல்லும் பொழுது இவரது வீட்டின் அருகே இருந்த இட்டலி மாவு உற்பத்தியாளரிடம் மூவாயிரம் ரூபாய்களுக்கு மாவு பாக்கட்டுகளை கோரியிருக்கிறார். அவரோ மீட்புப் பணிகளுக்கு என்றால் பணம் பெறமாட்டேன் என்னுடைய பங்களிப்பாக இருக்கட்டும் என்று சொல்லி மூவாயிரம் ரூபாய் மதிப்பிலான மாவுப் பாக்கட்டுகளை இலவசமாகவே அளித்திருகிறார். ஈரம் எல்லோரிடமுமே இருக்கிறது. என்ன அது வெளிவர ஒரு பேரிடர் தேவைப்படுகிறது.

அன்புவிடம் பேசிகொண்டிருந்த பொழுது அவர் புரிந்துகொண்ட விசயங்களைச் சொன்னார்.

இப்போது டெல்டாவிற்கு தேவை வேலிஅமைப்புகளும், தென்னம் கன்றுக்களும்தான்.

அன்புவிற்கு புரிந்தது அரசுக்கு புரிந்தால் நலமே.

தொடர்வோம்
அன்பன்
மது

Comments

  1. எத்தனை எத்தனை நபர்கள் இப்படி உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. இவர்களை ஒன்றிணைக்க ஒரு திட்டம் இருக்கிறது

      Delete

Post a Comment

வருக வருக