ஜான் விக் 3

John Wick 
Amazon New LED TV Brand கியானூ ரீவிஸ் உலகளவில்  தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். ஸ்பீட், செயின் ரியாக்சன், மாட்ரிக்ஸ் என்று இவர் நடித்த படங்கள் திரையுலகில் தனித்த முத்திரையை பதித்தவை.



ஸ்பீட் படத்தில் பபுள் கம்மை மென்றுகொண்டே இவர் பாம் ஸ்க்வாடில் செய்த அதகளம் இன்னும் உங்களுக்கு நினைவில் இருக்கும். ஸ்பீட் இரண்டாம் பாகத்தில் அம்மணி சாண்ட்ரா புல்லக் கியானுவோடு நடிக்க முடியாது என்று சொல்லவே ஜேசன் பாட்ரிக்க்கு அடித்தது யோகம். ஆனால் என்ன படம் ஊத்திகிச்சு.

கியானூ ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, சக மனிதர்களின் துன்பம் குறித்து அக்கறையுள்ளவர். மாட்ரிக்ஸ் படத்தின் ஊதியத்தில் பெரும் பகுதியை படத்தின் துணை நடிகர்களுக்கு வழங்கியவர், தொடர்ந்து சமூக நலச் செயல்களில் ஈடுபட்டுவருபவர்.

ஆடம்பரமாக வாழ வழியிருந்தும் மிக எளிமையாக வாழ்பவர்.

மாட்ரிக்ஸ்சுக்கு பிறகு தலைக்கு ஒரு பிரேக் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது வந்தப் படம்தான் ஜான் விக்.

உலகெங்கும் பரவியிருக்கும் ஒரு நிழல் உலக கொலையாளிகளின் கதைதான் திரைப்படம்.

சாலைகளில் பிச்சைஎடுக்கும் போலி பிச்சைக்காரர்கள் முதல், கஸ்டம் மேட் கார்களை வைத்திருக்கும் பலதரப்பட்ட கொலையாளிகள். இவர்களில் ஒருவன் ஹை கிளாஸ் அசாஸின் ஜான்.

முதல் பாகம் இவனது மனைவி இவனுக்கு ஆசையாக கொடுத்த நாய்க்குட்டியை கொன்றுபோடும் கிறுக்கு இளைஞர்களை வேட்டையாடும் கதை.

அந்த கிறுக்கு இளைஞன் ஒரு ரஷ்ய அன்டர்வேர்ல்ட் டானின் மகன்.

ரொம்ப தெனாவெட்டா யாப்பா யாருப்பா அவன் ஒரு காரை எடுத்தேன், நாயைக் கொன்றேன் என்கிறான்.

டான் அப்பா நிதானமாக தன்னுடைய முழுக்கை சட்டையை மடித்துக்கொண்டு, தன் மகனின் மூஞ்சியில் திரும்ப திரும்ப குத்தி சொல்கிறான்.

அவன் யாரோ இல்லடா, ஒரு நாள் நைட் அவன் எனக்காக கொன்னு போட்ட மனிதர்களின் எலும்புக்கூட்டின் மேலேதான் இன்று நாம்ம சாம்ராஜ்யம் இருக்கு என்கிறான்.

ஜான் விக் குறித்து இணையத்தில் ஒரு மீம் சுற்றுகிறது, சமீபத்தில் வெளிவந்த அவன்ஜர்  திரைப்பட வில்லன் தானோசைக் கொல்ல ரொம்ப எளிமையான வழி ஒன்று இருக்கு. அது ஜானின்ன் நாய்க் குட்டியை தானோஸ்தான் கொன்றான் என்று சொல்லிவிட்டால் அவனை ஜான் போட்டுத்தள்ளி விடுவான்.

இரண்டு படத்தையும் பார்த்தவர்கள் இந்நேரம் விழுந்து புரண்டு சிரிப்பீர்கள்.

ஜான் விக் அதீத என்டியூரன்ஸ் உள்ள, ஸ்மார்ட்டான ஒரு கொலையாளி. காரை விட்டு மோதுங்கள், தூக்கி எறியப்பட்டாலும் எழுந்து நின்று இரண்டு பேரை அசால்ட்டாக போடக் கூடிய கதாபாத்திரம் அது. செம ஸ்டாமினா உள்ள கேரக்டர்.

He is simply unkillable!

இவ்வளவு விசயம் தெரிந்திருந்தாலும் அந்த அப்பன் தன் மகனை காப்பாற்ற முனைகிறான், முடிவுதான் உங்களுக்கே தெரியுமே.

ஜான் விக் சாப்டர் 2

தானுண்டு தன் வேலையுண்டு என்று நிழல் உலகில் இருந்து விலகி வாழ்கிறான் ஜான். திடுமென அவன் வீட்டிற்கு வரும் சண்டினோ தன் சொந்த அக்கா கியானவை கொல்லவேண்டும் என்கிறான்.

