சதீஷ்குமார் பசுமை தேசம்
புதுகையின் ஆற்றல் மிகு பசுமை செயல்பாட்டாளர்களில் முன்னணியில் இருப்பவர். கஜா தினங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் சுழன்றவர்.
பசுமை தேசம் எனும் அமைப்பின் மூலம் கோடிக்கணக்கில் மரக்கன்றுகளை நட துவங்கியிருப்பவர். கந்தர்வகோட்டை என்றாலும் புதுகையின் தவிர்க்க முடியாத பசுமை ஆர்வலர்களில் ஒருவர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, தைல மரங்கள் ஒழிப்பு, என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இருப்பவர். காவிரி நீர்க் குழாய் உடைத்துக் கொண்டால் கூட உடனே நடவடிக்கையில் இறங்கி அதை செப்பனிடுவது இவர் பாணி.
ஊருக்கு உழைத்திடல் யோகம் என்பதின் இன்றய முகம் சதீஷ் குமார்.
கருணாகரன் ராமையா
ரோட்டரியன் கருணாகரன் ராமையா அவர்கள் தனிமனித ராணுவமாக செயல்பட்டு ஆலங்குடி, முத்தன் பள்ளம் போன்ற பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அயல் நாடுகளில் இருக்கும் இவருடைய நண்பர்கள் தாங்களே முன்வந்து இவருக்கு நிதியளித்து, சேவை செய்யப்படவேண்டிய கிராமங்களையும் சொல்லிவிட இவர் களத்தில் பணியாற்றினார்.
இவர் இப்படி பணியாற்றிய விசயமே இங்கே பலருக்கு தெரியாது.
வாழ்த்துகள் ரோட்டரியன் கருணா.

கஜா நாயகர்கள் - அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteநீண்ட நாள் கலைத்து போஸ்ட் செய்தாலும் அவசியம் பதிய வேண்டிய செய்தி என்று உணர்ந்ததால் பதிந்தேன். ஒவ்வொரு இற்றையிலும் பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றிகள். உண்மையில் பின்னூட்டங்களுக்கு அல்ல வரலாற்றின் ஒரு சிறிய துண்டை பதிவு செய்வது அவசியம் எனவேதான் செய்தேன். நன்றிகள்
Deleteகழித்து
Delete