Katherine Langford, Next Iron Woman |
ஜான் டன் அவர் வாழ்நாள் காலத்தில் சிறைப்படவும் செய்தார், உச்ச நிலையில் வைத்துக் ஆரதிக்கவும்பட்டார். ஓவியர் வான்கா அவர் வாழ்நாள் காலத்தில் ஒருபோதும் கொண்டாடப்படவில்லை. கடும் வருத்ததோடு அவர் தற்கொலை செய்துகொண்டார்.
காமிக் உலகின் பெரும் படைப்பாளுமையான ஸ்டான்லி மார்வல் காமிக் நிறுவனத்திற்கு புதிய கதாபாத்திரங்களை படைத்து வழங்கினார். அமெரிக்கச் சமூகத்தினரிடம் அவை பெரும் வரவேற்பைப் பெற்றன.
இன்று நாம் கைதட்டி ரசிக்கும் பல கதாபாத்திரங்கள் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன என்பதை அறிந்தால் மயக்கமேவரும்.
1968இல் டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் #39 என்கிற காமிக்ஸில்தான் அயர்ன்மேன் பாத்திரம் முதலில் அறிமுகமானது.
டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் 39 |
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 1968இல் அறிமுகமான ஒரு பத்திரம் 2019இல் ஒரே நாளில் ஒரு பில்லியன் டாலர் வசூல் செய்யும் படத்தில் இருக்கிறது என்றால்?
ராபர்ட் டௌனி ஜூனியர் என்ட்கேமில் அயர்ன் மேனாக |
வாவ் இல்லையா?
கடந்த பதினேழு திரைப்படங்களையும் ஒன்றாக இணைத்து மாஸ் படம் ஒன்றைக்கொடுத்து, அதில் அயர்ன் மேனை வழியனுப்பி வைக்கிறார்கள்.
அயர்ன் மேன் பாத்திரம் அமெரிக்காவின் பாதுகாப்பு கேடையமாக சுழலும் விஜிலாண்டி. அயர்ன் மேன் என்பது ஒரு கவச உடை, ஆர்க் ரியாக்ட்டர் ஒன்றின் மூலம் சக்தி அளிக்கப்பட்டு பறக்க, தாக்க, ஏவுகணைகளை ஏவ என பல்வேறு சக்திகளை டோனி என்கிற சாதாரண மனிதனுக்கு வழங்கும்.
இந்தப் பாத்திரத்தில் வாழ்ந்த ! ராபர் டௌனிங் ஜூனியர் தன்னுடைய அசாத்தியமான நடிப்புத் திறனால் இந்தப் பாத்திரத்தை உலகெங்கும் கொண்டு சென்று சர்வதேச நட்சத்திரமானார்.
டோனியை சாதாரண மனிதன் என்று உடல்தகுதியைவைத்துச் சொல்லலாமே தவிர, அவனுக்கு இருக்கும் கற்பனைத்திறன், படைப்புத்திறன், முன் யூகிப்புத்திறன், இவற்றைவிட எதைப்பற்றியும் கவலைப்படாமல் தாக்குதலில் இறங்குவது என ஒரு ஜீனியஸ் எக்சன்ட்டிரிக் அவன்.
சொல்லப்போனால் மார்வல் யுனிவர்ஸில் உள்ளதிலேயே அறிவுசார் ஆய்வுகளில், டோனியின் இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது.
டோனிக்கு அளவில்லா பணத்தை அள்ளி வழங்க அவன் நிறுவனம் ஸ்டார்க் இண்டஸ்ட்டிரீஸ் அமெரிக்காவிற்கான போர் ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருப்பதும் ஒரு காரணம்.
இதைவிட சிறப்பு டோனியிடம் இருக்கும் ஜார்விஸ், (Just A Rather Very Intelligent System). பின்னர் F.R.I.D.A.Y.. டோனியின் குரல் கட்டளைகளுக்கு இயங்கும் இவை சூப்பர் கம்பியூட்டர்கள். டோனியின் ஆய்வை வெகு எளிமையாக்கி அவனை மற்ற அவன்ஜர்களுக்கு முன் நிறுத்துவதில் இந்த கணிப்பொறி நிரல்களுக்கு பங்கு அதிகம். செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த கணிப்பொறிகள் உலகில் எந்த மூளையில் டோனி இருந்தாலும் அவன் கட்டளையை நிறைவேற்றக்கூடிய வல்லமை கொண்டவை!
