முகமது இப்ராஹீம் குழு
இபு என்று அறிமுகமானவன். எனது மாணவர் முகமது பாரூக்கின் உடன் பிறந்த சகோதரர். புதுகையின் பெரும் வணிக அடையாளமான கலைமான் புகையிலை குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இபு மீட்புப் பணிகளில் காட்டிய நேர்த்தி அவன் ஒரு எம்.பி.ஏ என்பதை உணர்த்தியது. கோரிக்கை வரும் கிராமங்களுக்கு சென்று களத்தை ஆய்ந்து தேவையை பட்டியலிட்டு பின்னர் தன்னுடைய குழுவினரோடு அங்கே சென்று ஓசையின்றி வழங்கிவிட்டு வருவது இவர் பாணி.
இந்தக் குழுவில் இருந்த நண்பர் விதைக்கலாம் சுகந்தன், யூ.கே.கார்த்தி மற்றும் நண்பர்கள் அருமையாக செயல்பட்டனர். இதைவிட நெகிழ்வான விஷயம் என்னவென்றால் இந்தக் குழுவினால் நிவாரணப் பொருட்களைப் பெற்ற தோப்புக் கொள்ளை ஈழ ஏதிலியர் முகாமைச் சேர்ந்த நண்பர்கள் இன்று எங்களுக்கு உதவினீர்கள். நாளை முதல் நாங்களும் உங்களுடன் தன்ஆர்வலர்களாக வருகிறோம் என்று வந்திருந்தார்கள். நான் பணியாற்றும் பள்ளிக்கு அருகே உள்ள கிராமத்திற்கு வழங்கல் நிகழ்வுக்கு வரும் பொழுது என்னை ஒரு நிபந்தனையுடன் அழைத்தார்.
நிபந்தனை என்னவென்றால்.
போட்டோ வேண்டாமே.
சிரித்துக் கொண்டேன்.
இதைவிட நெகிழ்வு இவர்கள் குழுவில் தன்னார்வலர்களாக இணைந்து கொண்ட தோப்புக் கொள்ளை ஈழ தமிழர் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள். முதல் நாள் தங்களுக்கு நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டோர் தாங்களும் நிவாரணப் பணியில் பங்கு பெறவேண்டும் என்று தானாக முன்வந்து இபு குழுவில் இணைந்து பணியாற்றியது நெகிழ்வு.
தொடர்வோம்
மது
எல்லைப்பட்டியில் இபு குழு பணியில் |

முதல் நாள் நிவாரணம் பெற்றவர்களும் அடுத்த நாள் உதவ முன் வந்ததில் தெரிகிறது அவர்கள் பெருந்தன்மை. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteநன்றிகள் பயணச்சித்தரே
Deleteமகிழ்ந்தேன் நண்பரே
ReplyDeleteநன்றி அய்யா
Deleteபாராட்டத்தக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் பணியைப் பகிர்ந்தமை இன்னும் சிறப்பு.
ReplyDeleteநன்றி விக்கி நாயகரே
Deleteபரவும் நல்லெண்ணங்கள். பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteவருக வருக
Deleteவருகைக்கு நன்றி
வணக்கம்