இதற்காக ஒரு மெடாலியன் ஒன்றை தருகிறான். அது ஒரு சின்ன டாலர்.
மார்க்கர்- மெடாலியன்
ஒரு சிறிய நாணயம் அளவில் இருக்கும் அதில் இருக்கும் மேற்புறத்தைதிறந்தால் உள்ளே ரத்த கைரேகை வைக்க இடம் இருக்கும். இந்த மார்க்கரை இரத்த கைரேகையோடு ஒருவரிடம் கொடுத்தால் அவர் அழைக்கும் பொழுது, அவர் சொல்லும் வேலையைச் செய்யவேண்டும். இது அவர்களின் நிழல் உலக விதி. மீறினால் தண்டனை உண்டு. 

ஜான் தான் ஓய்வு பெற்றுவிட்டதால்  களத்துக்கு வரமாட்டேன் என்கிறான், வெறுப்பில் சான்டினோ ஜானின் வீட்டை தரைமட்டமாக்கிவிடுகிறான். 

வேறு வழியே இல்லாமல் ஜான் கியானாவைக் கொல்லக் கிளம்புகிறான். ஆனால் வேலை முடிந்தவுடன் சான்டினோ டைவ் அடித்து என் அக்காவை ஜான் கொன்னுட்டான் அவனை கொள்பவர்களுக்கு ஏழு மில்லியன் என்று சொல்லி ஜானின் வாழ்க்கையை நரகமாக்குகிறான். 

உலகில் இருக்கும் அத்துணை கொலையாளிகளும் இப்போ ஜான் பின்னே. வெறியேறும் ஜான் சான்டினோவை துரத்த அவன் ஹோட்டல் காண்டிநெண்டல் சென்றுவிடுகிறான். 

பிரச்னை என்னவென்றால் அது நிழல் உலகின் சேப் ஹெவன். அங்கே அபயம் போகலாமே ஒழிய, வேறு எதற்கும் அனுமதியில்லை. இதுவும் நிழல் உலக விதி. 

உள்ளே ஓடிப்போகும் சான்டினோ ஜானிடம் நக்கலாக சொல்கிறான் இனி நான் ஏன் இந்த ஹோட்டலைவிட்டு வெளியே வரப்போறேன் என்று சொல்லவும், அவன் தலையில் வெடிக்கிறது ஜானின் துப்பாக்கி. 

ஜான் விக் சாப்டர் 3 பாரபலம் 

பாரபலம் என்கிற வார்த்தைக்கு போருக்கு தயாராகு என்று அர்த்தம். இந்த முழுப் படமும் அடுத்த பாகத்தில் இன்னும் ருத்திரமாய் ஆடப்போகும் ஜானின் ஆட்டங்களுக்கு ஒரு முன்னோட்டம். 

CQC க்ளோஸ் குவார்டர் காம்பாட் சண்டைக்காட்சிகளில் புதிய உச்சங்களை தொட்ட படத்தொடர், இந்தப் பாகத்திலும் அதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

சொல்லப்போனால் ஜான் விக் முதல் பாகத்திற்கு பின்னர் வந்த பெப்பர்மின்ட், ராபின் ஹூட் போன்ற படங்களில் ஜான் விக் சண்டைக் காட்சிகளின் தழுவல் இருக்கும். 

அந்த அளவிற்கு ஒரு கிரியேட்டிவ் இன்ஸ்பிரேஷன் இந்த படம். 

புல்லட் டைம் என்பதை ரசித்து விளையாடிய மாக்ஸ் பைன் கேமர்கள், பர்ஸ்ட் பர்சன் ஷூட்டர் கேம் ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை கொண்டாயிருப்பார்கள். 

நாற்பது மிலியன் செலவில் நூற்றி நாற்பத்தி ஒரு மிலியன் வசூல் செய்தது போன பாகம். 

இந்த பாகத்தில் எதிர்பாரா வரவு ஹாலி பேரி, எக்சிகியூடிவ் டிசிசன், ஸ்வார்ட் பிஷ், எக்ஸ் மென் என்று அம்மணி முத்திரை பதித்த வகையில் இந்தப் படமும் சேர்ந்துவிட்டது. 

ஹாலியும் அவரது நாய்களும் படத்தில் ரத்தம் தெரிக்கும் சண்டைக்காட்சிகளில் அசாத்தியிருக்கின்றனர். 

ஹாய் டேபிளின் தலைவர் எங்கோ காசாபிளாங்கா பாலைவனத்தில் நடுவே இருப்பதை, அவனது ராஜ்யத்தின் பிரமாண்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது படம். 

அடுத்த பாகம் இதைவிட அசத்தலாகத்தான் இருக்கும். 

காத்திருப்போம்
அன்பன் 
மது. 

Comments

  1. speed பார்த்திருக்கிறேன் - இரண்டு பாகமும்.

    இந்தப் படம் அமேசானில் கிடைத்தால் பார்க்கலாம்! அங்கு இப்போது சில படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete

Post a Comment

வருக வருக