இப்படி சர்வ பலம்மிக்க அயர்ன்மேன் பூமியைக் காக்கும் போரில் தானோஸிடமிருந்து இன்பினிட்டி கற்களை லவட்டி அவனை அழிக்கிறான். இனிபினிட்டி கற்கள் சக்தி மிகுந்தவை என்பதால் அவன் அவற்றின் சக்தி தாங்காமல் மரிக்கிறான்.
ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பட்டைய கிளப்பும் கதாபாத்திரத்தை கொல்ல முயல்வதே திடுக்கிட வைக்கும். ஆனால் இயக்குனர் ரூசோ சகோதரர்கள் ஜஸ்ட் லைக்தட் போட்டுத் தள்ளிவிட்டார்கள்.
இந்த கனமான முடிவுதான் படத்தின் வசூலுக்கு காரணம் என்பதையும் மறுக்க முடியாது.
இனி அயர்ன்மேன் வரமாட்டானா?
மார்வல் யுனிவர்சின் மிக பலமான கதாபாத்திரங்களில் ஒன்று அயர்ன்மேன். வரமால் இருக்க வாய்ப்பே இல்லை.
அதே வேளையில் மார்வல் நிறுவனம் எங் அவன்ஜர்ஸ் என்கிற புதிய பாத்திரங்களை களமிறக்கப்போகிறது.
அயர்மேன் 3இல் ஹார்லி கீனர் என்கிற சிறுவன் ஒரு குட்டி ஸ்டார்க் போல அசத்தியிருப்பான். படத்தின் முடிவில் அவனது லாபை அசத்தல் தரத்திற்கு உயர்தியிருப்பார் டோனி.
இந்த பையன் டோனியின் ஈமதிற்கு வந்திருப்பதை என்ட்கேமின் இறுதியில் பார்த்தோம்.
இவன் யங் அவன்ஜர் பட்டியலில் கட்டாயம் வருவான் என்று நம்பலாம். அயர்ன் மேன் 3இல் குட்டிப் பையனாக இருந்தவன் இன்று டீனேஜ் பையனாக இருப்பதும் இதை உறுதி செய்கிறது.
பெப்பர் பாட்ஸ், டோனியை போலவே ஒரு சூட் வைத்திருந்தாலும், அடப் போங்கப்பா எனக்கு ஐம்பது வயதுக்கு மேலாச்சு, அயர்ன் வுமனாவது ஒன்னாவது, இனி நான் நடிக்கவே போவதில்லை என்கிறமாதிரி பேசியிருக்கிறார்.
அதே போல அயர்ன் மெனின் குழந்தை ஜிஞ்சர், குழந்தையாக இருந்தாலும் அயர்ன் மெனின் மகளாக நடிக்க காத்தரின் லாங்க்போர்ட் என்கிற நடிகையை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வருகிறது.
தற்போது மார்வல் ஒன்பது (என்னடாப்பா ராசி) படங்களை தயாரித்துவருகிறது, எடர்ணல்ஸ், கார்டியன்ஸ் ஆப் தி காலக்சி 3 என்கிற படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
ராபர்ட் டௌனி ஜூனியர் இனி கேமியோ ரோல்களில் மார்வல் வரிசைப் படங்களில் வரலாம்.
அதே போல இருக்கவே இருக்கு ஆண்ட் மேனின் டைம் ஹீஸ்ட் மெஷின்.
சோல் ஸ்டோனுக்காக தானோஸ் அர்பணித்த கமோரா இந்த பாகத்தில் உயிரோடு வருவது போல, அயர்ன் மேன், காப்டன் அமெரிக்கா, பிளாக்விடோ மீண்டும் வரலாம். வாய்ப்புகள் இல்லை என்று சொல்லவும் முடியாது.
அதே போல தனோஸ் கழுத்தை ஒடித்துப் போட்ட லோகி ஸ்பேஸ் ஸ்டோனை எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டதும் கவனத்திற்குறியது. இது கதைப்படியே ஒரு ரோக் டைம் லைனை உருவாக்கியிருக்கிறது.
எது எப்படியோ சர்வதேச அயர்ன் மேன் ரசிகர்கள் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை.
மார்வல் பதிவுகள் தொடரும்
அன்பன்
மது
இந்தப் படம் பற்றி இப்போது பரவும் விளம்பரங்கள் முன்பு இருக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் இந்த சீரிஸில் இதைப் படமுமே பார்த்ததில்லை.
ReplyDeleteமுதலில் வந்த படங்களை பார்க்காமல் இந்தப்படத்தை பார்த்தல் கனேக்ஷன் இருக்காது.
Deleteநான் தொடர்ந்து பார்ப்பதால் ரசிக்கிறேன்