அலாதின் 2019
இது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு திரைப்பிரிவு வகை. அது என்ன என்பதற்கு முன்னால்..
டிஸ்னியிலிருந்து ஒரு படம் என்றால் அது முழுக் குடும்பமும் பார்க்கிற படமாக இருக்கும், குழந்தைகள் கொண்டாடும் படமாக இருக்கும் என்பார்கள்.
அதை நூறு சதம் நிருபித்திருக்கிறது படம். Meiyazhakan Thirumurugan அண்ணே கை ரிட்சி படம்னே. அசத்துவான் என்று சொல்லியிருந்தார்.
இண்டிபெண்டென்ஸ் டேயில் ஒரு கோபக்கார கருப்பு இளம் பைலட்டாக வில் ஸ்மித் மனசுக்கு அவ்வளவு நெருக்கமானான். குறிப்பாக துரத்தி வந்த வேற்றுக்கிரக விமானத்தினுள்ளேயிருந்து வரும் அச்சமூட்டும் விலங்கை ஜஸ்ட் லைக்தட் ஒரு சுருட்டை வாயில் வைத்துக் கொண்டு மொகரையில் குத்தும் சீன் மாஸ்.
அதே போல பாட்பாய்ஸ் அதகளம் என வில் ஸ்மித் ஒரு ஹாலிவுட் விஸ்வரூபன்.
ஒரு மெகா ஸ்டார் ஒரு குழந்தைகள் கதையில், விளக்கு பூதமாக நடிக்க இயலுமா?
மனுஷன் வாழ்ந்துட்டான்!
வில்ஸ்மித் திரைவாழ்வில் இது ஒரு முக்கியமான படம். நிறைய விசயங்கள் இருக்கு. குழந்தைகள் முதல் முதலில் பார்த்து ரசித்து கொண்டாடும் பொழுது, அவர்களுக்கு இருபது வயது ஆகும் வரை வில் படங்களை தேடித்தேடி பார்ப்பார்கள் இல்லையா? ஆக, இன்னுமும் இருபது ஆண்டுகளுக்கு வில் ஸ்மித் தன்னுடைய இருப்பை உறுதி செய்திருக்கிறார்.
அதே போல அலாதீனாக வரும் மேனா மசூத் செய்யும் ஸ்டன்ட்கள், குறிப்பாக முதுகை சுவற்றில் வைத்து சுழன்று இறங்கும் காட்சி, சந்துகளுக்குள் ஓடித் திரிவது, அத்துணை பெரிய ஊரில் யாருக்கும் தெரியாமல் தனக்கு ஒரு இடிந்துபோன கோபுரத்தை வைத்திருப்பது எல்லாம் ஜோர்.
வில் ஸ்மித் படமா அல்லது நயோமி ஸ்காட் படமா என்று கேட்டால் அனேகமாக எல்லோரும் நயோமிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஒரு அரசின் பெண் வாரிசாக எவனாவது ஒரு டம்மியைக் கட்டிக்கொண்டு அவன் ஆள இவள் பார்க்கும் நிலை. இளவரசி ஜாஸ்மின் இதை மாற்ற விரும்புகிறாள்.
இன்னொரு விசயம் நயோமியின் மேக் அப், அப்படியே அவரை ஒரு இந்திய நடிகை போல காட்டுகிறது. இவ்வளவு அழகான முகத்தை எப்படி இவ்வளவு நாள் விட்டுவைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை.
இதற்கு இடையூறாக ஒரு பேராசைக்கார மந்திரி, அவன் ஒரு முன்னாள் திருடன் என்று வெகு எளிதான கதை போக்கு.
இதில் நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவென்றால் இது ஒரு மியூசிகல், கதையின் போக்கே இசைபாடல்களோடு நகர்கிறது.
சத்தியமாக இதை நான் எதிர்பார்க்கவில்லை!
இதற்கு முன்னால் லெஸ் மிஸரபிள்ஸ், ப்ரோசன் என நான் ரசித்துப் பார்த்த மியூசிக்கல்கள் இருந்தாலும் இது மியூசிகல்களின் லிஸ்டில் டாப்க்கு எகிறிவிட்டது.
பாடல்களுக்காவே இந்தப்படம் கொண்டாடப்படலாம்.
ஒவ்வையார், சந்திரலேகா திரைப்பாடல் பிரமாண்டங்களை ரசித்த மூத்த தலைமுறைக்கு விசயம் தெரிந்தால் முண்டியடித்துகொண்டு தியேட்டருக்கு வரலாம்.
பாடல்கள், அவற்றின் பிரமாண்டம், எஸ்.எஸ். வாசனை மட்டுமல்ல, (ஔவையார், சந்திரலேகா படங்களின் தயாரிப்பாளர்), தேவர் பிலிம்ஸ்சையும் நினைவூட்டியது.
நெருப்புக் கோழிகள், யானைகள், ஒட்டகங்கள், புலி, கிளி என அத்துணை விலங்கு நடிகர்கள். தேவர் பிலிம்ஸ்சுக்கு பிறகு விலங்குகளை பயன்படுத்தியது அனேகமாக இராம.நாராயனாக இருக்கலாம்.
எதைச் செய்தாலும் அவனுகள மாறி செய்ய முடியுமா என்கிற கேள்வியை ஆங்கிலப் படங்கள் ஏற்படுத்தும்.
எல்லாம் கணிப்பொறி மாய மந்திரம்தான் என்றாலும், இந்தப் படமும் அதே கேள்வியை இன்னொருமுறை எழுப்பியிருக்கிறது. பாடல்கள், நடன அசைவுகள், ஸ்டன்ட் என குழந்தைகளுக்கான வேறே லெவல் படம்.
வெளியில் தெரியாத திரைக்கு பின்னிருக்கும் முகங்களில் முக்கியமான முகம் ஆலன் ஸ்டீவர்ட், ஒளிப்பதிவளார், இன்னொருவர் ஆலன் மென்கன், இசையமைப்பாளர்.
இரண்டு மணிநேரம் உங்கள் மனஅழுத்ததை குறைத்து, மந்திர உலகிற்குள் உங்களை அழைத்து செய்யும் வித்தையை டிஸ்னியின் இந்த படம் செய்யும்.
டோன்ட் மிஸ் இட்.
அலாவுதீனின் புதிய வடிவினைப் பற்றிய பதிவு அருமை. இவ்வாறான கதைகள் காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன.
ReplyDeleteநானும் சின்னக் குழந்தைதானே...கண்டிப்பா பார்த்தே ஆகணும்னு உங்க விமர்சனம் சொல்லிவிட்டதே...
ReplyDeleteகீதா
வில்ஸ்மித் நடிப்பு மிகவும் பிடிக்கும்..
ReplyDeleteகீதா