வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாத பரிசு


ஒரு காலத்தில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு சின்னத் திமிர் இருக்கும்.



இப்போது கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணியும் கிடையாது...(பாதிபேர் சர்வீசில் போய்ச்சேர்ந்துவிடுகிறார்கள், தேர்தல் பணியில் உயிரிழந்தோர் நினைவில் இருக்கிறார்களா என்ன ?)

அப்பா அப்படி ஓய்வு பெற்றபொழுது ஒரு விசயத்தை செய்யத்துவங்கினார்.

அவர் சில  பரிசுகளை  வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

வீட்டில் கிட்டத்தட்ட இரநூறு பரிசுகள் கூட இருக்கும்.

ஒரு சுபயோக சுபமுகூர்த்த நாளில் அப்பாவின் நண்பர் ஒருவர் தயங்கித் தயங்கி வீட்டிற்குள் வந்தார்.

கையில் அப்பா அவருக்கு கொடுத்த பரிசு.

என்ன சார்?

நாங்க இதையெல்லாம் எங்க வீட்டில் வச்சுக்குற பழக்கம் இல்லை சார் அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் என்றார்.

அப்பாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே!

அவர் அப்பாவின் பரிசை மேசை மீது வைத்துவிட்டு வரேன் சார் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அப்பாவிற்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஆமா, அப்படி என்ன பொருளை வீட்டில் வைத்துக்கொள்வது இல்லை என்று சொன்னார் அந்த பெரிய மனிதர் என்று கேட்கிறீர்களா?

வேறொன்றும் இல்லை

பாரதியார் கவிதைகள்.



Comments

  1. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்ல சிறப்பு நிகழ்வுகளில் நூல்களை அன்பளிப்பாகத் தரும்போது பலர் இதற்கு பதிலாக பாத்திரமாகவோ, பயன்படும் பொருளாகவோ தந்தால் நன்றாக இருக்குமே என்று அங்காலாய்த்துக்கொண்டிருப்பவர்களை இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை. ஒருவர் நூலை அன்பளிப்பாக பெற்றபொழுது ஆற்றமையாக ஒரு லுக்விட்டார். அதில் இருந்து நூற்களை பரிசாக கொடுப்பதை யோசித்து, செலக்ட் செய்துதான் கொடுக்க ஆரம்பித்தேன்.

      Delete
  2. ஹா... ஹா... ஹா...

    அவர் எந்தப் புத்தகம் கொடுத்திருந்தாலும் அப்படிதான் சொல்லி இருப்பார்.

    என் நண்பர் ஒருவர் கூட புத்தகம் படிக்கும் அப்பழக்கம் அறவே இல்லாதவர்!

    ReplyDelete
    Replies
    1. கல்வி முறை ...வேறென்ன ?

      Delete
  3. அவர் ரசனை அம்புட்டுதான்ன்

    ReplyDelete
    Replies
    1. அப்படி எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்

      Delete
  4. எனக்குப் புதிய அனுபவம்
    உள்ளத்தில் ஒரு வித தாக்கம்
    வாசிப்புத் தேவையை உணர்த்த
    வேறுவழி தேடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. தேடல்கள் விடைகளைத்தரும்

      Delete

Post a Comment

வருக வருக