அருள்மொழிவர்மன் மூணாப்பு (மேலே ஒரு கோடு)






இரண்டு ஆசிரியர்கள் பேசியதில்

சார் மூன்றாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது ரொம்ப ஆரோக்கியமான விசயம்தானே, எதைச் சொன்னாலும் எதிர்ப்போம் என்றால் எப்படி சார்? இந்தப் பசங்களபாருங்க ஆனா ஆவன்னா தெரியாம பத்தாம் வகுப்புக்கு வந்துர்றாங்க. நாம எவ்வளோ கஷ்டப்படுறோம் இவங்கள வச்சுக்கிட்டு. என்னைப் பொறுத்தவரை இது அவசியமான திட்டம். பத்தாம் வகுப்பு எடுக்கிற வாத்தியாருக்கு சிரமம் பாதியா குறைஞ்சுரும்.
சார் உண்மைதான் ...ஆனா பாதியா குறையாது முழுசா குறைஞ்சிரும்..
எப்படி சார்...
ஒண்ணுமில்ல மூன்றாம் வகுப்பில் பெயில் ஆனால் இருபது பேருக்கு நாலு பேர் பெயிலாவான். அவன் திருப்பி ஐந்தாம் வகுப்பு வரும் பொழுது இன்னொரு நாலு பேர் பெயிலாவான். அப்படி தப்பிச்சு எட்டாம் வகுப்பு வரும் பொழுது இன்னும் ஒரு மூணு பேரை காலி செய்வோம். ஆக ஒன்னாம் வகுப்பில் இருபது பேரா இருந்த வகுப்பில் ஒன்பதாம் வகுப்பில் ஒன்பது பேர்மட்டும் இருப்பான்.
அவ்வளோ பெரும் படிக்கத் தெரிந்தவனா இருப்பானே சார். அது போதாதா?
ரொம்ப சரி, ஆக இந்தக் கணக்குப்படி பார்த்தாலும் அறுபத்தி ஐந்து சத மாணவர்களை வடிகட்டிவிடுவோம்.

பத்தாம் வகுப்பில் இப்போது இருக்கும் அதீத மாணவர் எண்ணிக்கை சரேல் என்று குறையும் இல்லையா?

ஆமா, மந்தை மந்தையாக வைத்துக் கொண்டு என்ன செய்வது. படிக்கிறவன் படிச்சா போதுமே. நான் சொன்னதுதானே சரி. நம்ம வேலை பாதியாக குறைந்துவிடும்.

இல்லை முழுசா குறைஞ்சிரும். எப்படின்னு கேளுங்க இப்போ இருக்கிற மாணவர் எண்ணிக்கைக்கே நான்காயிரம் ஆசிரியர் பணியிடங்கள் உபரி என்று சொல்கிறது அரசாங்கம். பத்தாம் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் கிட்டத்தட்ட ஐம்பது சத ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக இருப்பார்கள். ஏன் அதற்கு மேலே கூட உபரியாக இருக்க வாய்ப்பு இருக்கு.

ஐயோ
அப்புறம் நம்ம பள்ளியில் யாரு ஸ்டேசன் ஜூனியர்.
நான்தான் சார்.
பாரின் சர்வீஸ் தமிழ்ல அயற் பணி என்று கேள்விப் பட்டிருக்கீங்களா?
அப்படீன்னா, வேற துறையில உங்களுக்கு ஒரே பணிஇடம் ஒதுக்கப்படும். அப்புறம் இந்த பத்தாம் வகுப்பு மாணவர்களைக் கட்டிக்கொண்டு அழ வேண்டாம். உங்க சிரமம் முழுசா குறைஞ்சிரும்.

சார், ரொம்ப ஆபத்தான திட்டமா இருக்கே சார்.

போன வருஷம் நம்மள்ட்ட பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிட்டு ராணிஸ் போனாளே வெள்ளையம்மா இப்போ ஏன் பள்ளிக்கூடம் போகலைன்னு தெரியுமா?

அடப்பாவமே, பள்ளிக்கூடம் போவலையா எனக்கு தெரியல சார்.

ப்ளஸ் ஒன்னில் பெயில். பிரண்ட்ஸ் கேலி பண்றாங்கன்னு சொல்லி வீட்டில் இருந்துகிட்டா.
அடப்பாவமே.

சரி இப்படி பெயிலாகிற பெரும் கூட்டம் எங்க போகும்.
எங்க சார் போகும்?

பான் பராக் போட்டுகிட்டு வேறு மாநிலத்துக்கு தோசை இட்டலி விக்கப்போகும்.
அப்படியும் இல்லை என்றால் இருக்கு மதவாதக் கட்சிகள். அதில் உறுப்பினராகி நினைத்துப் பார்க்க முடியாத வன்முறையில் இறங்கும். கோமியம் விற்கும்,

ஆமால்ல ....

யோசிங்க சார். முதல் விசயம் படிக்கிற பயலுக்கு வாத்தியார் தேவையே இல்லை. நம்ம வாங்குற சம்பளம் படிக்க சிரமப் படும் பசங்களுக்கு சொல்லித்தரத்தான். இனிமேலும் எட்டாவதுல பெயில் போடுங்க, ஒன்பதாம் வகுப்பில் பெயில் போடுங்கன்னு பினாத்தாதீங்க.

சரிங்க சார்.

Comments

  1. இந்தப் பசங்களபாருங்க ஆனா ஆவன்னா தெரியாம பத்தாம் வகுப்புக்கு வந்துர்றாங்க. //
    ஃபெயில் பசங்க அப்புறம் எங்க போகும்? பான்பராக் போடும்....இட்லி தோசை விக்க போயிடும்//

    இதுதான் நடக்குது கஸ்தூரி. ...இந்தக் கல்வி பற்றி பேச் நிறைய இருக்கிறது. அடித்தட்டு குழந்தைகள் அடிப்படையிலேயே முதல் வகுப்பிலிருந்தே தனியாகக் கவனிக்கப்பட்டு அ ஆ னா எழுதத் தெரிந்துவிட வேண்டும் அப்போதுதான் எந்தக் கல்விக்கொள்கை வந்தாலும் நீந்தத் தெரியும்...பள்ளிச் சேர்க்கை மட்டும் முக்கியமல்ல...அக்குழந்தைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே இங்கு முக்கியம்

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக