தேர்வுகள் வாழ்க...இளம் அலுவலர் ஒருவர்


புதுகை தொடக்கப்பள்ளித் துறையின் பிரம்மாக்கள் மூவர் வட்டார கல்வி அலுவர்கள் திரு.செங்குட்டுவன், திரு.மகேஸ்வரன் மற்றும் திரு கருணாகரன்.


திரு.செங்குட்டுவன் அவர்களைப் பொறுத்தவரை தொடக்கப்பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர் என பல்லாண்டு பணி அனுபவத்திற்கு பிறகு வட்டாரக் கல்வி அலுவலர் ஆனவர்.

முதிர்ந்த அனுபவமும், பக்குவமும் கொண்டு புதுகை தொடக்கக் கல்வியை வழிநடத்துபவர்.

ஒரு அலுவலர் என்பதைத்தாண்டி ஆச்சர்யமூட்டும் பெரும் நட்பு வட்டம் இவரது தனித்த அடையாளம். எல்லோருக்கும்தான் நண்பர்கள் இருக்கிறார்கள் அதே போல இவருக்கு எல்லா தரப்பிலும் நண்பர்கள் இருந்தாலும் இவர் நட்பு வட்டம் எங்கே வேறுபடுகிறது என்றால் அவர்களில் பலர் ஹை ப்ரோபைல் வி.ஐ.பிகள்!

இன்னொரு வட்டாரக் கல்வி அலுவலர் அய்யா மகேஸ்வரன் அவர்கள் விதிமுறைகளின் வல்லுநர். பல்வேறு உயர் அலுவலர்களுக்கு கூட தண்ணீர் காட்டிய தனியார் பள்ளிகள் இவர் வருகைக்கு பின்னர் நெறிப்படுத்தப்பட்டது சமீபத்திய நிகழ்வு.

இப்படி இரு பெரும் அனுபவம்வாய்ந்த ஆளுமைகளோடு தொடர்பே இல்லாமல் ஒரு இளைஞர் பணியாற்ற முடியுமா?

இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது நேரடி வட்டாரக் கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு.

திரு.கருணாகரன் மாநில அளவில் வழங்கப்பட்ட ஒற்றை வாய்ப்பை போட்டித்தேர்வின் மூலம் வென்றவர்.

பொதுவாக ஆசிரியர்களை மேற்பார்வையிடும், நிர்வகிக்கும் பதவிகளுக்கு பணி உயர்வின் மூலம் மட்டுமே வரவேண்டும் என்கிற கருத்து உண்டு.

நடைமுறைச் சிக்கல்களை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்பதற்காக இந்த கருத்து முன்மொழியப்பட்டது.

பத்து ஆண்டுகள் பணியாற்றிய ஒரு ஆசிரியரை நேற்று பணி நியமனம் செய்யப்பட்ட ஒரு உயர் அலுவலர் நிர்வகிப்பதில் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் திரு.கருணாகரன் அவர்களின் விசயத்தில் அப்படி எந்த விமர்சனமும் இல்லை. வட்டாரத்தில் அவருக்கு ஒப்படைக்கப்பட்ட பள்ளிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதும், புதிய கற்றல் உத்திகளை நோக்கி ஆசிரியர்களை நகர்த்துவதும், அவர்களிடம் இருக்கும் கற்றல் வளங்களை வட்டாரம் முழுதும் வாட்சப்பில் பகிர்வதுமாக பல்வேறு நேர்மறைப் பணிகளை செய்துவருகிறார்.

சமீபத்தில்தான் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சகோதரர் பழனிச்செல்வம் அவர்களின் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்திருந்தார். யாரோ ஆசிரியர் என்றுதான் நினைத்தேன் ...அண்ணே இது எங்க பி.இ.ஒ என்றார் ஷாக்காகி கேட்டேன்

ஏங்க நீங்கதான் வட்டாரத்தை தெறிக்க விடுபவரா?

சிரித்தார்.

ஆசிரியர் கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகள் என்கிற நூலை பரிசாக சகோதரருக்கு வழங்க மனசுக்குள் இன்னும் மரியதைக்குரியவரானார்.

Comments

  1. பத்து ஆண்டுகள் பணியாற்றிய ஒரு ஆசிரியரை நேற்று பணி நியமனம் செய்யப்பட்ட ஒரு உயர் அலுவலர் நிர்வகிப்பதில் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். //

    ஆமாம் கண்டிப்பாக ஆனால் திரு கருணாகரன் அவர்கள் அதையும் மீறி நேர்மறை பணிகளைச் செய்வது மிக மிக மகிழ்வான விஷயம்..

    அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக