Avengers End Game |
எமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.
இந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்? என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.
பெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.
ரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.
தானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.
உணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.
ஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே?
அவன்ஜர்ஸ் ஒரு திட்டம் தீட்டி கற்களை மீட்க முயன்றால் அதையும் தானோஸ் தெரிந்துகொள்ளும் இடத்தில் படம் திகில் திருப்பத்தை எடுக்கிறது.
படத்தின் நல்ல விஷயங்கள் என்று பார்த்தால் ஹல்க் ப்ரபசர் ஹல்க்காக மாறியிருப்பது, ஒரு டைம் ஹீஸ்ட் கிடைப்பது என பல விசயங்கள் இன்னொரு இருபது வருடங்களுக்கு மார்வல் படங்களை வாழவைக்கும்.
டைம் ஹீஸ்ட் என்கிற விசயத்தின் மூலம் பழைய கதாபாத்திரங்களை உயிர்பிக்க முடியும் என்று காட்டியிருப்பது, எந்த கதாபாத்திரமும் மீண்டும் திரைக்கு வரும் அன்றைய ரசிகர்களின் தேவைக்கு ஏற்ப என்கிற கிரியேடிவ் லைசன்ஸ் ஒன்றும் இருக்கிறது.
மார்வல் யூனிவர்சின் அத்துணை கதாபாத்திரங்களும் இங்கே திரைப்படத்தில் அட்டடென்ஸ் போட்டிருக்கிறார்கள்.
படத்தின் பாதியில் ஒரு அதிமுக்கிய கதா பாத்திரத்தை இழக்கிறார்கள், அதே போல இறுதியில் ஒரு மெகா திருப்பத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் விடைபெறுகிறார்கள்.
ஆனால், டயம் ஹீஸ்ட் நுட்பத்தின் மூலம் யாரை வேண்டுமானாலும் உயிர்பிக்க முடியும் என்பதையும் சொல்லியிருக்கிறது கதை.
இந்த கோடையில் மார்வல் தந்திருக்கும் படம் ஒரு சிறிய இளைப்பாறல்.
ஒரு மாதத்திற்கு இப்படம் வசூலில் முன்னணியில் இருக்கும்.
பாக்கவேண்டாம் இந்தப் படத்தை...
அப்படீன்னு சொன்னா மட்டும் பார்க்காம இருக்க போறீங்களா என்ன?
இது மார்வலின் கோடைத்திருவிழா.
அன்பன்
மது
இப் படத்தைப் போனவாரமே விஜய் தொலைக்காட்சி(எச்டி)யில் போட்டதும் நான் பார்த்து மிரண்டுபோனேன் மது!
ReplyDeleteஎனக்கென்னவோ, தம் நிலத்தை ஆக்கிரமிக்கும் “நாகரிக“ மனிதர்களை எதிர்த்து ஆதிவாசிகள் நடத்தும் போர்கள்தான் நினைவுக்கு வந்தது.
இப்படி ஒரு ஆங்கில அனிமேஷன் படம் முன்பும் வந்ததில்ல..!
மீண்டும் ஒரு பகிர்வு - இது நம் திராவிட-ஆரியப் போராட்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் கதையாகவும் தோன்றுகிறது
ஸ்டான்லி என்கிற கதாசிரியர் படைப்புகள். அவரது மூலத்தை அவர் கிரேக்க புராணங்களில் இருந்தும், இந்திய கதைகளில் இருந்தும் எடுதுக்கொண்டு அவற்றை எதிர்காலத் தொழில்நுட்பத்தோடு பொருத்தி புதிய உலகை உருவாக்கி பல ரசிகர்களை உருவாக்கிவிட்டார்.
Deleteஇது என்ன புதிய வலைவடிவமைப்பா?!?!
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு ஆனா... பக்கப் பட்டை விவரங்கள் எங்கே?
கண்டுபிடிங்க பார்க்கலாம்
Deleteமேலே உள்ள மூன்று கோடு பட்டனை அழுத்தினால் தெரியும்
வழக்கமாக உங்கள் மதிப்புரை திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும். அவ்வகையில் இம்மதிப்புரையும் உள்ளது.
ReplyDeleteதளத்தின் வடிவத்தை மாற்றிவிட்டீர்கள் போலுள்ளது.
இவ்வளவு விரைவான பின்னூட்டத்தை எதிர்பார்க்கவில்லை
Deleteவருகைக்கு நன்றி அய்யா
சிறந்த திரைக் கண்ணோட்டம்
ReplyDeleteவழக்கம் போல உங்கள் விமர்சனம். சென்ற வாரம் தான் நாங்கள் பார்த்தோம். படம் ஓகே தான். அவ்வளவாகக் கவரவில்லை.
ReplyDeleteதுளசிதரன்