முதல் இடத்தை பெற்ற கட்டுரை. ஒரு மாணவியால் எழுதப்பட்டது.
என்னுடைய அப்பா ஹீரோ.
என் வாழ்வில் முதல் ஹீரோ என் அப்பா. ஏன்னா அவர் எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுப்பார். நான் எதுவும் கேட்கவில்லை என்றாலும் அவரா வாங்கிக் கொடுப்பார்.
எனக்கு அண்ணனா, அக்காவா, அம்மாவா, அப்பாவா, தம்பியா, தோழனா, தோழியா என்கூடப் பழகுவார்.
எனக்கு எல்லா இடத்திலும் உறுதுணையாக இருந்தவர், என் கூடவே இருந்திட்டு என்னை விட்டு விட்டு வெளிநாடு செல்லும் பொழுதுதான் நான் முதல் முதலில் அழுதேன். அதுவரை ஒருநாள் கூட கண் கலங்க விடமாட்டார். கண் கலங்கவே தெரியாது எனக்கு.
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதுதான் என்னைவிட்டு வெளிநாடு போனார் அப்பா. வெளியூர் போகும் பொழுது அவர் எங்கே போறாருன்னு தெரியாது. ஆனா என்னை விட்டு போறார்னு தெரியும்.
ஆனா அவர் போயிட்டு நாளை வந்துருவேன், மறுநாள் வந்துருவேன்னு சொல்லிட்டு போனார். ஆனால் வரவேயில்லை.
அவர் வருவார் வருவார்ன்னு வாசலை எட்டிப் பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆனா அவர் எனக்கு விவரம் தெரிஞ்ச பிறகுதான் வந்தாரு.
அப்போ எனக்கு அவர அடையாளம் தெரியல.
நான் கேட்டேன் யாரு நீங்கன்னு?
அப்போ அவர் சொன்னார் உன்னோட மகன் வந்துருக்கேன் அப்படீன்னு சொன்னார்.
முதலில் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
ஏன்னா எங்க அப்பா என்னை அம்மான்னுதான் கூப்பிடுவார். அப்படி கூப்பிடுவதை அம்மா போனில் காலையிலும், இரவிலும் போட்டு போட்டு காட்டியிருக்காங்க.
அதில் கேட்ட அதே குரல்.
உடனே அழுதுகிட்டே அப்பா என்று சொல்லிக்கொண்டு அவரை அணைத்துக்கொண்டேன்.
விவரம் தெரிஞ்சு அழுத கடைசி அழுகை அதுதான். அதன் பிறகு பலதடவை அழுதிருக்கிறேன்தான். ஆனால் அன்று நான் அழுதது போல வேறு எதுவும் இருக்காது.
என்னை பள்ளிகூடத்தில் சேர்த்தார். மிதிவண்டி ஓட்டக் கற்றுகொடுத்தார். நிறைய கதைகள் சொல்வார். நானும் அவர்கூட சண்டை போடுவேன். அதுக்கப்புறம் என் அப்பாகூட இருக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பேன்.
எனக்கு என் அப்பாவைத் தவிர வேறு உலகம் இல்லை.
My father is God.
My father is Great.
My father is pokkisham.
என் அப்பா எனக்கு கடவுள் கொடுத்த பரிசு அதை நான் எப்போதும் நான் என்னைவிட்டுப் போக விட மாட்டேன்.
இப்படிக்கு உன் அம்மா (அம்மா என்கிற வார்த்தை அடிக்கப்பட்டு) மகள்.
(பெயர் எதுக்கு)...
மாணவியின் கட்டுரை அருமையான கட்டுரை, கஸ்தூரி. மனதை நெகிழ்த்திய கட்டுரை. அவளை அம்மா என்று அழைத்த அப்பா...(இது போன்று வேறு எங்கோ வாசித்த நினைவும்...)
ReplyDeleteவாழ்த்துகள் மானவிக்கு. இப்படி நீங்கள் கொடுத்த ஒரு வித்தியாசமான தலைப்பு எத்தனை உணர்வுகளை எழுப்பியிருக்கிறது!
கீதா
சீனா ஐயா அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்
துளசிதரன், கீதா
அருமையான கட்டுரை. மனதைத் தொட்டது...
ReplyDelete